என் மலர்

  சினிமா

  ராய் லட்சுமி வாயில் சூரியனை விழுங்க வைத்த மம்முட்டி
  X

  ராய் லட்சுமி வாயில் சூரியனை விழுங்க வைத்த மம்முட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன்னுடன் ஜோடியாக நடித்து வரும் ராய் லட்சுமியை, வாயில் சூரியனை விழுங்குபடியான புகைப்படத்தை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் மம்முட்டி.
  மம்முட்டி தற்போது நடித்து வரும் மலையாள படம் ‘குட்டநாடு பிளாக்’. ராய்லட்சுமி, பூர்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தை சேது இயக்குகிறார்.

  கேரள மாநிலம் குட்டநாடு என்ற இடத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.

  வித்தியாசமான புகைப்படம் எடுப்பதில் மம்முட்டிக்கு ஆர்வம் அதிகம். இந்த படப்பிடிப்பின்போது மாலை சூரியனை பார்த்த அவருக்கு புதிய கோணத்தில் படம் பிடிக்க ஆசை வந்தது. உடனே ராய்லட்சுமியின் வாய் அருகே சூரியன் இருப்பது போன்று தெரியும் படி அவரை நிற்க வைத்து வித்தியாசமான ஒரு படத்தை மம்முட்டி எடுத்தார்.  ராய்லட்சுமி சூரியனை கடித்து விழுங்குவது போன்று அந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தை பார்த்தவர்கள் படம் எடுத்த மம்முட்டியை, இப்படி ஒரு திறமையா? என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள். ராய்லட்சுமி இதில் அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  வித்தியாசமான இந்த படம் இணைய தளம் மூலம் வேகமாக பரவி வருகிறது. இதை மம்முட்டி ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
  Next Story
  ×