என் மலர்

  சினிமா செய்திகள்

  ஆண்ட்ரியா
  X
  ஆண்ட்ரியா

  கவனம் ஈர்க்கும் ஆண்ட்ரியா படத்தின் டிரைலர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கதாநாயகி, பாடகி என பண்முகத்தன்மை கொண்ட ஆண்ட்ரியா நடித்துள்ள புதிய படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
  பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

  கா
  கா

  மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நாஞ்சில் இயக்கும் 'கா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் புகைப்பட கலைஞராக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், 'சூப்பர் டீலக்ஸ்' பட புகழ் நவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் இதனை தயாரித்துள்ளார். இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு தற்போது 'கா' படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


  Next Story
  ×