search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ்
    X
    தனுஷ்

    தனுஷ் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகிறது - உற்சாகத்தில் ரசிகர்கள்

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அப்ப்டத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.
    நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

    மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மாறன்
    மாறன்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நாளை (ஜனவரி 26, 2022) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலாக பொல்லாத உலகமென்ற பாடல் வெளியாக இருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருக்கிறார்கள். இந்தபாடலின் வரிகளை விவேக் எழுதியிருக்கிறார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


    Next Story
    ×