என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சினிமாவில் இருந்து விலகும் ஸ்ரேயா?
Byமாலை மலர்4 April 2018 7:34 AM GMT (Updated: 4 April 2018 7:34 AM GMT)
சமீபத்தில் ரஷ்ய டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் ரஷியாவில் குடியேற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #ShriyaSaran
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் அறிமுகமானார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமானார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், தோரணை, குட்டி, ரவுத்திரம் ஆகியவை ஸ்ரேயாவின் முக்கிய படங்கள். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.
தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயாவுக்கு வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை.
திருமணம் ஆனதால் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். ஏற்கனவே வெங்கடேஷ் ஜோடியாக புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். திருமணத்தை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து ஸ்ரேயாவை நீக்கி விட்டு வேறு கதாநாயகி தேடுகிறார்கள்.
இதனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ரஷியாவுக்கு குடிபெயற தயாராகி வருகிறார். #ShriyaSaran

Next Story
×