search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு
    X

    கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு

    கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் கலைப் பணிகள் இன்னமும் முடிவடையாததால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

    22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். கமல் தற்போது தனது அரசியல் பணிகளுக்கு இடையே படத்துக்காக உடல் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

    படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலும், களரி, வர்மக்கலையை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    அப்பணிகள் முடிந்து, டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க, அரங்கு அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது. இதனை கலை இயக்குநர் முத்துராஜ் கவனித்து வந்தார். இந்த பணிகள் முடிவு பெறாத காரணத்தால் 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்துவிட்டார்கள்.

    மார்கழி மாதம் என்பதால் இப்போது தொடங்க வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2019-ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal

    Next Story
    ×