search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷ்
    X
    தனுஷ்

    மைக்கேல் ஜாக்சனாக மாறிய தனுஷ் - வைரலாகும் புஜ்ஜி பாடல்

    தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள புஜ்ஜி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ரகிட ரகிட பாடல் பட்டி தொட்டியெங்கும் சூப்பர்ஹிட் ஆனது. 

    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் புஜ்ஜி என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அனிருத் இப்பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

    இப்பாடல் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்பாடலில் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளுக்கு தனுஷ் ஆடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
    Next Story
    ×