search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அவர் படத்தில் நடித்தது வரம் - ஐஸ்வர்யா ராஜேஷ்
    X

    அவர் படத்தில் நடித்தது வரம் - ஐஸ்வர்யா ராஜேஷ்

    பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது அவர் படத்தில் நடித்தது வரம் என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh #CCV
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய் என்று 4 கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன்.

    ஜோதிகா என்னிடம் ’உங்களோட படங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன். தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் நன்றாக நடிப்பதாக பாராட்டினார். இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகும் போது மிகவும் பயந்தேன். மணிரத்னம் எப்படி படப்பிடிப்பில் இருப்பார் என்று பயம் இருந்தது. 



    அவரைப் பார்க்கும் போது எப்போதும் கண்டிப்பாக இருப்பது போலவே இருக்கும். அவர் எவ்வளவு கூலான நபர் என்று நடித்து முடித்த பிறகு தான் புரிந்தது. அவருடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. எந்த ஒரு இடத்திலும் கோபப்படவே இல்லை. கஷ்டமே இல்லாமல் வேலை வாங்கினார். அவர் படத்தில் நடித்தது வரம்’ என்று கூறி இருக்கிறார்.
    Next Story
    ×