என் மலர்

  சினிமா

  தனுஷ்
  X
  தனுஷ்

  ‘மாறன்’ ஆக அதிரடி காட்ட வரும் தனுஷ் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார், விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்கிறார்.
  நடிகர் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும். 

  மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

  மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
  மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  நடிகர் தனுஷ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு. அதன்படி இப்படத்திற்கு ‘மாறன்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. தனுஷின் மாஸான தோற்றம் அடங்கிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  Next Story
  ×