search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித் - அம்பானி சங்கர்
    X
    அஜித் - அம்பானி சங்கர்

    அஜித்துடன் நடிக்கிறேனா... அம்பானி சங்கர் விளக்கம்

    வலிமை படத்தை தொடர்ந்து AK 61 படத்தில் நடித்து வரும் அஜித்துடன் அம்பானி சங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
    வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்சமயம் AK 61 என்று தலைப்பு வைத்து அழைத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்துடன் நடிகர் அம்பானி சங்கர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

    இதுகுறித்து அம்பானி சங்கர் கூறும்போது, “இந்த போட்டோவை பகிர்ந்ததும் நான் அவரோட படத்தில் நடிக்கறேன்னு நினைச்சு, வாழ்த்துக்கள் குவிய ஆரம்பிச்சிடுச்சு. அஜித் சார் படத்துல நான் நடிக்கவில்லை. அவரோட 'ஜி' படத்துல நடிச்சிருந்தேன். அதன்பிறகு கிட்டத்தட்ட 18 வருஷத்துக்கு பிறகு அவரை சந்திக்கற வாய்ப்பு அமைந்தது.

    அஜித் - அம்பானி சங்கர்

    இந்தப் படம் சென்னையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தான் எடுத்தேன். சார் வீட்டு பங்ஷன் அங்கே நடந்தது. நான் வேற ஒரு பங்ஷனுக்காக அந்த ஹோட்டலுக்கு சென்ற போதுதான் சாரை சந்தித்தேன். 

    என்னை பார்த்ததும், 'எப்படி இருக்கீங்க சங்கர்?"னு நலம் விசாரிச்சார். அதே அன்போட சார் பேசினார். சந்தோஷமான தருணமாகிவிட்டது'' என்றார்.
    Next Story
    ×