என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா' படத்தில் மேலும் இரு முக்கிய பிரபலங்கள் இணையவிருக்கின்றனர்.
    சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படம். பிரான்சில் நடைபெற்று வரும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா' படக்குழு, அங்கு சங்கமித்ராவை அறிமுகம் செய்து, சில போஸ்டர்களையும் வெளியிட்டது. இதில் சுந்தர்.சி., ஹேமா ருக்மணி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 300 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படம், 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கமித்ரா என்ற பதுமையை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறது.



    ஜுன் முதற்பாதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக படக்குழு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பிரபல தொழில்நுட்பக் கலைஞர்களும `சங்கமித்ரா' படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். இதுதவிர மேலும் இரு பிரபலங்கள் `சங்கமித்ரா' படக்குழுவில் இணையவிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் சுபா என்று அழைக்கப்படும் பிரபல திரைக்கதை எழுத்தாளர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் சங்கமித்ராவுக்கு திரைக்கதை எழுத இருக்கின்றனர்.

    இவர்களது வெற்றிக் கூட்டணியில் சமீபத்தில் வெளியான `கவண்' நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர, இவர்கள் கூட்டணியில் வெளியான சில வெற்றிப் படங்களாவன, `தனி ஒருவன்', `அனேகன்', `ஆரம்பம்', `மாற்றான்', `கோ' மற்றும் `அயன்'. இதுதவிர ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் வெளியான `ஐ' படத்திலும், விஜய்-ன் `வேலாயுதம்' படத்திலும் பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
    சென்னை மாதவரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 43). நகைச்சுவை நடிகரான இவர் டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (30). இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நித்யா மாதவரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கணவர் (பாலாஜி) தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    இதுபற்றி மாதவரம் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.
    இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தம்பி அமர் (கங்கை அமரன்) கலாவை காதலிக்கும் விஷயம், அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கடைசி பிள்ளை என்ற முறையில், அமர் மீது அம்மாவுக்கு ரொம்பப் பிரியம்.

    ஆனால், மூத்தவர்களான பாஸ்கரும், நானும் இருக்கும்போது, எங்களுக்கு முன் அமர் திருமணத்தை எப்படி நடத்துவது என்று அம்மா

    யோசித்தார்.என் அக்கா பத்மாவுக்கு பம்பாயில் திருமணமாகியிருந்தது. மாப்பிள்ளை ராஜன், கம்ïனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். பாஸ்கருக்கு பெண் பார்க்கச் சொல்லி, அவருக்கு அம்மா கடிதம் எழுதியிருந்தார் போலிருக்கிறது. பாஸ்கருக்கு பம்பாயிலேயே பெண் பார்த்து

    விட்டார்கள்.பாஸ்கருக்கு திருமணம் என்று தெரிந்ததுமே, பாரதியும், நானும் அவரை கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டோம்.

    ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். அன்றுதான் பம்பாயில் பாஸ்கருக்குத் திருமணம் என்று முடிவாகியது.

    ஜாதகப் பொருத்தம் பார்த்தார்களா, ஜோசியர்கள் நாள் குறித்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. சாதாரணமாக, எந்த ஒரு காரியமானாலும், அம்மா ஜோசியம் பார்ப்பது வழக்கம். இதற்கும் ஜோசியம் பார்த்திருப்பார்களோ என்னவோ!

    குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே, நான், பாஸ்கர், பாரதி, அம்மா, அமர் எல்லோரும் ரெயில் மூலம் பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தோம். அண்ணனும் (பாவலர் வரதராஜன்) வந்து கலந்து கொண்டார்.

    தமிழர்கள் வசிக்கும் தாராவியில், குடிசைகள் நிறைந்த பகுதியில், ஒரு வீட்டின் முன் சிறிய பந்தல் போடப்பட்டு இருந்தது. அக்காவின் வீட்டில் உடைகளை மாற்றிக்கொண்டு, கல்யாணத்துக்கு பாஸ்கர் தயாரானார்.

    "மாப்பிள்ளை அழைப்பு'' ஊர்வலம் நடந்தது. யாரோ சரியாக வாசிக்கத் தெரியாத ஒருவர் நாயனம் வாசித்தார். மேளதாளம் முழங்க, பாஸ்கரை நடக்க வைத்து அழைத்துச் சென்றோம்.

    ஒரு சாதாரணப் பந்தல். இரண்டு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அதில் மாப்பிள்ளையும், பெண்ணும் உட்கார்ந்தார்கள். சுற்றிலும்

    கூட்டம்.பூக்கள் கிடைக்காத பம்பாயில், எப்படியோ இரண்டு சிறிய மாலைகளை தயார் செய்திருந்தார்கள். கெட்டி மேளம் முழங்க, மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ள, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட, திருமணம் நடந்தேறியது.

    திருமணம் முடிந்து சென்னைக்குத் திரும்பினோம். அங்கே ஒரு பிரச்சினை.

    எங்கள் வீட்டில் மேற்கு புறம் இருந்த அறையில் பாஸ்கரும், பாரதியும் வழக்கமாகப் படுப்பார்கள். அதை புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்க வேண்டி இருந்தது.

    நானும், அமரும் ஹாலில் படுப்பது வழக்கம். பாரதி, எங்களுடன் ஹாலில் படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால், அது பாரதிக்கு சரியாகத் தோன்றவில்லை. தனியாக வேறு ரூம் பார்த்துக்கொண்டு போக விரும்பினார்.

    எது வந்தாலும் ஒன்றாக வாழ்வது என்ற உயர்ந்த நோக்கம் உள்ள நண்பர்களைக்கூட, கால நேரமும், சூழ்நிலைகளும் பிரித்து விடுகிறது

    அல்லவா?பக்கத்திலேயே வேறு ரூம் பார்த்துக்கொண்டு பாரதிராஜா போய் விட்டார். சாப்பாட்டிற்கு மட்டும் வீட்டுக்கு வந்து

    அம்மா அடுத்தபடியாக என் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். நான் அதைக்கண்டு கொள்ளாமல், தட்டிக் கழித்து, நான் உண்டு என் வேலை உண்டு என்று போய்க்கொண்டிருந்தேன்.

    முன்பே சொன்னது போல், நாள் முழுவதும் ஜி.கே.வி.யின் கம்போசிங் அல்லது ரெக்கார்டிங்கில் இருப்பேன். இரவுதான் வீடு திரும்புவேன்.

    இந்தக் காலக்கட்டத்தில், மற்ற இசை அமைப்பாளர்களும் என்னை வாசிக்கக் கூப்பிட்டார்கள். மலையாளத்தில் தேவராஜன் மாஸ்டர், பாபுராஜ், ஏ.டி.உமர், தட்சிணாமூர்த்தி சுவாமி, கன்னடத்தில் விஜயபாஸ்கர், ராஜன் நாகேந்திரா, உபேந்திரகுமார், தெலுங்கில் ராஜேஸ்வரராவ், பெண்டியாலா சீனிவாசன், ராகவலு... இப்படி எல்லோருக்கும் வாசித்துக் கொண்டிருந்தேன்.

    கர்நாடிக் இசை கற்பதும், ஜோசப்பிடம் மேற்கத்திய இசை பாடம் கற்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. பாடல் பதிவுகளின்போது என்னை உற்சாகமாக வைத்திருந்ததே கர்நாடிக் இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம்தான்.

    ஆதலால், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. கல்யாணம் செய்து கொள்வது, இசை வாழ்க்கைக்கு இடைïறாக ஆனாலும் ஆகிவிடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எனவே, திருமணத்தைப் பற்றி அக்கறை இல்லாமல் இருந்தேன்.

    மாலையில் கடற்கரை வரை `வாக்கிங்' போவதாக இருந்தால், நானும், பாரதியும் மட்டும் போவோம். பாஸ்கர் எங்களைப் பார்ப்பார். பாரதி சிரித்துக்கொண்டே, "நாங்கள் எல்லாம் சின்னப் பசங்க. நீ இப்போது குடும்பஸ்தன்! அதனால் எங்கள் கூட வரக்கூடாது!''

    என்பார்.பாஸ்கர் பொறுத் துப்பொறுத்துப் பார்த்துவிட்டு, "அட போங்கடா'' என்று கூறிவிட்டு சில சமயம் எங்களுடன் வருவார்.

    அப்படி அவர் ஒரு நாள் வந்தபோது, "குடியரசு என்றால் என்னய்யா?'' என்று பாரதி வேடிக்கையாக கேட்டார்.

    "மக்களாட்சி. அதாவது நம்மை நாமே ஆள்வது!'' - இது பாஸ்கர்.

    "அப்படியானால் அது சுதந்திரம்தானே?''

    "ஆமாம். சுதந்திரம்தான்!''

    "அப்படியானால், சுதந்திரமாக இருக்க வேண்டிய நாளில் யாராவது கைதாவானா?'' என்று சிரித்தபடி கேட்டார், பாரதி.

    "ஆமாய்யா! ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினம் - சுதந்திரமாக இருக்க வேண்டிய நாள். அன்றைக்குப் பார்த்து, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஜெயில்லே அடைச்சுட்டீங்க!'' என்பார் பாஸ்கர்.

    "தலையில் எழுதினதை மாத்த முடியுமா பாஸ்கரூ!'' என்று சிரிப்பார், பாரதி.

    பாஸ்கர் எங்களுடன் வராதபோது, நானும் பாரதியும் பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு வருவோம்.

    அப்போது, மத்திய அரசின் "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்'' (என்.எப்.டி.சி.) உதவியுடன் தயாரிக்கப்பட்டு வந்த "தாகம்'' என்ற படத்திற்கு பாரதிராஜா உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    உலகின் பல்வேறு நாடுகளிலும் திரைப்படத்துறை எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றன, எவ்வளவு உன்னதமான படங்களை வெளிநாடுகளில் தயாரிக்கிறார்கள், இங்கே அப்படி இல்லையே என்று ஆதங்கத்துடன் பேசி வருந்துவோம்.

    உலகத் தரத்துக்கு உயரும் வகையில் தமிழ்ப்படங்கள் வரக்கூடாதா? எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்? இந்த மாதிரி உயர்ந்த படங்களைத் தந்தால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்குவோம்.

    ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தயாரித்தால்தானே! தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் ஒத்துக்கொள்ள வேண்டுமே!

    இல்லை; ஒரு நாள் இதெல்லாம் மாறத்தான் போகிறது!

    - இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நடப்போம்.

    அதற்குள் நிலா கடலில் இருந்து மேலே வந்து, அதன் நிழல் கடல் பரப்பில் விழ, அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு நடத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார்

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ரசிகர்களை சந்தித்தார். 5 நாட்களில் நடந்த சந்திப்பின்போது, தினமும் 3 மாவட்டம் வீதம் 15 மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, ரஜினி அரசியல் தொடர்பாக பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்றும் கூறப்பட்டது. அவர் அரசியலுக்கு வருவது பற்றி ஆதரவான கருத்துக்களும், எதிரான கருத்துக்களும் கூறப்படுகின்றன. ரஜினிக்கு எதிராக இன்று போராட்டமும் நடந்தது.


    இந்த நிலையில் ரஜினி இன்று மீண்டும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது ரஜினி அலுவலக ஊழியர்கள் அவர்களுடைய குடும்பத்தினரை ஒரு சில ரசிகர்கள் உள்பட 200 பேருடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரிய வந்தது.

    இன்று கருப்பு நிற உடை அணிந்து ரஜினி வந்து இருந்தார். ஒவ்வொருவராக அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ரஜினி மீண்டும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று பத்திரிகையாளர்கள் யாரையும் மண்டபத்துக்குள் அனுமதிக்கவில்லை.

    மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் தற்போது தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது.
    மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் வசூலிலும் மலையாளத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை படைத்தது. ரூ.150 கோடி வரை இப்படம் மலையாளத்தில் வசூல் செய்திருந்தது.

    இந்நிலையில், இப்படத்தை அதே பெயரில் தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வெளியிடவுள்ளனர். மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை தயாரித்த முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனமே தமிழிலும் இப்படத்தை உருவாக்குகிறது.



    இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை வைஷாக் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்திற்கு ஆர்.பி.பாலா என்பவர் தமிழில் வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ளார்.

    இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புலிமுருகன் படம் தற்போது தமிழ் ரசிகர்களுக்காகவே 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வெளியாகவுள்ளது. விரைவில் மலையாளத்திலும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது.



    சமீபத்தில் மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை 3டி தொழில்நுட்பத்தில் சிறப்பு காட்சியாக திரையிட்டனர். ஒரே காட்சியில் 25,000 பேர் பார்த்து அது ‘கின்னஸ்’ சாதனையாக பதிவிடப்பட்டது. இப்படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் என்ற நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் தமிழ் டிரைலர் மற்றும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
    ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘சங்கு சக்கரம்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
    பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் புதிய படம் ‘சங்கு சக்கரம்’. இப்படத்தை மாரீசன் என்பவர் இயக்கியுள்ளார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8 குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

    கேலி, கிண்டல், நையாண்டி, கலந்த இப்படத்துக்காக திலீப் சுப்புராயன் ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்துள்ளார். இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.



    படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர். ‘யு’ சான்றிதழ், தணிக்கை குழுவினரின் பாராட்டு இரண்டும் படக்குழுவினரை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஜி.ரவிகண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    லியோ விஷன்ஸ், சினிமா வாலா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை வருகிற ஜுன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். 
    ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார், தனிக்கட்சி தொடங்குவார் என்று நண்பர் ராஜ்பகதூர் மீண்டும் உறுதி அளித்திருக்கிறார்.
    நடிகர் ரஜினியின் ஆத்மார்த்த நண்பராக இருப்பவர் ராஜ்பகதூர்.

    பெங்களூரில் இவரும், ரஜினியும் டிரைவர் - கண்டக்டராக பணிபுரிந்தவர்கள். ரஜினியின் திரையுலக பிரவேசத்துக்கு ராஜ்பகதூர் உதவியாக இருந்தார்.

    ரஜினி என்ன நினைக்கிறார்? அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை துல்லியமாக அறிந்த, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் நண்பர் ராஜ்பகதூரும் ஒருவராவார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.

    அதை உறுதிபடுத்தும் வகையில் ராஜ்பகதூர் மீண்டும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது ராஜ்பகதூர் கூறியதாவது:-



    நடிகர் ரஜினி 10 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார். அப்போது ரஜினியுடன் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம். சுமார் 4 மணி நேரம் நாங்கள் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பேசினோம்.

    அப்போது நான் ரஜினியிடம், “உங்கள் மனம் மாறி விட்டதா?” என்று கேட்டேன். அதற்கு ரஜினி, “ஆமாம். இப்போது நான் தயாராகி விட்டேன். தமிழக அரசியலை நான் மிக உன்னிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்” என்றார்.

    ரஜினி மனதளவில் தயாராகிவிட்டார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி. நிச்சயம் அரசியலில் ஈடுபடுவார்.

    அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி விரைவில் வெளியிடுவார். நிச்சயம் அந்த அறிவிப்பு வெளியாகும். உறுதியாக சொல்கிறேன். ரஜினி அறிவிப்பை விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறினார்.
    விஜய்யின் 61-வது படம் உள்ளிட்ட 6 படங்களில் நடித்து வரும் சமந்தா மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
    சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படம், ‘இரும்புத்திரை’, ‘சாவித்ரி’, 2 தெலுங்கு படங்கள் என்று பிசியாக இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார். தற்போது அழுத்தமான வேடங்களில் நடிப்பதை மட்டுமே விரும்புகிறார். அது போன்ற படங்களைத் தான் ஏற்கிறார். இது பற்றி கூறும் சமந்தா...

    “ஒரு நல்ல பாத்திரத்தில் நடிப்பதற்காக எவ்வளவு ‘ரிஸ்க்' எடுக்கவும் தயாராக இருக்கிறேன். இதற்கு முன்பு சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். அதற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்திருக்கிறது. எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருக்கிறது. என்றாலும், நான் கவலைப்படவில்லை. என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன்.



    சில பாத்திரங்கள் மனதளவில் திருப்தி கொடுக்கும் போது பெரிய மனநிறைவு கிடைக்கும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அந்த திருப்திக்கு ஈடாகாது. இப்போது பணம் என்பதை கடந்து, ஒரு நடிகையாக என்னை திருப்தி படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேடுகிறேன்” என்கிறார்.
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வரும் சமந்தாவுக்கும், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.
    `விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா, அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `யே மாயா சேசவா' படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    அதைத் தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ள சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நாக சைதன்யாவுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ள சமந்தா - நாக தைன்யா. `மனம்' படத்தில் நடிக்கும் போது காதல் வலையில் விழுந்தனர். அதைத் தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதம் கிடைக்கவே நாகசைதன்யா - சமந்தா நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாத இறுதியில் நடந்தது.



    சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படம், ‘இரும்புத்திரை’, ‘சாவித்ரி’, 2 தெலுங்கு படங்கள் என்று பிசியாக நடித்து இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார். அதேபோல் நாகசைதன்யாவும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு இருவருக்கும் திருமணம் என்று நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாகசைதன்யா மற்றும் சமந்தா, திருமணத்தை வருகிற அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினர். திருமணத்தை கலாச்சார முறைப்படி நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



    மேலும் தேன்நிலவுக்கு கோவா செல்லவிருப்பதாக வெளியான தகவலை நாகசைதன்யா மறுத்துள்ளார். அவர்களது தேன்நிலவு நாட்களை அமெரிக்காவில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நாக சைதன்யா - சமந்தா திருமணம் வருகிற 6-ஆம் தேதி நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    `2.0' படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் `தலைவர் 161' புதிய படத்தில் `பாகுபலி-2' பிரலம் ஒருவர் இணையவிருக்கிறார்.
    ‘கபாலி’யை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் 161-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டாஷுட் சமீபத்தில் நடந்தது.

    இது மும்பை தாராவியில் நடப்பது போன்ற கதை. எனவே, தாராவி போலவே சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹீமா குரோஷி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்ப கலைஞர் பெட்டாடிராப்பர் பணியாற்ற இருக்கிறார். இவர் ‘பாகுபலி-2’ படத்தில் வி.எப்.எஸ் தொழில் நுட்ப கலைஞராக பணிபுரிந்தவர். அந்த படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியவர்.



    எனவே, ரஜினியின் புதிய படத்திலும் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் ரஜினியின் புதிய படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    கமலின் மருதநாயகம் படத்தின் போஸ்டர்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
    பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

    இந்த திரைப்பட விழாவில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.



    தற்போது, இந்த திரைப்பட விழாவில் கமலின் ‘மருதநாயகம்‘ படத்தின் போஸ்டர்களையும் திரையிட்டுள்ளனர். ‘மருதநாயகம்’ படத்தின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகமும் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘மருதநாயகம்’ படம் ஆரம்பிக்கப்பட்டு ஒருசில காரணங்களால் நின்று போயுள்ளது.

    தற்போது, இப்படத்தை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்துள்ளார் கமல். இப்படத்தை தயாரிப்பதற்கு லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. ஆனால், கமல்தான் ஒருசில காரணங்களால் படத்தை தொடங்குவதை தள்ளிப்போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, ரெஜினாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் எனது திறமைக்கு தீனி போடும் வாய்ப்புகளை கொடுங்கள் என்று ரெஜினா கேட்டிருக்கிறார்.
    `கண்ட நாள் முதல்' என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய ரெஜினா, `கேடி பில்லா கில்லடி ரங்கா' படத்தின் மூலம் தமிழில் பிரபலமாகினார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த ரெஜினா சமீபத்தில் `மாநகரம்', ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருபடங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையடுத்து, ரெஜினா தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’, ‘ராஜ தந்திரம்-2’ படங்களில் ரெஜினா நடித்து வருகிறார். இது தவிர பல புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. பல இயக்குனர்கள் ரெஜினாவுக்கு கதை சொல்ல வந்துள்ளனர்.



    இதுபற்றி கூறிய ரெஜினா, “நான் கவர்ச்சி நாயகியாக நடிக்க விரும்பவில்லை. அப்படி நடிப்பதும் பிடிக்கவில்லை. திறமையை காட்டி நடிக்க வாய்ப்புள்ள வேடங்களைத்தான் விரும்புகிறேன். அது போன்ற கதைகளில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
    ×