search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இஷான் - வரலட்சுமி
    X
    இஷான் - வரலட்சுமி

    இஷான் - வரலட்சுமி நடிக்கும் தத்வமசி

    இஷான், வரலட்சுமி சரத்குமார், ரமணா கோபிசெட்டி நடிப்பில் ஆர்ஈஎஸ் என்டர்டெயின்மென்ட் எல்எல்பி தயாரிக்கும் திரைப்படம் ‘தத்வமசி’.
    ரோக் திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ‘தத்வமசி’. இப்படத்தின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. “மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

    தத்வமசி படத்தின் போஸ்டர்
    தத்வமசி படத்தின் போஸ்டர்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் அகில இந்திய படமாகும். விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள தத்வமசி, அதன் புதிய கதை களத்தால் மக்களை பரவசப்படுத்தும். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட இருக்கிறது.
    Next Story
    ×