என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபல பாடலாசிரியர் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா
Byமாலை மலர்8 Aug 2021 12:48 PM GMT (Updated: 8 Aug 2021 12:48 PM GMT)
தமிழில் அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் பிரபுதேவா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கைவசம் யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா, பிளாஷ்பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உள்ளன.
இந்த நிலையில், நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும் கலையரசன், அர்ஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் பூஜையில் பா.விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர்
கணேசன் இசையமைக்கும் இப்படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை எம்.எஸ்.மூவீஸ் சார்பில் கே.முருகன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் பிரபுதேவா, பா.விஜய், மகிமா நம்பியார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story
×