என் மலர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வரும் சிம்பு அவரது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் என முதன்முறையாக 4 கெட்டப்புகளில் நடித்து வரும் சிம்புவுக்கு ஜோடியாக, ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்ட 3 பேர் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ல் வெளியாக இருக்கிறது.
இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.
அதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லரை அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிம்பு தற்போது டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. சிம்புவின் அறிமுக பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வரும் சிம்பு, சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அது என்னவென்றால்,
"எதிர்மறை கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதீர்கள், மாறாக நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள், பகிருங்கள். அன்பை வெளிப்படுத்துங்கள், கடவுள் ஆசிர்வதிப்பார்"
என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார் வேறு எந்தக் கட்சியிலும் சேர மாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 26-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சமீபத்தில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறிவிட்ட நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்வியை அவரிடம் நிருபர்கள் முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ‘‘எனது நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்தை எனக்கு 35-40 ஆண்டுகளாக தெரியும். அரசியலுக்கு வருவதாக இருந்தால், எந்த தேசிய கட்சியிலோ, மாநில கட்சியிலோ அவர் சேருவார் என்று நான் கருதவில்லை. அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார். அப்படி புதிய கட்சியை தொடங்கினால் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதை அவரே முடிவு செய்வார்’’ என்று குறிப்பிட்டார்.

இயக்குனர் சீனு ராமசாமி தனது அம்மா செய்த காரியத்திற்காக அவரை கண்டித்துள்ளார்.
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பேர் சொல்லும்படியான படங்களை சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் சீனுராமசாமி. இவருடைய படங்களில் எப்போதும் தாய் பாசத்துக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும்படியாகத்தான் கதை இருக்கும்.
இதற்கு காரணம், அவர் தனது தாயின் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் என்பதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட அவருடைய அம்மா, சமீபத்தில் செய்த ஒரு காரியத்தால் சீனு ராமசாமி தனது அம்மாவை கண்டித்துள்ளார்.

அதாவது, சமீபத்தில் சீனு ராமசாமியின் அம்மா, இவருக்கு தெரியாமல் திருப்பதி போய், ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சீனுராமசாமி, தனது டுவிட்டரில் கூறும்போது, ‘இந்த அற்பன் சீனு ராமசாமி வாழவேண்டுமென்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் சமீபத்தில் சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்றார்.
நேற்று அவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் காரில் சென்றார். பள்ளியக்கரா சோதனைச்சாவடியில் அவர்கள் சென்றபோது அந்த சோதனைச் சாவடியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. அங்குள்ள ஊழியர்கள் மெத்தனமாக வாகன வசூல் செய்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து சென்றன.
இதை பார்த்த நடிகை சுரபி லட்சுமி, காரில் இருந்து இறங்கி சோதனைச்சாவடி ஊழியர்களை கண்டித்தார். விரைவாக வாகன வசூல் செய்து போக்குவரத்தை சீர் செய்யுமாறு அவர் கூறினார். இதனால் சுரபி லட்சுமிக்கும், சோதனை சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலானது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமரசப்படுத்தி நடிகை சுரபி லட்சுமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

நடிகை சுரபி லட்சுமியுடன், சோதனை சாவடி ஊழியர்கள் மோதிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுரபிலட்சுமியும் தனது பேஸ்புக்கில் மோதல் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
சுரபி லட்சுமி கூறுகையில், நாங்கள் காரில் அமர்ந்திருந்தோம். மற்றொரு காரில் கணவனும், மனைவியும் அமர்ந்திருந்தனர். அவர்களில் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். உடல் நலம் சரியில்லாத அந்த பெண் வாகன நெரிசலில் சிக்கி தவித்தது எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுபற்றி கேட்ட போது தான் சோதனை சாவடி ஊழியர்கள் என்னுடன் தகராறு செய்தனர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இனிமேல் அந்த சோதனை சாவடியில் வாகனங்கள் விரைந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்படவுள்ளது.
ஆண்டு தோறும் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இது கேன்ஸ் திரைப்பட விழா என்று அழைக்கப்படும். இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.
இதில், உலகில் உள்ள எண்ணற்ற சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து நிறைய சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருடம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் திரையிட 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்து வரும் ‘பாகுபலி-2’ படத்தை திரையிடப்பட்டுள்ளது. நேற்று ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தை திரையிட்டுள்ளனர். இன்று ‘பாகுபலி-2’ படம் திரையிடப்படவிருக்கிறது.
இந்த திரைப்படவிழாவில் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளும், குஷ்பு, சுந்தர்.சி, ஆர்யா, ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் அடங்கிய ‘சங்கமித்ரா’ படக்குழுவும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகை, நடிகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

‘கேன்ஸ்’ பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யாராய் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கேன்ஸ் படவிழாவில் புதிய டிசைன் உடைகளை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஐஸ்வர்யாராய் ஈர்த்தார்.
‘கேன்ஸ்’ திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘கேன்ஸ்’ நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் உலக சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான ‘கேன்ஸ்’ படவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார்.
அப்போது அவர் சிவப்பு கம்பளத்தில் புதிய கண்கவர் டிசைனுடன் கூடிய உடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்தார். 2 நாட்கள் நடைபெற்ற விழாவில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.

முதல்நாள் விழாவில் ‘சின்ட்ரெல்லா’ போன்று வெளிர்நிற கவுன் உடை அணிந்து ஒரு இளவரசி போன்று நடந்து வந்தார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சர்வதேச போட்டோகிராபர்கள் அவரை படம் பிடித்தனர்.
இந்த உடை மைக்கேல் சின்கோ என்ற டிசைனரால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார்.
ஒவ்வொரு வருடமும் புதுவிதமான அழகுமிளிரும் வண்ண உடைகளை அணிந்து வந்து கலக்கி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட மாடல் அழகி ஒருவருக்கு திடீரென ஆடை விலகியது. அது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி பெல்லா ஹகித் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த உடை விலகி பிரச்சினையை ஏற்படுத்தியது.
பெல்லா ஹகித் அணிந்திருந்த கவுனில் உள்ள ‘கட்’ மூலம் அவரது தொடைகள் நன்கு தெரிந்தது. அவர் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்த போதும், நடந்த போதும் ஆடை விலகி அனைவரையும் நெளிய வைத்தது. ஆனால் அதை அவர் கண்டுகொள்ளாமல் சர்வ சாதாரணமாக சமாளித்து சென்று விட்டார்.
கடந்த ஆண்டும் கேன்ஸ் பட விழாவில் பெல்லா கலந்து கொண்டார். அப்போது சிவப்பு நிற உடை அணிந்து போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தபோதும் அவரது ஆடை விலகியது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் சினிமா டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வரி விகிதம் முடிவு செய்யப்பட்டது. 4 விகிதங்களில் பொருட்களுக்கு சேவை வரி விதித்துள்ளனர். அதில் சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி நிர்ணயங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
28 சதவீத வரி விதிப்பால் சினிமா டிக்கெட் கட்டணம் உயரும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆக உள்ளது. இதில் நுழைவுக்கட்டணம் ரூ.83.3 கேளிக்கை கட்டணம் ரூ.35.7, பராமரிப்புக்கு ரூ.1 என்று நிர்ணயித்துள்ளனர்.
இனி இந்த கட்டணம் ரூ.153 ஆக உயரும் என்று கூறுகின்றனர். தற்போதைய கட்டணத்தை விட 28 சதவீதம் கட்டணம் உயர்வாக இருக்கும் என்றும் தற்போதைய கட்டணத்தில் 30 சதவீதமாக இருக்கும் பொழுதுபோக்கு கட்டணம் தான் இனி 28 சதவீதமாக குறையும் என்றும் கூறுகின்றனர்.
சரியான அறிவிப்புகள் இல்லாததால் டிக்கெட் கட்டணத்தை கணக்கிடுவதில் குழப்பமாக இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் கூறும் போது, வரி உயர்வு நல்லதல்ல. சாதாரண மக்களின் சுமையைத்தான் அதிகரிக்கும் என்றார்.

அரசியலுக்கு வருவதா? இல்லையா? என்று நடிகர் ரஜினிகாந்த் வருட கணக்கில் யோசிப்பதாக நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். அவருக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து 5 நாட்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அரசியல் பிரவேசம் குறித்து அதிரடியான கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் பேசும்போது, “என் வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் என்னவாக நான் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அது நடக்கும். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன்” என்றார்.
“நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்கினால் தான் நாடு உருப்படும். ரசிகர்கள் ஊருக்கு சென்று அவரவர் கடமைகளைச் செய்யுங்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்” என்றும் கூறினார்.

ரஜினிகாந்தின் அரசியல் பேச்சை நடிகை கஸ்தூரி விமர்சித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “போர் போர் அப்படின்னு கேட்டு போரடிக்குது. அக்கப்போர். நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருட கணக்கில் யோசிப்பவர்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கஸ்தூரி பதிவிட்டுள்ள கருத்துக்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கஸ்தூரியை பதிலுக்கு கடுமையாக திட்டி டுவிட்டரில் கருத்துக்கள் வெளியிட்டனர்.
“நீயெல்லாம் தலைவர் பற்றி பேசுகிறாய் பாரு. மூடிட்டு போ” என்று ஒரு ரசிகர் கண்டித்தார்.
அவருக்கு பதில் அளித்த கஸ்தூரி “நீ பொறக்குறதுக்கு முன்னாடி நான் அவரு ரசிகைடா. உன்னை மாதிரி மரியாதை கெட்ட ரசிகர்களால் அவருக்கு அவமானம்தான். நீ மூடு மொதல்ல” என்று பதிவிட்டார்.
இன்னொரு ரசிகர், “ரஜினி சார் உலகம் முழுவதும் பலகோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார். அவரை சினிமா துறையிலிருந்து கொண்டே விமர்சனம். செய்றீங்களே எவ்வளவு கேவலம்” என்று பதிவிட்டார்.
அவருக்கு பதில் அளித்த கஸ்தூரி, “நான் அதிதீவிர ரஜினி ரசிகை. இப்ப பேசினது விமர்சனம் இல்ல. விரக்தி. எல்லார் மனசுலயும் இருக்கிற ஆதங்கத்தைத்தான் சொல்லி இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் “ரஜினியை வைத்து விளம்பரம் தேடும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர்” என்று கூறியுள்ளார். கஸ்தூரிக்கும், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் டுவிட்டரில் நடக்கும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் பலதிறமைகளை கொண்ட நடிகர்களுள் ஒருவராகிய சிலம்பரசன், தனது நண்பன் விஷ்ணு விஷாலுக்காக ஆதியும், அந்தமுமாகியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பலதிறமைகளை கொண்ட நடிகர்களுள் ஒருவர் சிலம்பரசன். நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்பு, தனது நண்பர்களுக்காக அவர்களது படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதுதவிர ஜெயம்ரவியின் `வனமகன்' படமும், முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரசா இணைந்து நடித்திருக்கும் `கதாநாயகன்' படமும் சிம்பு படம் ரிலீசாகும் அதேநாளில் ரிலீசாக உள்ளது.

இருந்த போதிலும் `கதாநாயகன்' படத்தில் தொடக்கமும் நானே, முடிவும் நானே என்ற வகையில் சிம்பு தனது குரலை கொடுத்திருக்கிறார். அதாவது, `கதாநாயகன்' படத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் தனது நெருங்கிய நண்பன் சிம்பு அவரது குரலில் பேசியிருப்பதாக படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் தற்போது `பொன் ஒன்று கண்டேன்', `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `மின்மினி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

எனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக முடிவெடுத்த உடனே, விமானப்படை வீரகளுக்குதான் முதல் காட்சி என தனக்கு தோன்றியதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை:

உலகளவில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. அதன்படி குத்துச்சண்டை பிரபலம் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார். இந்நிலையில், இந்தப்படத்தின் பிரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சச்சின் “ எனது வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது என முடிவெடுத்த உடனேயே, எனக்கு படத்தின் முதல் காட்சி விமானப்படை வீரர்களுக்கு காண்பிக்கப்பட வேண்டும் என தோன்றியது” எனக் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையில் சச்சின் டெண்டுல்கள் கவுரவ குரூப் கேப்டன் பொறுப்பை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என்று இளையராஜா கூறினார்.

நாகேஸ்வரராவ்- சாவித்திரி நடித்த ``தேவதாஸ்'' படத்துக்கு இசை அமைத்தவர், சி.ஆர்.சுப்பராமன்.
எம்.கே.தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த ``ராஜமுக்தி'', என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்னில் உருவான லலிதா, பத்மினி, பாலையா நடித்த ``மணமகள்'', பானுமதி -நாகேஸ்வரராவ் நடித்த ``லைலா மஜ்னு'' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர் சி.ஆர்.சுப்பராமன்.
அவர் பற்றி இளைய ராஜா கூறியதாவது:-
``ஏவி.எம். ஸ்டூடி யோவிலும், ஜுபிடர் ஸ்டூடியோவிலும் அவர்களுக்கு என்று இசைக் குழுக்கள் இருந்தன. மற்ற ஸ்டூடியோக்களில் இசைக் கலைஞர்களைத் தனியாக அழைத்துதான் வாசிக்கச் செய்து, பதிவு செய்ய வேண்டும்.
அதெல்லாம் போய் விட்ட காலத்தில் அல்லவா நான் திரை உலகுக்கு வந்தேன்! அந்தக் காலப் பெருமைகளை, அனுபவம் மிக்க பெரியவர்கள் சொல்வது ஒரு பாடமாகவே இருக்கும்.
குறிப்பாக, என் முதல் `மானசீக குருநாதர்' சி.ஆர்.சுப்பராமன் பின்னணி இசை கம்போஸ் செய்வது அற்புதமான காட்சியாக இருக்குமë என்று அறிந்திருக்கிறேன்.
பின்னணி இசை (ரீரிகார்டிங்) அமைப்பதற்கான காட்சியை சுப்பராமனுக்கு திரையிட்டுக் காட்டுவார்கள். 10 நிமிடம் திரையில் ஓடும் படத்தைப் பார்த்து விட்டால், பியானோ முன் வந்து உட்கார்ந்து விடுவாராம். இரண்டு கைகளாலும் அவர் வாசிக்க, அதை `நோட்ஸ்' எடுக்க வலது புறம் விசுவநாதனும் ராமமூர்த்தியும் இடது புறம் கோவர்த்தனும், ஸ்ரீராமுலுவும் அமர்ந்து கொண்டு, சுப்பராமன் வாசிக்க வாசிக்க எழுதிக் கொள்வார்களாம்.
எதை எந்த வாத்தியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு, பிரித்துக் கொடுத்து ரிகர்சல் பார்க்கும்போது, `ஏய்! இந்த நோட்சை தப்பா கொடுத்தது யாரு? இங்கே வா!' என்று அழைத்து அதை மீண்டும் பியானோவில் வாசித்துக் காட்டி சரி செய்வாரம்.
வாசிப்பதை நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்கள் எழுதுவதிலும் தவறு வர, அதை ஞாபகமாய்ச் சரி செய்தார் என்றால், அவருடைய ஞானத்தை என்ன சொல்வது?
முப்பத்தி இரண்டு வயதே வாழ்ந்த அவர், எவருக்கும் இணை இல்லாத மேதை.
ஆனால் ஆர்மோனிய பெட்டி மீது `விஸ்கி' பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்!
அன்றைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, சினிமா கலைஞர்களுக்குப் புகழ் வரவர, குடியும், காமவெறியும்தான் உயர்ந்த சுகபோக நிலையாகவும், அதிலேயே சுகித்திருப்பதே நல் வாழ்க்கையாகவும் இருக்கிறது.
சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்த பாடல்கள் மிகவும் `பாப்புலர்' ஆனதால், பொறாமை கொண்டவர்கள் அவரை `டப்பா மிïசிக் டைரக்டர்' என்று கூறி வந்தார்கள். சினிமா இசையை டப்பா இசை என்று சங்கீத வித்வான்கள் கேலியாகக் கூறுவது அக்கால வழக்கம்.
கலைவாணர் என்.எஸ். கே.யும், சி.ஆர்.சுப்பராமனும் நல்ல நண்பர்கள். என்.எஸ்.கே.யிடம் சுப்பராமன் இதுபற்றி கூறி வருத்தப்பட, `கவலைப்படாதே, சுப்பராமா! உன்னுடைய சங்கீத ஞானத்தைக் காட்டுவதற்காகவே ஒரு படம் எடுக்கிறேன்' என்று கூறி, `மணமகள்' என்ற படத்தைத் தயாரித்தார்.
அதில் அத்தனையும் கர்நாடக சங்கீதப் பாடல்கள். அத்தனை பாடல்களையும் வைரமணிகள் போல் ஒளி வீசும் வண்ணம் இசை
அமைத்திருந்தார்.உடுமலை நாராயண கவி எழுதியிருந்த பாடல்கள் மறக்க முடியாதவை. ``எல்லாம் இன்பமயம்'' என்ற பாடலில்,
மலையின் அருவியிலே - வளர்
மழலை மொழிதனிலே
நிலவின் ஒளியாலும்
குழலின் இசையாலும்
நீலக்கடல் வீசும் அலையாலுமே!
கலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும்
கானமா மயிலின் ஆடல் அறுசுவையில்
காதலோடு மனிதனின் புலன் காண்பதெல்லாம் இன்பமயம்!
- சிம்மேந்திர மத்திம ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை யாரால் மறக்க இயலும்!
மகாகவி பாரதியாரின் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடலுக்கு அவர் ராகமாலிகையில் இசை அமைத்தார். உயிரையே கொள்ளைகொள்ளும் உன்னதமான பாடல். இத்தனை காலம் கடந்தும், அதற்கு மேல் இதோ ஒரு ராகமாலிகை என்று யாராலும் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு இசையை அறிந்தவர், சுப்பராமன்.
`டப்பா சங்கீதம்' என்று சங்கீத வித்வான்கள் கூறி வந்த சினிமா சங்கீதத்தை உயர்த்தி, அதை அப்படியே திருப்பிப் போட வைத்தது சி.ஆர்.சுப்பராமனின் இசை. சினிமா பாடலை சங்கீத மேடைக்கு கொண்டு போக வைத்த நிலைமை, சி.ஆர்.சுப்பராமன் காலத்தில்தான் ஏற்பட்டது. இன்றைய இளம் வித்வான்களில் யார் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடவில்லை?
சரளமான நடைபோல வந்த பாட்டுக்கு, இத் தனை மகத்துவம்.சி.ஆர்.சுப்பராமனின் ``வர்ணமெட்டால்'' வந்தது. அதை யாரும் மறுக்க முடியாது; மறக்கவும் முடியாது.
என் மானசீக குருவே- உம்மை என்றும் வணங்குகி றேன்''
இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
சில மலையாளப் படங்களில் பணியாற்ற இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபற்றி அவர் கூறியதாவது:-
``சில மலையாளப் படங்களுக்கு கிட்டார் வாசிக்க சான்ஸ் வந்தது. ``12 பி'' பஸ்சில் வடபழனிக்குச் சென்று, ஏவி.எம்.மிலோ, பரணியிலோ, ரேவதியிலோ நடக்கும் ரெக்கார்டிங்குக்கு நடந்து போவேன். முடிந்ததும் கடைசி ``12 பி'' பஸ்சில் திரும்பி வந்து
சேருவேன்.மலையாள இசை அமைப் பாளர் யாராக இருந்தாலும், பாடல் பதிவின் போது ``கண்டக்ட்'' செய்பவர் சேகர் அவர்கள்தான். அவர் தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். அதை விட ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை என்று கூறினால் நன் றாகத் தெரியும்.
எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் ``பிஜிஎம்'' (பேக்ரவுண்ட் மிïசிக்) சேகர் தான் செய்து கொடுப்பார். மாஸ்டர் தேவ ராஜனிடம் மட்டும் அவர் ``கண்டக்ட்'' மட்டும் செய்வார்.
அவர் ``பிஜிஎம்'' மட்டும் செய்யும் படங்களில் சில இடங்களை குறிப்பிட்டு, ``நீ இந்த இடத்தில் வாசித்து விடு'' என்பார். எனக்காக கம்போஸ் செய்ய மாட்டார்.
மற்ற அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து விட்டு, எனக்கு மட்டும் ஒன்றும் சொல்லாமல், ``வாசித்து விடு'' என்று சுதந்திரமாக விட்டு விடுகிறாரே, ஏன் என்று யோசிப்பேன். நான் தன்ராஜ் மாஸ்டரின் மாணவன் என்பதால்தான் என்னிடம் இவ்வளவு நம்பிக்கை என்று
தெரிந்தது.ஒத்திகையைப் பார்க்கும் யாராவது இசை அமைப்பாளர்கள், கிட்டாரில் ஏதாவது மாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தால், அவரை சேகர் கூப்பிட்டு, ``அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. `டேக்'கின் போது சரியாக -நன்றாகவே வரும்' என்று சொல்லி, என் அருகே யாரையும் நெருங்க விடமாட்டார். அவ்வளவு நம்பிக்கை.
அவர் தனியாக இசை அமைத்த எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. அதுபற்றி அவர் வருந்தியும் நான் பார்த்தது இல்லை. தன் தந்தையின் ஆசியால் ரஹ்மான் பெரும் அளவில் பேரும், புகழும் பெற்றார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.''
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

சீனாவில் கிடைத்த ஏகோபத்திய வரவேற்பின் காரணமாக அமீர்கானின் `தங்கல்', `பாகுபலி-2' படத்தின் வசூலை பிடிக்க வேகமாக நெருங்கி வந்துகொண்டிக்கிறது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியான `தங்கல்' படம் சுமார் ரூ.800 கோடியை வசூலித்திருந்த நிலையில், சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனா மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம், வசூலில் அடுத்த மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்து வருகிறது.
சீனாவில் வெளியாகிய 2 வாரத்தில், தற்போது வரை ரூ.550 கோடியை வசூல் செய்துள்ள தங்கல், ரூ.600 கோடி வசூலை விரைவில் எட்டவிருக்கிறது. படத்தின் மொத்த வசூலும் ரூ.1287.58 கோடியை வசூலித்து, `பாகுபலி-2' க்கு போட்டியாக அடுத்த மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறது.
சீனாவில் கிடைத்த ஏகோபத்திய வரவேற்பினால், `பாகுபலி-2' வை தொடர்ந்து `தங்கல்' படமும் ரூ.1000 கோடி வரிசையில் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்திருந்தது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா முன்னணி வேடத்தில் நடித்து வெளியாகிய `பாகுபலி-2' இந்திய சினிமா வரலாற்றில் பல சாதனைகளை முறியடித்து ரூ.1500 கோடியை தாண்டி, அடுத்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்நிலையில், `தங்கல்' படமும் `பாகுபலி-2' க்கு போட்டியாக ரூ.1300 கோடியை தொடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.