என் மலர்

  சினிமா

  கடைசியா பிரபோசல் வந்து ரெண்டு வரு‌ஷமாச்சு - நிவேதா பெத்துராஜ்
  X

  கடைசியா பிரபோசல் வந்து ரெண்டு வரு‌ஷமாச்சு - நிவேதா பெத்துராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிக் டிக் டிக் படத்தை அடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், கடைசியா பிரபோசல் வந்த ரெண்டு வருஷமாச்சு என்று கூறியிருக்கிறார். #NivethaPethuraj
  ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம். டிக் டிக் டிக் படத்தில் நல்ல பெயர். கையில் வரிசையாக முன்னணி கதாநாயகர்களின் படங்கள் என்று பிசியாக இருக்கிறார் நிவேதா பெத்துராஜ். நடிகை மட்டும் அல்லாமல் அபுதாபியில் கடந்த வருடம் நடந்த அழகிப்போட்டியில் ‘மிஸ் இந்தியா யு.ஏ.இ’ வின்னர் கிரீடம்.. மனிதவளப் பிரிவில் பட்டதாரி... தற்காப்புக் கலைஞர்... பிட்னஸ் பயிற்சியாளர்.. ஓவியர்... என்று இவருக்கு பன்முகங்கள். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

  சினிமா தவிர என்ன பிடிக்கும்?
  ‘’வரையறது ரொம்பப் பிடிக்கும். விண்வெளி, விண்மீன்கள், வேற்றுகிரகங்கள் இதெல்லாம் எனக்கு கனவுல வரும். என்னோட கனவுகள் பெரும்பாலும் ஆறு மாசத்துலயோ, ஒரு வரு‌ஷத்துலயோ நிஜத்துல நடக்கும். அப்படியில்லைனா அதையெல்லாம் படத்துல பார்ப்பேன். அதையெல்லாம் எழுதி வச்சுக்கிட்டு வரைவேன்.’’

  காதல் விண்ணப்பங்கள்?
  ‘’அய்யோ.. அதை ஏன் கேட்கறீங்க? எட்டாவது படிக்கும்போதே எனக்கு முதல் பிரபோசல் வந்தது. ரோஜாப் பூக்கள் வச்சு, இங்கிலீஷ்ல ஏதேதோ எழுதின கார்டு கொடுத்தான் ஒரு பையன். செம கியூட்டா இருந்தது. அப்பல்லாம் பசங்கன்னாலே பயம். ஓடியே போயிட்டேன். அப்போ, எனக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியாது. என்ன எழுதியிருந்ததுனு கூடத் தெரியலை. இப்ப நினைச்சாகூட காமெடியா இருக்கு.  அதுக்கப்புறம் வெவ்வேறு காலகட்டங்கள்ல எக்கச்சக்கமான பிரபோசல். கடைசியா பிரபோசல் வந்து ரெண்டு வரு‌ஷமாச்சு. துபாய் பசங்க இந்த வி‌ஷயத்துல ரொம்ப மோசம். வெளில போறபோது, நம்மளைப் பார்ப்பாங்க. பிடிச்சிட்டா உடனே நம்பர் கேட்டு வாங்கிடுவாங்க. அல்லது அவங்க நம்பர் கொடுத்துடுவாங்க. என்கிட்டயும் அப்படி நிறைய பசங்க நம்பர் கேட்டிருக்காங்க. ஆனா பார்த்த உடனேயே இப்படிக் கேட்டா ஒரு பீலிங்கும் வராதே... யாருக்கும் நம்பர் கொடுத்ததில்லை. ஆனால் எனக்கு அப்படி ஒருத்தன்கிட்ட நம்பர் வாங்கணும்னு தோணியது, வாங்கியிருக்கேன். ஆனா வாங்கினதோட சரி... தூக்கிப் போட்டுட்டேன்.’’

  சினிமாவில் நெருங்கிய நண்பர்கள்?
  ‘’மூணு பேர் இருக்காங்க. நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே மூணு பேரையும் தெரியும். ரம்யா ஆனந்தி, ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துல ஒர்க் பண்ணிட்டு, இப்போ ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்டா இருக்காங்க. அடுத்து சத்யலட்சுமி. கண்ணதாசன் வீட்டு வாரிசு. பல் டாக்டர், கோ புரடியூசர். அப்புறம் மித்ரன் சரவணன். ‘பொன்னியின் செல்வன்’ பண்ணினபோதே அவரைத் தெரியும். இவங்க மூணு பேரும்தான் எனக்கு நெருக்கம்.”

  குடும்பம்?
  ‘’அப்பா பெத்துராஜ், இன்ஜினியர். அம்மா பவானி, ஹோம் மேக்கர். தம்பி நிஷாந்த், காலேஜ் முடிச்சிட்டு சி.எப்.ஏ பண்ணிட்டிருக்கான்.
  Next Story
  ×