என் மலர்

  சினிமா

  காதலர் தினத்தில் விருந்தளிக்கும் ‘கோலிசோடா-2’ படக்குழு
  X

  காதலர் தினத்தில் விருந்தளிக்கும் ‘கோலிசோடா-2’ படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரகனி, கிஷோர், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலிசோடா-2’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
  ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கோலிசோடா-2’.

  கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

  அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு அச்சு இசையமைத்திருக்கிறார்.   எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஆடியோ டீசர் நேற்று வெளியானது. அந்த டீசரில் கவுதம் மேனன் பின்னணி வர்ணனை செய்திருந்தார். படத்தின் டிரைலர் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

  Next Story
  ×