என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித்துக்கு ஆர்.கே.சுரேஷ் புதிதாக நற்பணி மன்றம் ஆரம்பித்துள்ளார்.
    நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஷால் நடித்த ‘மருது’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

    தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து புரோமோஷன் ஆகி கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில், ‘பில்லா பாண்டி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தது.



    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மன்றமே வேண்டாம் என்றவர் அஜித். ஆனால் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்.கே. சுரேஷ் எங்க குல தங்கம் அஜித் நற்பணி மன்றம் என்று எழுதப்பட்டிருக்கும் உடையை அணிந்திருக்கிறார். மற்றொரு போஸ்டரில் அவரது தோள்பட்டையில் அஜித் படத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

    இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
    உமேஷ் சுக்லா இயக்கத்தில் 72 வயது ரிஷிகபூருக்கு, 102 வயது அப்பாவாக அமிதாப் பச்சன் `102 நாட் அவுட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    பாலிவுட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இணைந்து `102 நாட் அவுட்' என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் உமேஷ் சுக்லா இயக்கி வரும் அந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  

    சுமார் 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் - ரிஷி மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த பாசப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், 102 வயது தந்தையாக அமிதாப் பச்சனும், 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடித்து வருகின்றனர்.



    சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குஜராத்தியில் `102 நாட் அவுட்' என்ற பெயரில் வெளியான படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி வருகிறது.

    26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் உடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று இப்படத்தில் மகனாக நடிக்கும் ரிஷி கபூர் அவரதுடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    தமிழ் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 19-ந் தேதி நிறைவடைந்தது.

    இந்த சந்திப்பின் போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசினார். அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன். அரசியலை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் சேர்க்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

    கடைசி நாள் சந்திப்பின் போது, அரசியல் அமைப்பு (சிஸ்டம்) கெட்டு போய்விட்டதாகவும், போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்றும் ரஜினி பேசினார். இதன் மூலம் தேர்தல் நேரத்தில் அவர் அரசியலில் குதிப்பது உறுதியாகி உள்ளது.


    ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்துக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை வெளி மாநிலத்தவர்கள் ஆண்டது போதும். இனி நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம். ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

    தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இந்த அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி தலைமையில் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் தேனாம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வழியாக செல்லும் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இதன் காரணமாக போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ‘பாகுபலி-2’ படம் உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவுக்கு புதிய அடையாளமாக அமைந்துள்ளது என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் இப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினி, சங்கர் போன்ற இந்திய திரையுலகின் ஜாம்பவான்கள் ‘பாகுபலி-2’ படத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக ரஜினி ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவின் பெருமை என்று பாராட்டியுள்ளது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் இப்படத்தை பார்த்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போதுதான் ‘பாகுபலி-2’ படத்தை சென்னையில் பார்த்தேன். இந்த படம் ரூ.2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று நம்புகிறேன். ராஜமௌலியும், கீரவாணியும் தென்னிந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

    ஏ.ஆர்.ரகுமானின் பாராட்டு படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
    `மாம்' படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடிக்க ஹாலிவுட்டின் முன்னணி நடிகரை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
    1980-களில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர், பாலிவுட்டில் முன்னணி  தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து தற்போது, மும்பையில் வசித்து வருகிறார்.

    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 2012-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற `இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆனார். அதைத் தொடர்ந்து அவ்வப்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் ஸ்ரீதேவி தற்போது நடித்து வரும் படம் `மாம்'. இந்தியில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.  

    அ மேட் பிலிம்ஸ் & தர்ட் ஐ புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்கும் `மாம்' படம் ரிலீசாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரவி உத்யவார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 



    அக்‌ஷய் கண்ணா, நவாசுதின் சித்திக்கி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் `எ மைடி ஹார்ட்' என்ற ஹாலிவுட் படத்தில், ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்த அத்னன் சித்திகி இப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்துள்ளார்.

    இதில் அத்னனின் தேர்வுக்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து படக்குழு கூறுகையில், "ஜான்விக்கு அத்னனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் நடித்த `மைட்டி ஹார்ட்' படம் ஒரு காரணம். அத்னன் சித்திகியை இந்தப் படத்தின் தேர்வுக்கு வர சம்மதிக்க வைத்தனர். பிறகு போனிகபூர் உடனடியாக அத்னனின் குழுவிடம் பேசி அவரைப் படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்” என்றனர்.
    தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான 'ஏ' படத்தில் நடிக்கும் அந்த நடிகர், அவரது படத் தயாரிப்பாளரை மிரட்டுகிறாராம்.
    சர்ச்சைக்கு பெயர் போன அந்த நடிகர் கடைசியாக நடித்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது 'ஏ' படத்தில் நடித்து வருகிறார். அதிலும் மூன்று 'ஏ' க்களை கொண்ட படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே அந்த நடிகரின் படம் என்றால் சொன்ன நேரத்தில், சொன்னபடி ரிலீசாவதில்லை என்பது நாம் அறிந்ததே.

    ஆனால் நடிகர் மீதான அந்த பெயரை நான் மாற்றித் தீருவேன், படத்தை சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்வேன் என்று படத்தின் இயக்குநர் வைராக்கியதுடன் இருக்கிறார். ஆனால் இயக்குநரின் சபதம் பலிப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதுவும் நடிகர் மூலமாகத் தான் அந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    அது என்னவென்றால், அந்த படத்தில் நடிகரின் அறிமுக பாடலை பிரபல கவிஞர் ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்த பாடலை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநரிடம் அந்த நடிகர் நச்சரிக்கிறாராம். நடிகரின் விருப்பத்தை தயாரிப்பாளரிடம் சென்று இயக்குநர் தெரிவிக்க, ஏற்கனவே படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது, எனவே பாடலை பிரம்மாண்டமாக எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

    இதையடுத்து தயாரிப்பாளர் கூறியதை, நடிகரின் காதில் அப்படியே போட்டிருக்கிறார் இயக்குநர். தயாரிப்பாளரின் இந்த பதிலை கேட்டு கொந்தளித்த அந்த நடிகர், தயாரிப்பாளர் ஒத்துழைக்காவிட்டால், படத்தை பார்க்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு தானே அறிவுறுத்துவேன் என்று நடிகர் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    ஒருபக்கம் நடிகர் பிடிவாதமாக இருக்க, மறுபக்கம் தயாரிப்பாளர் அதேநிலையில் நிற்க, அந்த இயக்குநர் நடுவில் நின்று கொண்டு செய்வதறியாமல் சிக்கித் தவிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
    நட்டி அதிவேக நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் ருஹி சிங் இணைந்து கலக்கும் ‘போங்கு’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘போங்கு’.

    இதில் ‘சதுரங்கவேட்டை’ படத்தில் நடித்த நட்டி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, `முண்டாசுபட்டி' ராம் தாஸ், அர்ஜுன், வில்லன் ‌ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில் சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - கபிலன், தாமரை, மதன்கார்க்கி, எடிட்டிங் - கோபி கிருஷ்ணா, கலை - ராஜமோகன், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், நடனம் - கல்யாண், பாப்பி, தயாரிப்பு - ரகு குமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தாஜ். இவர் கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக பணியாற்றியவர்.



    படம் பற்றி கூறிய இயக்குனர் தாஜ்...

    “ ‘போங்கு’ டிராவலிங் பற்றிய படம். சாலைகளில் அதுவும் நே‌ஷனல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பறபறன்னு பறக்கும். நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி கேரக்டர் அப்படியே பொருந்திவிட்டது. படம் விரைவில் வெளியாகிறது. நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். ‘போங்கு’ படத்துக்கும் அது கிடைக்கும்” என்றார்.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடன் இளையராஜா சென்றார்.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடன் இளையராஜா சென்றார். அப்போது எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``சென்னையில் சபையர் தியேட்டரில் ``கிளியோ பாட்ரா'' ரிலீஸ் ஆகியிருந்தது. எப்படியாவது அந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று 2 முறை முயற்சி செய்தும், டிக்கெட் கிடைக்காமல் திரும்பி விட் டோம்.

    அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை, முன்னதாகவே சென்று `கிï'வில் நின்று, டிக்கெட் வாங்கி படத்தைப் பார்த்து விடுவது என்று முடிவு

    செய்தோம்.காலை எட்டு மணிக்கே கிளம்பி விட்டோம். பஸ் பிடித்து சபையர் ஸ்டாப்பில் இறங்கினோம். இன்னும் `கேட்' திறக்கவில்லை.

    `சரி, டிபன் சாப்பிட்டு விட்டு வருவோம். நேரம் சரியாக இருக்கும்' என்று தீர்மானித்து, அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றோம்.

    கிளியோ பாட்ரா பார்க்கப் போகிறோம் என்பதால், எல்லோரும் நல்ல மூடில் இருந்தோம். ஜோக் அடித்துக் கொண்டே `ஆர்டர்' கொடுத்தோம்.

    `சரி, சரி! இவ்வளவு ஆர்டர் கொடுத்து விட்டோமே. பணம் குறைந்தால், யாரய்யா மாவாட்டுவது!' என்று கிண்டல் செய்து

    கொண்டிருந்தோம்.டிபன் வந்தது. நன்றாகச் சாப்பிட்டோம்.

    பில்லை வாங்கிக் கொண்டு, எங்கள் `நிதி மந்திரி' பாஸ்கர், பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டார். அவர் முகம் மாறியது.

    அதை கவனித்த பாரதி ராஜா, சிரித்துக் கொண்டே, `டேய்! காசு இல்லேண்ணு நடிக்காதே! போய் பணத் தைக் கொடு!''

    என்றார்.பாஸ்கரின் முகம் மாறவில்லை. இறுக்கமாகவே இருந்தது. ``யோவ்! காசு இருந்த பேண்ட்டுக்கு பதிலா, வேறு பேண்ட்டை போட்டுக் கொண்டு வந்து விட்டேன்யா!'' என்றார்.

    இப்போது பாரதியின் முகம் சீரியசாக மாறியது. சுற்றும் முற்றும் பார்த்தார். நிறைய கூட்டம். நேராக கேஷியர் உட்கார்ந்திருந்த கல்லாவுக்கு போனார். பாஸ்கரிடம் இருந்த பில்லைப் பிடுங்கி, தான் போட்டிருந்த கைக்கெடிகாரத்தைக் கழற்றி இரண்டையும் கேஷியரிடம்

    கொடுத்தார்.``பணத்தை மறந்து வைத்து விட்டு வந்து விட்டோம். இந்த வாட்சை வைத்துக் கொள்ளுங்கள். பணத்தைக் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்கிறோம்'' என்றார்.

    கேஷியர் நல்லவர். சரி என்று தலையை ஆட்டினார். வெளியே வந்ததும், பாஸ்கரைத் திட்டிய பாரதி, பணத்தைக் கொண்டு வருமாறு விரட்டினார். அங்கேயே காத்திருந்தோம். சிறிது நேரத்தில் பணம் வந்து சேர்ந்தது.

    பணத்தை கேஷி யரிடம் கொடுத்து, கெடிகாரத்தை மீட்டோம். இதற்குள் நேரம் ஆகி விட்டதால் அன்றைக்கும் கிளியோ பாட்ரா படத்தைப் பார்க்க முடியவில்லை.

    பின்னர், ஒரு தடவைக்கு மூன்று தடவை கிளியோ பாட்ராவைப் பார்த்தோம்''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    மெட்டுகளை மனதிலேயே பதிவு செய்து கொண்டு, பின்னர் அதை அப்படியே பாடக்கூடிய அபூர்வ ஆற்றலை சின்ன வயதிலேயே பெற்றிருந்தார், இளையராஜா. இந்த ஆற்றலைக்கண்டு வியந்து போற்றிய ஜி.கே.வெங்கடேஷ், பின்னொரு சமயம் இளையராஜா வாசித்த இசையை ஏற்காமல் கேலி செய்தார்.

    இந்த சம்பவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``ஒருநாள் ஜி.கே.வி. இசை அமைப்பில் ஒரு கன்னடப்படத்தின் பாடல் பதிவாக இருந்தது.

    காலை 7 மணிக்கு, விஜயாவாகினி கார்டனில் ஜி.கே.வி. யுடன் கம்போசிங் குழுவினர் உட்கார்ந் திருந்தோம். பாடலுக்கு முன் தொடங்கும் இசையை கம்போஸ் செய்ய வேண்டும்.

    இசைக்குழுவில் இருந்த வைத்தி, முயற்சி செய்து ஒரு இசையைப் போட்டார். அது நன்றாக இல்லை என்று ஜி.கே.வி. சொன்னார்.

    பிறகு ஜி.கே.வி. ஏதோ, சொல்ல வாத்தியக் காரர்கள் நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வாசித்தார்கள். அதுவும் நன்றாக இல்லை என்று கூறி விட்டார்.

    இப்படி நேரம் போய்க் கொண்டு இருந்தது. நான், `அண்ணா! எனக்கொரு ஐடியா! மிïசிக் கொடுக்கவா?'' என்றேன்.

    வைத்தியை  ஜி.கே.வி. அழைத்தார். ``டேய்,  வைத்தி! நம்ம ராஜா ஏதோ மிïசிக் கொடுக்கிறானாம், போய் கொடுத்து வாசிக்கச் சொல்லு'' என்றார்.

    நானும் இசைக் குழுவினருக்கு நோட்ஸ் கொடுத்து, வாசிக்கச் செய்து காட்டினேன்.

    அதுவும் ஜி.கே.வி.க்கு பிடிக்கவில்லை.

    அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வைத்தியை அழைத்து, ``டேய், பாருடா இவனை!'' என்று என்னை சுட்டிக் காட்டி சிரித்தார்.

    பிறகு, 555 சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புகைத்தபடியே, ``டேய்! இதெல்லாம் பெரிய விஷயம். அவ்வளவு ஈசியா வந்திடுமா? அந்த இடத்துக்கெல்லாம் நீ இன்னும் வரலை!'' என்று என்னைப் பார்த்து உரத்தக்குரலில் சொல்லி, சிகரெட் பாக்கெட்டை ஆர்மோனியத்தின் மீது `டக்' கென்று போட்டார்.

    இசைக்குழுவினர் எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு உடம்பே கூனிக் குறுகி கூசியது.

    அப்போதே நான் ஓர் முடிவுக்கு வந்தேன். எந்த ஐடியா எனக்குத் தோன்றினாலும், அதை ஜி.கே.வியிடம் சொல்லக்கூடாது; உதவவும் கூடாது. எனக்கு இசை அமைக்க சந்தர்ப்பம் வந்தாலும், உதவிக்காக யாரையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் தீர்மானித்தேன்.

    சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் ஜே.கே, ஜாகீன் கதாநாயகர்களாக அறிமுகமாகும் ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தின் முன்னோட்டம்.
    ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படம் ‘திருப்பதி சாமி குடும்பம்’.

    இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் ஆகிய இருவர் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் தேவதர்ஷினி, சிசர்மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஓய்.எம்.முரளி, இசை - சாம் டி.ராஜ், எடிட்டிங் - ராஜா முகம்மது, கலை - ஆரோக்கிய ராஜ், நடனம் - தினேஷ், அமீப், ஸ்டண்ட் - பயர் கார்த்திக் , தயாரிப்பு - பாபு ராஜா, ஜாபர் அஷ்ரப், எழுதி இயக்குபவர்- சுரேஷ் சண்முகம்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

    ஒரு நடுத்தர குடும்பத்தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவர். அவர், தனது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோ‌ஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருப்பதி சாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை.

    இந்த படம் நிச்சயம் மக்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும், பாராட்டு வரும் என்று நம்புகிறோம்” என்றார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக விஷால் அறிவித்துள்ளார்.
    சேவை வரியை குறைக்க கோரியும், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வருகிற 30-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். அதன்படி படப்பிடிப்புகள் உள்பட சினிமா தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறாது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை என்று ஏற்கெனவே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.



    இப்படியாக திரைப்படத் துறையை சேர்ந்த ஒவ்வொரு சங்கத்தினரும் வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா? என்ற சூழ்நிலை நிலவியது. அதன் பிரதிபலிப்பாய் வருகிற 30-ந் தேதி முதல் நடக்கவிருந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். 
    விஜய் டி.அலெக்சாண்டர் இயக்கத்தில் தாமோதரன் - ஆஸ்தா லதா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்திரக் கோபை படத்தின் விமர்சனம்.
    நாயகன் தாமோதரனின் மனைவி ஆஸ்தா லதா தனது கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாள். லதாவின் மகன், அதே ஊரில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் மீது காதல் கொள்கிறான். அவனது காதலுக்கு, அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர்.

    இதையடுத்து, இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் பேசி முடிக்கின்றனர். இதையடுத்து ஒரு நாள் தனது காதலி குடும்பத்துடன் லதாவின் மகன் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவனது காதலியின் சொந்தக்காரர் ஒருவர், லதாவின் கணவன் குறித்து, அதாவது அந்த இளைஞனின் தந்தை தாமோதரன் குறித்து தவறாக பேச அதனால் கொதித்து எழும் நாயகன், அங்கிருந்து கோபத்துடன் செல்கிறான்.



    அவனது காதலி அவனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் தனது தந்தை யார்? தற்போது அவர் என்ன செய்கிறார்? என்பது குறித்து தெரிந்து கொள்ள லதாவின் சொந்த ஊருக்கு செல்கிறான். பிளாஸ்பேக்கில் விவசாயம் செய்து வரும் தந்தைக்கு உதவி செய்யாமலும், வேறு வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றி வரும் தாமோதரன், அதே ஊரிலேயே கல்லூரியில் படித்து வரும் ஆஸ்தா லதாவை பார்க்கிறான். தொடர்ந்து லதாவை பார்க்கும் தாமோதரனுக்கு அவள் மீது காதல் வர, தனது காதலை அவளிடம் தெரிவிக்கிறார்.

    ஜாதி வெறி கொண்ட தனது அண்ணன் மீது கொண்ட பயத்தினால் தாமோதரனின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இருப்பினும், தாமோதரனின் காதல் தொல்லையால், அவனிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறாள். பின்னர் நாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்க்கை நடத்தி வர ஒரு கட்டத்தில், லதாவின் அண்ணன் இருவரையும் பிரித்துவிட, தனது கணவனை பிரிந்த லதா, அப்பா யார் என்பதை தெரிவிக்காமல் தனது மகனை வளர்த்து வருகிறாள்.

    இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞன் தனது தந்தையான தாமோதரனை சந்தித்தானா? தனது காதலியுடன் சேர்ந்தானா? என்பது படத்தின் மீதிக்கதை.



    காதல் காட்சிகளிலும் சரி, விவசாயத்தை வலியுறுத்தும் ஒரு நாயகனாக தாமோதரன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்தா லதா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார். மற்ற துணை நடிகர்கள் அனைவரும் கதைக்கு பக்கபலமாக தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    ஜாதி வெறி கூடாது, விவசாயம் முக்கியம் என்பதை இயக்குநர் விஜய் டி.அலெக்சாண்டர் சிறப்பாக கூறியிருக்கிறார். காதல் காட்சிகள் பார்க்கும்படி இருந்தாலும், ரசிக்கும்படியாக இல்லை. படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் அவர்களை வேலை வாங்க தவறியிருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. மற்றபடி காட்சிப்படுத்தலில் கதையை தெளிவாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.

    படத்தின் பின்னணி இசையில் ரொனால்டு ரீகனின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றாலும், பாடல்கள் சொல்லும்படியாக இல்லை. வெள்ளை கேசவனின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘இந்திரக் கோபை’ கொலை.
    சங்கமித்ரா படம் தென்னிந்திய சினிமாவை சர்வதேச அளவில் பேசப்பட வைக்கும் படமாக இருக்கும் என்று சுந்தர்.சி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
    தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

    இப்படத்தை பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் திரைப்பட விழா நடைபெறும் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.



    இந்நிலையில், சங்கமித்ரா குறித்து முதன்முறையாக சுந்தர்.சி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘சங்கமித்ரா’ மிகப் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான யோசனை என்னிடம் இருந்தது. சரியான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்பத்துக்காக காத்திருந்தேன். இப்போதும் நேரம் கைகூடிவிட்டது.

    சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ தென்னிந்திய சினிமாவில் தேசிய அளவில் பேச வைத்தது. ‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசவைக்கும் படமாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். அதனால்தான் இப்படத்தை நாங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடங்கினோம். இது முழுக்க முழுக்க இந்திய படமாக இருக்கும். சர்வதேச ரசிகர்களையும் மனதில் வைத்து படத்தை உருவாக்க உள்ளோம்.

    இந்தியாவின் வரலாறு, காலாச்சாரம், வளங்களை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். என்னுடைய இயக்குனர் வாழ்க்கையில் இந்த படம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றார்.

    இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கவுள்ளனர். 2018-ஆம் ஆண்டு இறுதியில் முதல் பாகத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். 
    ×