என் மலர்

  சினிமா

  வசந்த பாலன், வனிதா
  X
  வசந்த பாலன், வனிதா

  வசந்தபாலன் படத்தில் வனிதா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குனர் வசந்தபாலன் தற்போது இயக்கி வரும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் நடிக்கிறார்.
  இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். 

  இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

  போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வனிதாவும், நடிகர் அர்ஜுன் சிதம்பரமும் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் அர்ஜுன் சிதம்பரம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
  Next Story
  ×