search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி வழக்கு
    X

    தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி வழக்கு

    நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
    நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.

    தாடி பாலாஜி மீது சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நித்யா முதலில் புகார் செய்தார். அதில் குடித்து விட்டு வந்து பாலாஜி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மனைவி நித்யா மீது தாடி பாலாஜி புகார் அளித்தார். அதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், சினிமா ஜிம் பயிற்சியாளரும் எனது மனைவியை மிரட்டி வைத்துள்ளனர். பேஸ்புக் தொடர்பால் எனது குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி இருந்தார். இருப்பினும் நித்யாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆசைப்படுகிறேன் என்றும் பாலாஜி பேட்டி அளித்தார்.

    ஆனால் பாலாஜியின் மனைவி நித்யாவோ, கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறி உள்ளார்.



    இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

    பாலாஜியுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. என்னைப் பற்றி தேவையில்லாமல் அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் கூறி இருப்பது போல யாருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

    சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் என 2 பேரின் பெயரை குறிப்பிட்டு அவர்களோடு என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். இதனால் அவர்களது குடும்பத்திலும் பிரச்சினை.

    பாலாஜி கூறியது போல இவர்களோடு நான் பழகவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. எனது குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க முயற்சி நடக்கிறது. அவளை நானே நல்ல படியாக வளர்த்துக் கொள்வேன்.

    இவ்வாறு நித்யா கூறினார்.
    Next Story
    ×