என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சசிகுமாருக்கு ஜோடியாகும் கன்னட நடிகை - தமிழில் 10 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்
Byமாலை மலர்17 Aug 2021 6:21 AM GMT (Updated: 17 Aug 2021 6:21 AM GMT)
கழுகு பட இயக்குனர் சத்யசிவா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க கன்னட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.
சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா, உடன்பிறப்பு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள சசிகுமார், அடுத்ததாக கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ஹரிப்பிரியா
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஹரிப்பிரியா நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர், சத்யசிவா இயக்கும் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
Next Story
×