search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "natty Natraj"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஸ்ரீகாந்த் தேவா பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
  • இந்த பாடலை 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா லஷ்மி பாடியுள்ளனர்.

  சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

  தேசிய விருது பெற்ற இயக்குனர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.


  'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் அக்ஷரா லஷ்மி பாடியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.


  இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறியதாவது, "வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப் பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்" என்றார்.


  பாடலை எழுதிய இயக்குனர் பவண், "இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்றார்.

  • இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
  • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

  அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்'. இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


  வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'வெப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்றது.


  இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் நட்டி நட்ராஜ் பேசும்போது, எங்களுக்கு சம்பளத்துடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் 'வெப்' படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர்.


  இயக்குனர் ஹாரூண் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்துவிட்டது. இப்போதைய சூழலில் பலபேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப் என்று கூறினார்.


  மேலும், இயக்குனர் ஹாரூண் பேசும்போது, பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலதான் தயாரிப்பாளர்களும் கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100 சதவீதம் எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி" என்றார்.

  பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படம் பாசமலர் பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகிறதாம்.
  பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காரைக்குடி செல்லவிருக்கிறது.

  பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகும் இந்த படத்திற்காக காரைக்குடியில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைக்கப்படுகிறது. அங்கு முக்கிய காட்சிகளை படமாக்க பாண்டிராஜ் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேலும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். கடைக்குட்டி சிங்கம் படம் அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவான நிலையில், எஸ்.கே.16 பாசமலர் பாணியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.  பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

  சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

  பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக பாண்டிராஜ் கூறியுள்ளார். #SK16 #Sivakarthikeyan
  சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

  படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

  உங்கள் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான், 
  அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பையன், மாமன் பொண்ணு, இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண 
  இன்று துவக்கம் என்று குறிப்பிட்டு, இந்த படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.


  இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா 
  ராஜேஷ் நடிக்கின்றனர். யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா
  உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani 

  பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #SK16 #Sivakarthikeyan
  சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

  இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

  சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி முக்கிய கதபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

  டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளை மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani 

  பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ளனர். #SK16 #Sivakarthikeyan
  சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

  இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

  இதுதவிர யோகி பாபு, சூரி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணைந்துள்ளனர். பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.


  டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷாவும், படத்தொகுப்பாளராக ஆண்டனி எல்.ரூபனும், கலை இயக்குநராக வீர சமரும் ஒப்பந்தமாகி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. #SK16 #Sivakarthikeyan #Bharathiraja #Samuthirakani #NiravShah #AntonyLRuben

  ஜெகன் ராஜ்சேகர் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - லால் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்திற்கு காட் ஃபாதர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #GodFather
  நட்டி நட்ராஜ் நடிப்பில் சதுரங்க வேட்டை பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான போங்கு படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

  ஜெகன் ராஜ்சேகர் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். காட் ஃபாதர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நட்டியுடன் நடிகர் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நட்டி - லாலின் பாதி முகங்கள் இடம்பெற்றிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் அதியமானாக நட்டியும், மருது சிங்கமாக லாலும் நடிக்கிறார்கள்.

  பர்ஸ்ட் கிளாப் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு நவீன் ரவிந்திரன் இசையமைக்க, என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பையும், அருண்சங்கர் துரை கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

  படத்தின் டிரைலர் மற்றும் இசை ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. #GodFather #Natty #Lal

  ×