search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய்
    X
    விஜய்

    பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட்

    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

    விஜய்

    அடுத்த கட்ட படப்பிடிப்பை வரும் 1-ம் தேதி தொடங்குகின்றனர். அதைத்தொடர்ந்து 20-ம் தேதி டெல்லி செல்லும் படக்குழு, அங்கு முக்கிய காட்சியை 5 நாட்கள் படமாக்குகின்றனர். அதன்பின் சென்னை திரும்பும் படக்குழு அக்டோபர் 1ஆம் தேதி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×