search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவித்ரி"

    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.

    அவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான வி‌ஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை.

    அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறினார். கேரள வெள்ளம் குறித்து ‘கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.



    ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். #JayalalithaaBiopic #KeerthySuresh

    சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு பயந்து தன்னுடைய படத்தை நிறுத்தி இருக்கிறார் பாலகிருஷ்ணா.
    வாழ்க்கை வரலாறு படங்களை எடுப்பதில் தென்னிந்திய இயக்குநர்களுக்கு இன்னும் அனுபவம் வேண்டும் என்று பாலிவுட் இயக்குநர்கள் கேலி பேசியதை உடைத்து சாதனை படைத்திருக்கிறது சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம். விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறும் படமாகிக் கொண்டிருக்கிறது.

    என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்தை முதலில் இயக்க இருந்த இயக்குநர் விலகிய நிலையில் பாலகிருஷ்ணாவே இயக்கும் முடிவை எடுத்தார். ஆனால் சாவித்திரி படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பாலகிருஷ்ணா தனது முயற்சியை சிலகாலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளாராம்.

    எடுத்தால் சாவித்திரி போல எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடிப்பதற்கு அவரது குடும்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் தோன்றின. அவரது அண்ணன் மகனான ஜுனியர் என்.டி.ஆர் கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×