என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகைகள் தேர்வில் செக்ஸ் - டிவி நிகழ்ச்சியில் போட்டுடைத்த ராதிகா ஆப்தே
Byமாலை மலர்23 March 2018 2:55 AM GMT (Updated: 23 March 2018 6:27 AM GMT)
ஒரு படத்தின் நடிகை தேர்வுக்காக தான் சென்றிருந்த போது, போன் செக்ஸ் வைத்துக் கொள்வது போல நடிக்க சொல்லியதை டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்து ராதிகா ஆப்தே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். #RadhikaApte
நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிச்சலாக பேசி வருகிறார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்று கூறினார். நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
தற்போது இந்தியில் முன்னணி நாயகியாக இருக்கம் ராதிகா ஆப்தே, கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான் ஒரு படத்தின் ஆடிஷனுக்கு சென்ற போது, போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தேவ் டி என்ற படத்தின் நடிகை தேர்வுக்கு சென்றிருந்தேன். அப்போது போன் செக்ஸ் வைத்துக்கொள்ளுவது போல நடிக்க சொன்னார்கள். அதுவரை நான் ஒருமுறை கூட போன் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. இருப்பினும் அனைவரது முன்னிலையில் அப்படி செய்யவேண்டியதாக போனது என ஒரு டிவி நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே தெரிவித்தார்.
சமீபத்தில் தென் இந்திய நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தேன் என்று டி.வி. நிகழ்ச்சியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ராம் கோபால் வர்மா ஓய்வு பெற வேண்டியவர் என்று கூறி அதிர்ச்சி அளித்திருந்த நிலையில், போன் செக்ஸ் என் புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #RadhikaApte
Next Story
×