என் மலர்

  சினிமா

  சித்தார்த் படத்தில் நடிக்கிறாரா பிரியா வாரியர்?
  X

  சித்தார்த் படத்தில் நடிக்கிறாரா பிரியா வாரியர்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடலில் புருவ அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருடன் செல்பி எடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
  ‘ஒரு அடார் லவ்’ படத்தில் உள்ள ‘மாணிக்ய மலராய பூ’ பாடலில் இடம் பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவு, இந்திய ரசிகர்கள் அனைவரையும் இவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.

  பிரியா நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்குள் மலையாளம், இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தமிழில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில், சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியா வாரியருடன் எடுத்த செல்பி படத்தை வெளியிட்டுள்ளார். முதன் முதலாக சித்தார்த் மலையாளத்தில் நடித்துள்ள ‘கம்மார சம்பவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சென்ற போது பிரியா வாரியரை சந்தித்து செல்பி எடுத்து இருக்கிறார்.

  சித்தார்த்-பிரியா வாரியரின் சந்திப்பு யதார்த்தமாக நடந்ததா? அல்லது தனது படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக பிரியாவை சித்தார்த் சந்தித்தாரா? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. என்றாலும், இந்த படத்தை வெளியிட்டதால் சித்தார்த் படத்தில் பிரியா வாரியர் நடிக்க இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
  Next Story
  ×