search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    தமன்னாவின் ஆசை - நிறைவேற்றுமா கபூர் குடும்பம்
    X

    தமன்னாவின் ஆசை - நிறைவேற்றுமா கபூர் குடும்பம்

    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வரும் தமன்னா பிரபலங்களின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். #Tamannaah #SrideviBiopic
    தமிழ் சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தமிழ், இந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து வருகிறது. ஸ்ரீதேவி கணவர் போனி கபூரும், ஸ்ரீதேவி வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கிறார்.

    இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறும்போது, 



    “சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. நானும் அதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படமொன்றில் நடிக்க ஆசைபடுகிறேன். நடிகை ஸ்ரீதேவி, சானியா மிர்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது” என்றார்.

    சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamannaah #SrideviBiopic

    Next Story
    ×