search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிலோமின் ராஜ் திருமணத்தில் லோகேஷ் எடுத்த செல்பி புகைப்படம்
    X
    பிலோமின் ராஜ் திருமணத்தில் லோகேஷ் எடுத்த செல்பி புகைப்படம்

    மாஸ்டர் பட பிரபலத்துக்கு திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய லோகேஷ்

    லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணியாற்றிய பிலோமின் ராஜுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் விறுவிறுப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ். இதையடுத்து விஷ்ணு விஷாலின் பிளாக் பஸ்டர் படமான ராட்சசனில் பணியாற்றினார். பின்னர் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் போன்ற படங்களுக்கும் இவரே எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார்.

    இந்நிலையில், எடிட்டர் பிலோமின் ராஜுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் தனது காதலி திவ்யா பிரதீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கும் பிலோமின் ராஜ் தான் எடிட்டராக பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×