என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நீளும் பட்டியல் - சிவகார்த்திகேயன் படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்
Byமாலை மலர்8 May 2019 10:37 AM IST (Updated: 8 May 2019 10:37 AM IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ளனர். #SK16 #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
The legendary @offBharathiraja sir and the fine actor @thondankani join the cast of #SK16BySunPictures@Siva_Kartikeyan@Pandiraj_dir@Immancomposer#BharathirajaJoinsSK16#SamuthirakaniJoinsSK16pic.twitter.com/AdRz2Mx6yK
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
இதுதவிர யோகி பாபு, சூரி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணைந்துள்ளனர். பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.
The super talented crew of #SK16BySunPictures :
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
Cinematographer - @nirav_dop
Editor - @AntonyLRuben
Art director - @Veerasamar@Siva_Kartikeyan@Pandiraj_dir@Immancomposerpic.twitter.com/sQsJ3vkS0Y
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷாவும், படத்தொகுப்பாளராக ஆண்டனி எல்.ரூபனும், கலை இயக்குநராக வீர சமரும் ஒப்பந்தமாகி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. #SK16 #Sivakarthikeyan #Bharathiraja #Samuthirakani #NiravShah #AntonyLRuben
SK16 Pandiraj Sivakarthikeyan Aishwarya Rajesh Anu Emmanuel Yogi Babu Soori Bharathiraja Samuthirakani RK Suresh natty Natraj Sun Pictures D Imman Nirav Shah ANtony L Ruben எஸ்.கே.16 பாண்டிராஜ் சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் அனு இம்மானுவேல் யோகி பாபு சூரி பாரதிராஜா சமுத்திரக்கனி ஆர்.கே.சுரேஷ் நட்டி நட்ராஜ் சன் பிக்சர்ஸ் நிரவ் ஷா ஆண்டனி எல்.ரூபன் டி இமான்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X