என் மலர்

  சினிமா

  விஜய்
  X
  விஜய்

  விஜய் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நீக்கிய பிரபலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.
  கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66வது படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் அப்படத்தின் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் வரவில்லை.

  இயக்குனர் வம்சி நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக ஐதராபாத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், சங்கீதா, சோனு சூட், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, அல்லு அரவிந்த், மெஹர் ரமேஷ், அனில் ரவிப்புடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  விஜய்
  பாடகர் கிரிஷின் பதிவு

  வம்சி பைடிபள்ளிக்கு டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ், “எனது அபிமானத்திற்கு உரிய மனிதர், இயக்குனர்களில் ஒருவரான வம்சிக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள். சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள் நண்பரே. விஜய் அண்ணாவுடன் உங்களுடைய அடுத்த படத்திற்காக வாழ்த்துகள், காத்திருக்கிறோம்,” என டுவீட் செய்துள்ளார். அதன்பின் அந்த டுவீட்டை நீக்கி விட்டார். ஆனாலும், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்ட விஜய் ரசிகர்கள், விஜய் 66 படத்தின் அப்டேட் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.
  Next Story
  ×