search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அம்மா, அப்பாவிடம் என்னை தத்து எடுத்தீர்களா என்று கேட்டேன் - சாய் பல்லவி
    X

    அம்மா, அப்பாவிடம் என்னை தத்து எடுத்தீர்களா என்று கேட்டேன் - சாய் பல்லவி

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான சாய் பல்லவி பேசும் போது, படத்தை பார்த்துவிட்டு அப்பா, அம்மாவிடம் என்னை தத்து எடுத்துதான் வளர்த்தீர்களா? என்று கேட்டேன் என்று கூறியிருக்கிறார். #SaiPallavi
    சாய் பல்லவி, பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். மணிரத்னம், கவுதம்மேனன், விக்ரம், சிம்பு என்று தேடி வந்த பெரிய படங்களுக்கு எல்லாம் நோ சொல்லிவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஜார்ஜியாவுக்கு சென்றவர், இப்போது டாக்டராகி திரும்பி தமிழுக்கும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். எண்ட்ரி கொடுத்த வேகத்திலேயே சூர்யா, தனுஷ் என்று இரண்டு பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து,

    பெரிய வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஜார்ஜியா சென்றது ஏன்?

    நான் மிகவும் தெளிவாக இருந்தேன். இந்த சினிமா, பிரபலம், ரசிகர்கள் எல்லாமே என்றைக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அதை இன்னொருவர் வந்து பறிக்க முடியாது. இன்னொரு நான்கைந்து ஆண்டுகளில் புது புது திறமையானவர்கள் வந்து என் இடத்தை பிடிப்பார்கள்... ஆனால் படிப்பு அப்படி இல்லை. ஒரு நடிகை என்று சொல்வதை விட மருத்துவர் என்று சொல்லும்போது எனக்குள் ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஒருவரை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், ஒரு நோயே வராமல் தடுக்க வேண்டும் என்பது தான் என்னோட ஆசை. எனக்கு படிப்பு தான் எல்லாமே...



    உங்கள் தங்கை பூஜாவும் நடிக்க வருகிறாராமே?

    “இல்லை. பூஜா சினிமாவுக்கு வரப் போவதில்லை. நடிப்பதற்கான எண்ணம் அவளுக்கு இல்லை. அதற்குள் எப்படி அவள் நடிக்க வருவதாக செய்தி வருகிறது என்று தெரியவில்லை. அவளுக்கு நடிப்பதில் ஆர்வம் இருந்தது என்றால் கண்டிப்பாக நானும், என்னோட குடும்பமும் ஆதரவு தருவோம்”.

    சூர்யாவின் தீவிர ரசிகை நான். முதல் முறை அவரை சந்தித்தபோது நான் பேசவே இல்லை. அப்படியே பார்த்து சிரித்துக்கொண்டே நின்றேன். அவர் புரிந்துகொண்டு சிரித்தார். என் பள்ளி நாட்களில் சூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.

    படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாகவும் இயல்பாகவும் இருப்பார். ஆனால் கேமரா முன்பு வேறு ஒரு நபராக மாறிவிடுவார். அந்த அர்ப்பணிப்பை கற்றுகொள்கிறேன்.



    பள்ளி காலத்தில் அதிகம் பார்த்த படம்?

    கன்னத்தில் முத்தமிட்டால். அந்த படத்தை பார்த்துவிட்டு அப்பா, அம்மாவிடம் என்னையும் தத்து எடுத்துதான் வளர்த்தீர்களா? என்று கேட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு அந்த படம் பாதித்தது.

    அது வளர வளர மாறிக்கொண்டே இருக்கிறது. நடிக்க வந்த பிறகு எல்லோருக்கும் ரசிகையாக மாறிவிட்டேன். #SaiPallavi

    Next Story
    ×