search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்
    X
    வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்

    கவுதம் மேனன் படத்துக்காக 15 கிலோ உடல் எடையை குறைத்த சிம்பு

    ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் இதனை மாற்றி ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டனர். போஸ்டரில் அழுக்கு லுங்கி, சட்டையுடன் சிம்பு மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அசந்து போனார்கள்.

    இந்நிலையில், இப்படத்துக்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆறு மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்து மெலிந்த தோற்றத்துக்கு மாறி உள்ளாராம் சிம்பு. 

    ராதிகா, சிம்பு
    ராதிகா, சிம்பு

    இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
    Next Story
    ×