search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வாழ்நாள் உறுப்பினர் சந்தா செலுத்தி உள்ளேன்: டப்பிங் யூனியனில் இருந்து நீக்க முடியாது- சின்மயி
    X

    வாழ்நாள் உறுப்பினர் சந்தா செலுத்தி உள்ளேன்: டப்பிங் யூனியனில் இருந்து நீக்க முடியாது- சின்மயி

    நான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க முடியாது என்று சின்மயி தெரிவித்துள்ளார். #MeToo
    சென்னை:

    பிரபல பின்னணி பாடகி சின்மயி. இவர் ‘மீடூ’வில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சின்மயிக்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. சின்மயி படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார்.

    இதற்கிடையே டப்பிங் யூனியனில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அவர் உறுப்பினர் சந்தாவை 2 ஆண்டாக செலுத்த தவறியதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி சின்மயி கூறும்போது, டப்பிங் யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி தூண்டுதலின் பேரில்தான் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து தன்னை நீக்க முடியாது என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டப்பிங் யூனியனில் இருந்து என்னை அவர்கள் நீக்கம் செய்ய வேண்டுமென்றால் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அப்போதுதான் நான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால் இது அவர்களது சொந்த விதிமுறைபடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.



    நான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். அதற்கான வங்கி விவரங்கள் என்னிடம் உள்ளன. இதனால் சந்தா தொகை செலுத்தாததால் என்னை நீக்கியதாக கூறுவது தவறு. டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கியது செல்லாது. ‘மீடு’ விவகாரத்தில் பாலியல் புகார்களை நான் கூறியதால் ராதாரவி என்னை நீக்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×