search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பார்த்திபன், விஜய் சேதுபதி
    X
    பார்த்திபன், விஜய் சேதுபதி

    இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம்? - பார்த்திபன் நையாண்டி

    நடிகர் விஜய் சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

    நேற்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் சில பிரத்யேக புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பார்த்திபன், "நானும் ரவுடிதான், நீயும் ரவுடிதான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு, "இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன?" என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×