search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதிகா சரத்குமார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு பிரதமர் மோடி குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான். அது டெல்லியில் இருந்து வந்த பணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. வினர் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எனவே உங்களுக்கு பணம் கொடுத்து உங்களை ஏமாற்ற நினைப்பார்கள்.

    இந்தியாவிலேயே பா.ஜ.க. மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. தி.மு.க.வில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம்.

    தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக, ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன். இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது," தமிழகத்தின் கதையை எழுதுவதைப் போல நாட்டின் கதையையும் திமுக எழுத நினைப்பதாக" விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்கள் என்னை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றி பெறுவோம்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இந்தியாவை காப்பாற்றுவதாக் கூறும் முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்கிறார்கள். அது காமெடியா இல்லை நிஜத்தில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும்.
    • பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தொகுதியில் சிறப்பான பல திட்டங்களை என்னால் கொண்டு வர முடியும். விருதுநகருக்கும் -டெல்லிக்கும் நான் பாலமாக இருப்பேன். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட அடுத்த பிரதமர் மோடிஜி தான் என உறுதியாக கூறுகின்றனர். 400-க்கும் மேற்பட்ட எம்.பி. தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும். இந்த தொகுதியில் வெற்றி பெற்று நான் எம்.பி.யாக பாராளுமன்றம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

    இப்பகுதியின் முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி சிகரெட் லைட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பிரச்சனையை தீர்க்க கோரிக்கை வைத்தனர். அவர் சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் எடுத்துக் கூறி இறக்குமதி செய்யப்படும் சீன லைட்டர்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க செய்தார். அதனால் தற்போது லைட்டர் விற்பனை முடக்கியது.

    இப்போது சிவகாசி தீப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும் இவ்வளவு நாள் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. முதல் முறையாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச்செய்யுங்கள். பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள். யாருக்காக இவர்கள் இரண்டு பேரும் ஓட்டு கேட்கின்றனர்? எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று தமிழக பிரச்சனைகளை தீர்ப்பேன் என்கிறார். அவர் யாரை சந்திப்பார்? யாரிடம் முறையிடுவார்? ஏற்கனவே தமிழ்நாட்டில் அவர் பீஸ் ஆகிவிட்டார். இனி அவர் என்ன செய்யப் போகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள்.
    • வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

    கேள்வி: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?

    பதில்: எல்லா இடங்களிலும் மக்கள் தங்களின் அன்பை உணர்த்துகிறார்கள். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    கேள்வி: நீங்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தது ஏன்?

    பதில்: ஏன் சேரக்கூடாதா? பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?

    கேள்வி: தொகுதியில் உங்களுக்கு முக்கிய போட்டியாளர் யார்?

    பதில்: விஜய பிரபாகரோ அல்லது மாணிக்கம் தாகுரோ. போட்டியாளர்களை பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் எங்களின் போசனைகளை ஊக்குவிக்கவும், அதை மக்களிடையே பரப்பவும் முயற்சிக்கிறோம்.

    கேள்வி: எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடரந்து செயல்படுவீர்களா?

    பதில்: அதையெல்லாம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது தேர்தல்வெற்றியே ஒரே இலக்கு என்றார்.

    • எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார்.
    • பொதுமக்கள் ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    திருமங்கலம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நேற்று தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் கப்பலூர் தொகுதியில் தனது கணவர் சரத்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

    அப்போது ராதிகா பேசுகையில், உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக பாராளுமன்றத்தில் போராடுவேன். இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால் எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? என்று கூட தெரியவில்லை.

    எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார்.

    பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர் அங்கிருந்த புறப்பட தயாராக இருந்த ராதிகாவிடம் திரளாக கூடியிருந்த பெண்கள் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரம் போல் பேசி காட்டுங்கள் என கூறினர்.

    உடனே ஜீப்பில் நின்றிருந்த ராதிகா மடியேந்தி கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரமாகவே மாறி தழுவும் குரலில் போல் பேசி வாக்கு சேகரித்தார். அதனை அங்கிருந்த பொதுமக்கள் ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதேபோல் அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் ரசித்து, நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

    • தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம்.
    • மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தி.மு.க. தன் வழக்கமான கூட்டணி கட்சிகளோடு களம் இறங்க, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது.

    குறிப்பாக தமிழகம், கேரளாவில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 மாநிலங்களிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

    சமீபத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இதற்காக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயதாரணி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனா தேவ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


    இக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் உள்ளது. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம் என்றார்.

    இதன்பின்னர் பேசிய சரத்குமார், நாட்டை ஆள்வதற்கான நல்ல தலைவர் மோடி. 3-வது முறையாக பிரதமராக அமர உள்ளார். மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

    • முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
    • நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    அப்சரா ரெட்டியின் மனிதநேய விருதுகள் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி மற்றும் சுமித்ரா பிரசாத் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகைகள் ராதிகா சரத்குமார், அனன்யா பாண்டே மற்றும் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்

    சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஆண்டுதோறும் ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தி பலருக்கு விருதுகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ராகுல் சிவசங்கர், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை அனன்யா பாண்டே மற்றும் சென்னையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விருது நிகழ்ச்சியை, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் நிறுவன மேலாண் இயக்குநர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் ஆண்டாள் கல்பாத்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்த விழாவில், நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் பொது சேவையில் ஈடுபட்டுள்ள பலருக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

    • நடிகை ராதிகா பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது.



    நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார். இவர் தற்போது பல டாப் ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    இந்நிலையில், நடிகை ராதிகா ஒரு படத்தை விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'எந்தப் படத்தையாவது பார்த்து கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்த படத்தை பார்க்கும் பொழுது வாமிட் வரும் அளவிற்கு கோபம் வருது' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனிமல் மற்றும் ஹனுமான் திரைப்படத்தை ராதிகா விமர்சிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.
    • இது தொடர்பான விசாரணையில் இவர்கள் மீது விதிமீறல் இல்லை என அறிவிக்கப்பட்டது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை

    இது தொடர்பான விசாரணையில் இருவரும் விதிகளை மீறவில்லை என அரசு அறிவித்தது. தற்போது நயன்தாரா குழுந்தைகளை பார்ப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார், நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினரை சந்தித்துள்ளார்.


    விக்னேஷ் சிவன் - ராதிகா- நயன்தாரா

    இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராதிகா சரத்குமார், அழகான பெண் நயன்தாரா மற்றும் ஜாலியான விக்னேஷ் சிவனை சந்தித்து தேநீர் அருந்தியதாகவும் அவர்களது குழந்தைகளை பார்த்ததாகவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் பாரதிராஜா.
    • இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.


    பாரதி ராஜா

    இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

    இதையடுத்து இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் நான்கு நாட்களில் பாரதி ராஜா வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


    ராதிகா சரத்குமார்

    இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் இயக்குனர் பாரதி ராஜா விரைவில் குணமடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார். இந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய என் சிறப்பு பிரார்த்தனை. உங்களை விரைவில் காண வேண்டும். உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இயக்குனர் பாரதிராஜா "கிழக்கே போகும் ரயில்" படத்தின் மூலம் ராதிகாவை தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ×