என் மலர்

கடந்த வருடம் ‘பிரேமம்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டிருந்தனர். ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. இந்நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அல்போன்ஸ் புத்திரன் சில முன்னணி நிறுவனங்கள் அணுகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது,
‘பிரேமம்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக 5 முன்னணி நிறுவனங்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தின. அதில் 2 நிறுவனங்கள் என்னைவிட திறமைவாய்ந்த இயக்குனர்களை வைத்து அப்படத்தை இந்தியில் எடுக்கப்போவதாக தெரிவித்தனர். அப்படி எடுத்தால் ‘பிரேமம்’ ஒரிஜினலைவிட அப்படம் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
அவர்களிடம் நான் ஒன்றை மட்டும் கூறினேன். ‘பிரேமம்’ படம் இவ்வளவு தனித்துவமாக இருக்கக் காரணம் அப்படத்தை எடுக்கும்போது எனக்கு 31 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் கன்னிப் பையனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட ஒருவரால் மட்டுமே என்னைவிட ‘பிரேமம்’ படத்தைவிட நன்றாக எடுக்க முடியும். திறமைவாய்ந்த ஜாம்பவான்களை வைத்து ‘பிரேமம்’ படத்தைவிட பிரம்மாண்டமாகவும், நிறைவாகவும் எடுக்க நினைக்கலாம்.
ஆனால், பிரேமம் படத்தின் வெற்றியே அப்படத்தில் நிறைவான காட்சிகள் இல்லாதததுதான். அதனால், யாராவது இப்படத்தை ரீமேக் செய்வதோ? அல்லது மொழிமாற்றம் செய்வதாகவோ இருந்தால் அவர்கள் கண்டிப்பாக நிறைவான காட்சிகள் எடுப்பதை தவிருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
முன்பு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப் படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஜனகன மன பாடிவிட்டார் களா என்று நிகழ்ச்சி முடிந் ததை குறிப்பிடு வார்கள். இப்போது முதலில் ஜனகன மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா?
தமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம்.

ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? இதை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும்.
இதற்கான முயற்சியில் தமிழக இளைஞர்கள் இப்போதே ஈடுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

டி.ராஜேந்தர் பேசும் போது, “தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும். இப்போது அதை அழிக்கும் முயற்சி நடக்கிறது” என்றார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, “ஜி.எஸ்.டி. வரி, வாட் வரி, சேவை வரி என்று ஒரு ரூபாய் சினிமாவில் சம்பாதித்தால் 65 காசுகளை வரியாக கொண்டு போய் விடுகிறார்கள். வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார்.
பாக்யராஜ், “சினிமா துறையின் பல்வேறு பிரச்சி னைகளை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் விஷால், இயக்குனர் விக்ரமன், தொழில் அதிபர் சந்தோஷம், சுதா விஜயகுமார், டைமன்ட் பாபு, விஜய முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற பேச்சு நீண்ட நாளாகவே இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க.- த.மா.கா. கூட்டணியை ஆதரித்து வாய்ஸ் கொடுத்த ரஜினி, அக்கூட்டணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அதன் பின்னர் யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் ரஜினி மவுனம் காத்தே வந்தார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தார். கோடம்பாக்கத்தில் உள்ள தனது திருமண மண்டபத்தில் 5 நாட்களாக நடந்த இந்த சந்திப்பின்போது ரஜினி பேசிய பேச்சுக்கள் அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன் என்று கூறிய ரஜினி, அரசியல் அமைப்பு (சிஸ்டம்) கெட்டுப் போய் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசியலில் எதிர்ப்பே மூலதனம். போர் (தேர்தல்) வரும் போது பார்த்து கொள்வோம் என்று அவர் கூறி இருப்பதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் அரசியல் பிரவேச முயற்சிகளுக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா டைரக்டர் கவுதமன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல தரப்பினரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இனி தமிழகத்தின் முதல்-அமைச்சராக நினைக்க வேண்டாம். எங்களை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்று கூறி ஆவேசப்பட்டனர்.
எனது மூதாதையர்கள் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்று கூறும் ரஜினி தன்னை பச்சைத் தமிழன் என்று கூறி அடையாளப்படுத்தியதற்கும் கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் தமிழர் முன்னேற்ற படை என்கிற அமைப்பினர் அதன் தலைவர் வீரலட்சுமி தலைமையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிடுவதற்காக திரண்டனர். அமெரிக்க தூதரகம் அருகில் கூடிய அவர்கள் திடீரென ரஜினியின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.
அப்போது அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள், சிறிய ரக குண்டு வெடித்தது போல வெடித்து சிதறின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வீரலட்சுமி உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். உருவ பொம்மையில் வெடி பொருட்களை வைத்த 4 பேரை மட்டும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி எதிர்ப்பாளர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று சென்னை மற்றும் மதுரையில் ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தபால் நிலையம் அருகில் ரஜினி ரசிகர்கள் இன்று ஒன்று கூடினர்.
வடசென்னை மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் திரண்ட ரசிகர்கள் ரஜினியின் கொடும்பாவியை எரித்த தமிழர் முன்னேற்றப் படையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சீமான், கவுதமன் ஆகியோருக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது.
அப்போது ரஜினி ரசிகர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனை தடுத்து நிறுத்திய போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். அப்போது ரஜினி ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் ரசிகர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலும் இன்று ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் பஸ் நிலையம் அருகில் திரண்ட ரஜினி ரசிகர்கள் தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அப்போது அவரை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்தவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள் கடுமையாக சாடினர்.
எங்கள் தலைவர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்று கூறி அவர்கள் ஆவேசப்பட்டனர்.
இது தொடர்பாக வடசென்னை ரசிகர் மன்ற தலைவரான புருசோத்தமன் கூறியதாவது:-
எங்கள் தலைவர் ரஜினியை எதிர்ப்பதற்கு யாருக்கும் தகுதி இல்லை. அவரது மூதாதையர்கள் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள்தான். அவர் பெண் எடுத்ததும் தமிழகத்தில்தான். அவர் இங்குதான் வசித்து வருகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ஈழ தமிழர் விவகாரத்தில் ரஜினி என்ன செய்தார் என்று பலரும் கேட்கிறார்கள். 1981-ம் ஆண்டு ரஜினி ரசிகர்கள் மெரினாவில் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தோம். இதனை ரஜினி நேரில் வந்து முடித்து வைத்தார்.
இதே போல இலங்கை தூதரகத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் அப்போது மனுவும் அளிக்கப்பட்டது. எனவே இன்று ரஜினி பற்றி பேசும் தலைவர்கள் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்.
நேற்று ஒரு அமைப்பு சார்பில் ரஜினியின் உருவ பொம்மை வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எங்களது மனதை புண்படுத்தி உள்ளது. எந்த விஷயத்திலும் தலைவரை கலந்து ஆலோசிக்காமல் நாங்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இதுபோன்ற எதிர்ப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாது.
எனவேதான் அந்த அமைப்பின் கொடும் பாவியை கொளுத்தி இருக்கிறோம்.
சீமான், இயக்குனர் கவுதமன் போன்றவர்கள் தங்களது எதிர்ப்பை ஜனநாயக ரீதியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் கொடும்பாவி எரிப்பு போன்ற போராட்டங்கள் அனைத்து ரசிகர்களையும் காயப்படுத்தி இருக்கிறது.
ரஜினிக்காக எதையும் செய்ய துணிந்திருக்கிறோம். இதற்காகதான் அவர் அனுமதியின்றி போராட்டத்தையும் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
“முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிக்கும் போது தயக்கமாக இருந்தது. ஷுட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் இப்போது எந்த பயமும் இல்லாமல் சகஜ நிலைக்கு வந்து விட்டேன். நான் கன்னடத்து பெண் என்றாலும், தற்போது தமிழ் நன்கு பழகி விட்டது. தமிழ் எனக்கு தாய் மொழியாகி விட்டது. இப்போது எனக்கு கன்னடத்தை விட தமிழில் நடிப்பது எளிதாக இருக்கிறது.

சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வு தான் சின்னத்திரையில் இருக்கிறது. எனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை குஷ்பு மேடம் தான் தேர்வு செய்வார். இங்கு வந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு ‘நந்தினி’ தொடர் பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதன் இயக்குனர் ராஜ்கபூர் சாருக்கு நன்றி”.
‘நந்தினி’ தொடர் இயக்குனர் ராஜ்கபூர் கூறும் போது,“நந்தினி தொடர் பிரமாண்டமாக தயார் ஆகிறது. சினிமா போலவே 100-க்கும் அதிகமானவர்கள் வேலை செய்கிறார்கள். சுந்தர்.சி இந்த தொடரை பார்த்து திருத்தங்கள் செய்வார். இந்த தொடர் தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது. குஷ்பு இதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார். மற்றொரு பிரபலமும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்” என்றார்.
“ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகபெரிய அளவில் பேசப்படும். ஒரு நாள் நானும் தம்பி விஷாலும் பேசிக்கொண்டிருந்த போது தம்பி விஷால் என்னிடம் துப்பறிவாளன் திரைப்படத்தை பொறுத்தவரை இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக ‘ஆக்ஷன் வெளியீட்டு விழா’ ஒன்றை ஏற்பாடு செய்வோம் என்று வித்தியாசமான ஒரு ஐடியாவை கூறி அசரவைத்தார். அந்த அளவுக்கு இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
விஷாலும் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். விஷால் என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவர்.அவர் என்னுடைய அன்பான தம்பி. நான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலை போன்று எனக்கு மிகவும் நெருக்கமானவர் யாருமில்லை. நான் அவருடைய கருத்துக்களை ஏற்றுகொள்வேன். அவரும் என்னுடைய கருத்துக்களை ஏற்றுகொள்வார். என்னுடைய படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் அது நிச்சயம் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும்.

பாக்யராஜ் தொடங்கி இதில் பலர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நிச்சயம் அனைத்து கதாபாத்திரமும் கவனிக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கும். நான் அதிமாக புதியவர்களை வைத்து படம் இயக்க கூடிய ஒரு இயக்குனர்.
விஷாலை போன்ற பெரிய நடிகர் நடிப்பது இந்த படத்துக்கு மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது. நான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் கூட புதிய நாயகன், புதிய நாயகி தான் நடிக்கிறார்கள்” என்றார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் தற்போது பெரிய தலைவர்கள் யாரும் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல் ரஜினி ரசிகர்களும் “தலைவா... அரசியலுக்கு வா.. தலைவா வா" என்று அழைத்தபடி இருக்கின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்பு, ரசிகர்களின் அழைப்பினை ஏற்கும் விதமாக ரஜினி அரசியிலில் ஈடுபட விரும்புவது போல் பேசி வருகிறார். அதாவது கடந்த வாரத்தில் ரஜினியுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரசிகர்கள் முன்பு உரையாற்றிய ரஜினி, அரசியலுக்கு வருவது போல் பிடிகொடுக்காமல் பேசினார்.

ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. அரசியல் பிரமுகர்களில் ஒருசிலர் ரஜினியை அரசியலுக்கு வர வேண்டாம் என்றும், ரஜினியை தங்களது கட்சியில் சேரச் சொல்லியும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதன் ஒருபகுதியாக ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்ற பேரவை கட்சித் தலைவி வீரலட்சுமி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டனை நோக்கி நடத்தப்பட்ட இந்த பேரணியில் ரஜினியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வண்ணாரப்பபேட்டையில் ரஜினி ரசிகர்கள் இன்று பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
கங்கணா அடுத்ததாக ‘தேஜூ’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி கூறிய கங்கனா ரணாவத்....
‘‘நான் ‘தேஜூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘தேஜூ’ படத்தின் வேலைகள் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும். இதில் முதல் முறையாக நான் 80 வயது பெண்ணாக நடிக்கிறேன்.

இது முழுக்க முழுக்க முதியவர்களைப் பற்றிய படம். இதில் தனது வயதைப்பற்றி கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணாக நான் நடிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
கங்கனாவின் மனிகர்னிகா பிலிம்ஸ் வழங்கும் இந்த படத்தை ஷைலேஷ்சிங் தயாரிக்கிறார்.
இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட இந்திய படங்களின் சாதனையை இது முறியடித்து வசூல் ரூ.500 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ தான் சாதனை படைத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு ‘யுவர்நேம்’ என்ற ஜப்பான் மொழிப்படம் 575.87 மில்லியன் யென் வசூலித்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது ‘தங்கல்’ அந்த வசூல் சாதனையை கடந்து இருக்கிறது.

தற்போது வரை ‘தங்கல்’ ரூ.740 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. சீனாவில் பல்வேறு திரையரங்குகளில் ‘தங்கல்’ படம் 68 ஆயிரம் காட்சிகள் கடந்து இருக்கிறது. 11 மில்லியன் மக்கள் இதுவரை இந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள்.
`தங்கல்' படத்தின் வசூல் சாதனையை அடுத்து, `பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசினர்.

இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட மேற்சொன்ன 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது உதகை குற்றவியல் நீதிமன்றம்.
இந்நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களால் `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகம் கிடப்பில் போடப்பட்டதால், கமல் `உத்தம வில்லன்', `பாபநாசம்', `தூங்காவனம்' உள்ளிட்ட படங்கள் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, `சபாஷ் நாயுடு' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், `விஸ்வரூபம்' பற்றிய அறிவிப்பை கமல் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகி வரும் `விஸ்வரூபம்-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும் நடித்துள்ளனர்.
`விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகத்தை எடுக்கும் போது, அதன் இரண்டாவது பாகத்திற்குமான காட்சியையும் கமல் எடுத்துவிட்டார். இந்நிலையில் 10 நாள் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அதைத் தொடர்ந்து படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், `விஸ்வரூபம்-2' குறித்து புதிய தகவல் ஒன்றை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

" `விஸ்வரூபம்-2' படத்தின் பாடல் காட்சிகள் தயாராகியுள்ளது. ரசிகர்களின் மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசையை கொடுத்த ஜிப்ரானுக்கும், பாடகர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் `விஸ்வரூபம்-2' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பாடலை கமலே எழுதியிருக்கிறார். இந்தி பதிப்பிற்கு பிரசூன் ஜோஷி எழுதியிருக்கிறார். தெலுங்கு பதிப்பு தயாராகி வருகிறது"
இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இப்படம் வருகிற மே 26-ந் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னதாக நாளை முதல் திரையரங்குகளில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கவிருக்கிறது. தமிழகம் முழுவதும் இப்படம் சுமார் 300 திரையரங்குகளுக்கும் மேலாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரகனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஆர்.மணிகண்டன் இதுவரை தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
‘அப்பா’ படத்தைப் போன்று இப்படத்திலும் சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தி இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுன் மாதத்தில் சமந்தா கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் படமொன்றிலும், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய்-அட்லி கூட்டணி தற்போது ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இம்மாத இறுதியில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பியதும் விஜய்-சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








