search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    லோகேஷ் கனகராஜ்
    X
    லோகேஷ் கனகராஜ்

    லோகேஷ் கனகராஜின் அடுத்த பட அப்டேட்

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள இயக்குனர்கள்
    லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள இயக்குனர்கள்

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை பிரபல இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
    Next Story
    ×