search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்.ஜே.சத்யா திருமணம்
    X
    என்.ஜே.சத்யா திருமணம்

    காஸ்டியூம் டிசைனர் திருமணத்தை நடத்தி வைத்த சசிகுமார்

    தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சசிகுமார், காஸ்டியூம் டிசைனர் சத்யா திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
    தெறி, பைரவா படங்களில் நடிகர் விஜய்-க்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர் என்.ஜே.சத்யா. இவர் தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா, ராஜா ராணி, போக்கிரி ராஜா, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

    இவர் சமீபத்தில் சினிமா பிரபலங்களான நடிகர்கள் சசிகுமார், நாசர், மனோபாலா, மன்சூர் அலிகான், சரவணன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரை வைத்து பல போட்டோஷூட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்தார். 

    மனைவியுடன் என்.ஜே.சத்யா
    மனைவியுடன் என்.ஜே.சத்யா

    இந்நிலையில், காஸ்டியூம் டிசைனர் என்.ஜே.சத்யாவுக்கும், கோகிலாவுக்கும் இன்று பொள்ளாச்சியில் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருமணத்தை நடிகர் சசிகுமார் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். என்.ஜே.சத்யாவுக்கும் கோகிலாவுக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்.
    Next Story
    ×