என் மலர்

  சினிமா

  நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
  X

  நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு, இந்தி என பிரபலமான நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் வைத்து நடிகர் ஒருவர் அத்துமீறியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். #RadhikaApte
  பிரகாஷ்ராஜ் நடித்த தோணி படத்தின் மூலம் தமிழில் அறிமுமான ராதிகா ஆப்தே, ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

  நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார். அதில், தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்தேன். அந்த படத்தின் கதாநாயகனை அதற்கு முன்பு நான் பார்த்ததுகூட இல்லை. படப்பிடிப்பின் முதல் நாளே அந்த நடிகர் என்னிடம் சில்மிஷங்கள் செய்தார். எனது பாதங்களை வருடினார். இதனால் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன். செருப்பையும் காட்டினேன்” என்று கூறியிருந்தார்.

  இந்த நிலையில், புதிதாக மற்றொரு நடிகர் மீது ராதிகா ஆப்தே புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

  “எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினேன். எனது அறைக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் ஏறினேன்.  அதே லிப்டில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே லிப்டில் இருந்தோம். சேர்ந்து நடித்தாலும் அவரோடு நான் பேசியது இல்லை. அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார். உங்களுக்கு நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகரை பற்றி தயாரிப்பாளரிடம் புகார் செய்தேன். பிறகு அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte

  Next Story
  ×