என் மலர்
அம்மாவின் பாசத்தை எடுத்து சொல்லும் ‘வைரமகன்’ படத்தின் பாடல் சிடியை எடப்பாடி வெளியிட்டார். படம் வெளியாகும் நாளில் டி.வி.டி. விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சமுதாய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்து நடித்தவர் கோபி காந்தி. இவர் ‘முதல் மாணவன்’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தற்போது ‘வீரக்கலை’, வைரமகன்’ என இரண்டு படங்களை தயாரித்து நடித்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக இந்த படங்கள் வெளியாகும் அன்றே அவற்றின் டி.வி.டி. வெளியிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த ‘வைரமகன்’ படம் அம்மாவின் பாசத்தை எடுத்து சொல்லும் படமாக அமைந்துள்ளது. இதில் கோபி காந்தி விவசாயத் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த படத்தில் விவசாயிகளின் பெருமையை சொல்லும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பாடல்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் ‘வைரமகன்’ திரைப்பட இயக்குனர் முருகவேல், இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பான கதையில் `பாகுபலி' பிரபலம் ராணா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பான கதையை மையமாகக் கொண்டு சில படங்கள் வெளியாகி உள்ளன. இப்போது மீண்டும் அதே கொலை வழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஒரு படம் தயாராகிறது.
இதில் கதாநாயகனாக ராணா நடிக்கிறார். அவர் சி.பி.ஐ. அதிகாரியாக இந்த படத்தில் வருகிறார். இது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் வேடம். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு நாடு முழுவதும் தெரிந்த பிரபல நடிகராக ராணா மாறி இருக்கிறார்.

இது தவிர ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான கதைதான் இந்த படத்தின் மையகரு. எனவே, நாடு முழுவதும் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

கமலுக்கு சத்யா திருப்புமுனையாக அமைந்ததுபோல் சிபிராஜுக்கு இந்த சத்யா திருப்புமுனையாக இருக்கும் என்று இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமர்த்தி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘சத்யா’ என்ற தலைப்பே மிகவும் பவர்புல்லான ஒரு தலைப்பு. கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சத்யா’. கமல் சாருக்கும் ‘சத்யா’ அவருடைய கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதேபோல் இந்த ‘சத்யா’ சிபிராஜுக்கு அவருடைய கேரியரில் நிச்சயம் திருப்புமுனை படமாக இருக்கும்.

‘சத்யா’ படத்தின் தலைப்பு ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருந்தது. கமல் சாரிடம் நாங்கள் இந்த தலைப்பு எங்கள் படத்துக்கு சரியாக இருக்கும் என்று கேட்டவுடன் எங்களுக்கு ‘சத்யா’ என்ற மாஸ் தலைப்பை கையெழுத்திட்டு கொடுத்தார். அவருக்கு என்னுடைய சார்பாகவும் எங்களுடைய யூனிட்டின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
கிரைம் த்ரில்லர் பாணியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ள ‘சத்யா’ தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஷணம்’ திரைப்படத்தின் ரீமேக்தான். தமிழுக்காக கதையில் புதிதாக நிறைய விஷயங்களை சேர்த்து உருவாக்கியுள்ளோம். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த் ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் ஒன்றாகும்.

இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார். அவருடைய லுக்கை மாற்றி புதிதாக காட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. இதை நான் அவரிடம் கூறியதும், நிச்சயமாக நீங்கள் என்ன சொன்னாலும் செய்யலாம் என்று சிபிராஜும் முன்வந்தார். இந்த லுக்குக்காக நேரமெடுத்து காத்திருந்து படப்பிடிப்புக்கு சென்றோம்.
இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார். ரம்யாவுக்கு இப்படம் பெரிய பெயர் வாங்கி தரும். இப்படத்தை வர்தா புயல் வந்த அன்று கூட படமாக்கினோம். அன்று நாங்கள் அம்பத்தூரில் உள்ள ஒரு இடத்தில் செட் போட்டு படமாக்கிக் கொண்டிருந்தோம். புயல் அடித்த பின்பு தான் வெளியே வரமுடியும் என்பதால் நாங்கள் உள்ளேயே தான் இருந்தோம். புயல் வரப்போகிறது என்று தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய புயலாக இருக்கும் என்று தெரியாது.

இந்த படம் மிக சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று நிச்சயமாக கூறமுடியும். எனக்கு கமர்ஷியல் திரைப்படம் எடுக்க தெரியாது என்று நினைத்து கொண்டிருந்தேன். படத்தை இப்போது பார்க்கும்போது இது என்னை ஊக்குவிக்கும் வகையில் வந்துள்ளது. படத்தின் கதைபடி கிரைம் ஒன்று நடக்கும், அப்படி அது நடக்கும் போது எப்போதும் அது போலீஸின் பார்வையில் செல்வது போல் தான் கதை இருக்கும். ஆனால் இந்த கதை ‘சத்யா’ என்ற சாதாரணமான ஒரு நபரின் பார்வையில் செல்வது போல் இருக்கும். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பது வரை செல்லும் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும் என்றார்.

மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாணியை பின்பற்றி இருக்கிறார்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு பெற்ற ‘தனிஒருவன்’ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. 2-ம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. ஏப்ரல் 25-ந்தேதி ஆரம்பமான இந்த படப்பிடிப்பு 25 நாட்களுக்கும் மேலாக நடை பெற்று முடிவடைந்தது.
மோகன்ராஜா ஏற்கனவே இயக்கிய ‘எம்குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது ‘வேலைக்காரன்’ படத்தையும் மலேசியாவில் படமாக்கி இருக்கிறார்.

இது பற்றி டுவிட்டரில் கூறியுள்ள இயக்குனர் மோகன் ராஜா, ‘என் அபிமான மலேசியாவில் நான் படமாக்கிய 3-வது படம் இது. மிகவும் வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இங்கு எப்போதும் போல் அன்பான உபசரிப்பு. அன்பு தமிழ் மக்களுக்கு எனது நன்றி’ என்று தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு இடையே சூப்பர் ஸ்டார் ரஜினி பாணியில், சிவகார்த்திகேயன் மலேசியாவில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தினரை சந்தித்தார். அப்போது அவர்கள் குடும்பத்துடன் வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவை இணைய தளங்களில் வெளியாகி உள்ளன.

`பிரேமம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அல்போன்ஸ் புத்ரன், தான் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
`நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதை தொடர்ந்து `பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்' படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அல்போன்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

"தனது அடுத்த படத்தை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதற்காக இவ்வளவு நாட்கள் என்னை நான் தயார்படுத்தி கொண்டேன். இசையை மையப்படுத்தி தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறேன். இசை என்பது ஒரு சமுத்திரம், அந்த சமுத்திரத்தில் எனது காலை நனைத்து, பின்னர் மெதுவாக அதில் இறங்கியிருக்கிறேன்.
இசை என்னும் கடலில் எனக்கு நீச்சல் அடிக்கவும் தெரியாது, படகை ஓட்டவும் தெரியாது, சவாரி செய்ய சொந்த கப்பலும் இல்லை. எனினும் `லைஃப் ஆப் ஃபை' படத்தில் வரும் நாயகனுக்கு இருக்கும் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது...

தனது புதிய படத்தில் நட்பும், காதலும் இருக்கும். ஆனால் `பிரேமம்' போன்ற முழுநீள காதல் படமாக இருக்காது, அதேபோல் `நேரம்' படத்தை போல் நட்பு, த்ரில்லர் படமாகவும் இருக்காது. மாறாக நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான ஒரு சாதாரண படமாக இருக்கும். இந்த படத்தில் எனது நண்பன் நிவின் பாலி நடிக்கவில்லை. இன்னும் சில படங்கள் இயக்கிய பின்னர் நிவினுடன் மீண்டும் இணைவேன். மொஹ்சைன் கசீம் இயக்கி வரும் புதிய படத்தில் `பிரேமம்' படத்தின் நடித்த சிஜு, கிருஷ்ணா சங்கர், ஷரப் யு தீன், சபரீஷ் வர்மா மீண்டும் இணைந்திருக்கின்றனர்"
என்று தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிற புதிய படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.
‘கபாலி’ வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், ‘கபாலி’ படத்தில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு கடந்த சில தினங்களாக கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அதில் கடைசியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமுத்திரகனி ‘விசாரணை’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மும்பை பின்னணியில் தாதா கதையாக உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா இணைந்து நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தின் முன்னோட்டம்.
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம்‘துப்பறிவாளன்’. விஷாலுடன் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை- அருள் கொரோல்லி, ஒளிப்பதிவு - கார்த்திக் வெங்கட்ராமன், படத்தொகுப்பு - அருண், இயக்கம் - மிஷ்கின்.
படம் பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறும் போது...
“தற்போது உருவாகிவரும் ‘துப்பறிவாளன்’ படம் ஒரு தனியார் நிறுவன துப்பறியும் நிபுணர் மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படம்.

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை. தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை. ‘துப்பறிவாளன்’ நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.
விஷால் இதில் ‘கணியன் பூங்குன்றன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய கவிஞர் பெயர். இதில் விஷாலுக்கு மிகவும் பலமான கதாபாத்திரம். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு இணைந்து ஒரு மெல்லிய காதல். இது தான் துப்பறிவாளன் ஸ்பெஷல். தெலுங்கில் பிரபலமான அனு இமானுவேல் இதில் நாயகியாக அறிமுகமாகிறார்” என்றார்.
‘துப்பறிவாளன்’ ஆகஸ்டு 11-ந் தேதி திரைக்கு வருகிறது.

சீனாவில் வசூலைக் குவித்து வரும் `தங்கல்' படத்தின் வசூலுக்கு போட்டியாக `பாகுபலி-2' படக்குழு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
இந்திய சினிமாவிற்கு புதிய அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ள பிரம்மாண்ட படைப்பு எஸ்.எஸ்.ராஜமவுலியின் `பாகுபலி-2'. இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனையில் ரூ.1500 கோடியை தாண்டி புதிய மைல்கல்லை தொட்டு வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.
வசூலில் இந்திய சினிமாவை பாலிவுட் படங்கள் ஆட்சி செய்து வந்த நிலையில், தென்னிந்திய திரைப்படம் ஒன்று உலகலவில் வசூல் சாதனை படைத்து, பேசப்படும் படமாக உருவெடுத்திருப்பதற்கு காரணமானவர் ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில், `பாகுபலி-2' -வின் வசூலுக்கு போட்டியாக அமீர்கானின் `தங்கல்' படம் 2 வாரங்களுக்கு முன்பு சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட `தங்கல்' சீனாவில் மட்டும் ரூ. 700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு சீனாவில் வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூல் சாதனையையும் `தங்கல்'முறியடித்துள்ளது.

`பாகுபலி-2' படத்தை தொடர்ந்து வசூலில் படமும் வசூலில் வரலாற்றை திருப்பி எழுதி வருகிறது. உலகம் முழுவதும் சாதனை படைத்து வரும் `தங்கல்' வசூலில் ரூ.1500 கோடிக்கு நெருக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே `பாகுபலி-2' -ன் வசூலை இன்னும் சிலநாளில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் `தங்கல்' படத்தின் வசூல் சாதனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக `பாகுபலி-2' படத்தை சீனாவில் திரையிட முடிவு செய்துள்ள படக்குழு, அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி படத்தை வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக சீனாவில் வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்க பிரிவினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து பட அதிபர் மதனை மீண்டும் கைது செய்தனர்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக 133 மாணவ-மாணவிகளிடம் ரூ.90 கோடி மோசடி செய்ததாக பட அதிபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகிவிட்ட அவரை இந்தியா முழுவதும் தேடினார்கள். இறுதியில் திருப்பூரில் வைத்து மதன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக மதன் மீது அமலாக்க பிரிவினரும் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். மதனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, பலமுறை அவரிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று மதன் சென்னையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கைது செய்யப்படலாம் என்று நேற்று மாலையில் இருந்து தகவல் வெளியானது. ஆனால் அமலாக்க பிரிவு அதிகாரிகள் மதன் கைதானதை உறுதி செய்யவில்லை.
நேற்று இரவு 8 மணிக்கு மேல் மதன் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. கைதான மதன் நேற்று இரவு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதன் மறுபடியும் கைது செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவக்கல்லூரி சீட் மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் மேலும் சிலர் மீதும் கைது நடவடிக்கை பாயுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சேரன் தனது முயற்சியில் தான் தோற்றுவிட்டேன் என்று ரசிகர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
`பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிவிட்ட சேரன், திருட்டு விசிடி-க்களை ஒழிக்கும் விதமாக. சி2எச் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.
அதாவது, சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அவர் இயக்கிய ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை சி2எச் சேனல் மூலம் வெளியிட்டார். ஆனால் இந்த சேனலுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே தனது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் சேரன் கூறியிருப்பதாவது,
"என் இதயம் நிறைந்த அன்பு ரசிகர்களே தொடர்ந்து எனக்கும் என் திரைப்படங்களுக்கும் ஆதரவு அளிக்கும் தமிழ் பண்பாளர்களே வணக்கம்..
மூன்று வருடங்களாக புதிய முயற்சி என்ற நோக்கில் மலையை புரட்டிப்போட்டுவிடலாம் என முயன்று முட்டி முட்டி முடியாமல் தோற்றுப்போனேன்.. பிறகுதான் புரிந்தது இங்கே சிறுகல்லை நகர்த்தக்கூட முடியாத அளவு தவறுகளும் பொறாமையுணர்வுகளும் பரந்தமனப்பான்மை இன்மையும் புரையோடிப்போயிருக்கிறது என.. எனவே இந்த சமூக மாற்றம் என்பது ஒரு நல்லவன் நினைத்து முடியப்போவதில்லை என புரிந்தபின்...

எனக்கு எது வேண்டுமோ அதை நோக்கி மட்டுமே பயணிப்பது என முடிவு செய்து இதோ திரைப்படம் உருவாக்க தயாராகிவிட்டேன். திருட்டு DVD யில் பார்த்தவர்கள் போக ஆன்லைனில் முதல்நாளே எந்த கட்டணமுமின்றி இலவசமாக பார்த்தவர்கள் போக அனுமதியின்றி பஸ்களில் படம் பார்ப்பவர்கள் போக நேர்மையாக உழைப்பை உணர்ந்து எவ்வளவுபேர் பணம் கொடுத்து படம் பார்க்கிறார்களோ அந்த பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்கலாம் என முடிவு செய்து இந்த வருடம் இரண்டு படங்கள் உருவாக்க உள்ளேன்.. எப்போதும்போல உங்கள் ஆதரவும் அரவணைப்பும் தேவை.. நன்றி."
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"முயற்சி என்றுமே தோற்பதில்லை.... `முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்' என்ற வள்ளுவனின் வாக்கு என்றுமே பொய்யாகாது. எனவே தங்களின் முயற்சிக்கு தக்க பலனை விரைவில் அனுபவிப்பீர்கள் சேரன்.

துப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.
லண்டன்:

ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) இன்று காலமானார்.

கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த இவர் ஸ்விசர்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். மோரேவின் மரண செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் பிறந்த இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமல்லாது வேறு சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
யூனிசெப் அமைப்பின் நலத்தூதராகவும் பணியாற்றியுள்ள ரோஜர், சுகாதாரப் பணிகளுக்காக அதிக அளவு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளார். ரோஜரின் மறைவுக்கு உலக சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார். இடைவிடாத முயற்சிக்குப்பின் திருமணத்துக்கு இளையராஜா சம்மதித்தார். மணமகள் ஜீவா, இளையராஜாவின் முறைப்பெண்.
பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார். இடைவிடாத முயற்சிக்குப்பின் திருமணத்துக்கு இளையராஜா சம்மதித்தார். மணமகள் ஜீவா, இளையராஜாவின் முறைப்பெண். (அக்காள் மகள்)
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"எனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். அமர் - கலா காதல் தீவிரமாகி வந்ததும், இதற்கு ஒரு காரணம்.
என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க, அம்மா ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். "எனக்கும் வயசாச்சு. இப்படியே தினமும் உங்களுக்கு சமைச்சுப் போட எத்தனை நாள் முடியுமோ! அதனால் காலா காலத்திலே...'' என்று அம்மா கூறிக்கொண்டிருக்கும்போதே நான் எழுந்து விடுவேன்.
என் அக்காவுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை (ஜீவா) பிறந்தபோது, அதன் ஜாதகத்தை என் தந்தையார் பார்த்திருக்கிறார்கள். "இந்தக் குழந்தையைத்தான் ராஜையாவுக்கு கட்டி வைக்கவேண்டும்'' என்று உத்தரவு போட்டுவிட்டு போய்விட்டார்கள். அதை அம்மா என்னிடம் சொல்லி பயமுறுத்துவார்கள்.
ஜீவா பிறந்து, சிறு குழந்தையாக இருந்தபோதே, அதைப் பார்த்துக் கொள்ளும்படி அக்கா என்னிடம்தான் சொல்வார்கள். நான்தான் பார்த்துக் கொண்டேன். நான்தான் வளர்த்தேன். ஒரு தாய், சிறு குழந்தைக்கு செய்யும் அத்தனையும் நான்தான் ஜீவாவுக்கு செய்தேன்.
அம்மாவிடம் மேற்கொண்டு மறுத்துப் பேசமுடியாத கட்டம் வந்தது. திருமணம் செய்து கொள்ள நான் சில நிபந்தனைகளை அம்மாவிடம்
சொன்னேன்."அதைப் பார்க்கவேண்டும், இதைப் பார்க்க வேண்டும், சினிமாவுக்குப் போகவேண்டும், அங்கே போகவேண்டும், இங்கே போகவேண்டும் என்றெல்லாம் எல்லா பெண்களும் கணவன்மாரிடம் வற்புறுத்துவார்கள். அதுமாதிரி என்னிடம் கூறக்கூடாது. எனக்கு முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் இசைதான். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்'' என்று கூறினேன்.
இது என் அக்காவுக்கும் தெரிந்தது. அவர்களும் மகளை பயமுறுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!
எல்லாம் ஈசன் செயலே. கல்யாணம் நிச்சயம் ஆயிற்று, என்னைக் கேட்காமலேயே! அண்ணன் பாவலரும், அத்தானும், அம்மாவும் கலந்து பேசி, 1972 மே 22-ந்தேதி எனக்கும், ஜீவாவுக்கும் திருமணம் என்று நிச்சயித்து விட்டார்கள்.
திருமண அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும் என்று, பாஸ்கர் கட்டாயப்படுத்தினார்.
அதன்படி அழைப்பிதழும் அடித்துவிட்டோம். ஆனால் இன்று நினைத்தாலும், நெஞ்சை மிகவும் உறுத்துகிற விஷயம் - அழைப்பிதழில் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் பெயரை போடாமல் விட்டு விட்டோம்.
"விட்டுவிட்டோம்'' என்ன, "விட்டு விட்டேன்.''
அண்ணன் பெயரைப் போட்டால், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பவேண்டும். கூட்டம் வந்தால் செலவு தாங்காது என்ற முன் எச்சரிக்கைதான் காரணம் என்று சமாதானம் சொன்னால் அதை நம்பி விடுவீர்களா என்ன!
அண்ணனும் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லை. அதுதான் மிகவும் வருத்தம்.
திருமணத்துக்கு புதுத்துணிகள் எடுக்க வேண்டியிருந்தது.
பாலு ஒரு டெய்லரைக் காட்டி, "ஒரு சூட் தைத்துக்கொள்'' என்றான். பணம் அவனா கொடுப்பான்? நான்தானே கொடுக்கவேண்டும்!
கல்யாணம் நிச்சயமான நாளில் இருந்து எத்தனை கச்சேரிகள் இருந்ததோ, அத்தனை கச்சேரிகளில் என் சம்பளத்தை மொத்தமாக பாலுவையே வைத்திருக்கச்சொல்லி கல்யாணத்துக்கு முன் என்னிடம் கொடுக்கும்படியும், இல்லையென்றால் செலவாகிவிடும் என்றும் கூறியிருந்தேன்.
ஜி.கே.வி.யிடம் `ஆர்க்கெஸ்ட்ரா' இன்சார்ஜ் ஆக இருந்த சீனிவாசன்தான் பாலுவிடமும் இன்சார்ஜ் ஆக இருந்தான். கடைசியில் பணம் பட்டுவாடா செய்தபோது, பெரிய தொகையை நான் எதிர்பார்க்க, ஏதோ ஒரு தொகையை "இவ்வளவுதான்'' என்று சொல்லி என் கையில்
வைத்துவிட்டான்!சீனு விளையாடி விட்டானோ என்று எனக்கு சந்தேகம். பாலுவிடம் கேட்டதில், நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தபடிதான் இருக்கிறது என்று கூறிவிட்டான்.
சரி; இப்போது என்ன செய்ய முடியும்!
கல்யாணத்திற்கு பட்டுச்சட்டை தைத்துக்கொண்டேன். கல்யாண வேட்டியின் விலை என்ன தெரியுமா? 37 ரூபாய்! இன்றும் அந்த வேட்டி (என் மனைவியால் காப்பாற்றப்பட்டு) என்னிடம் இருக்கிறது!
கல்யாணத்துக்கு ஒவ்வொரு காசையும் இழுத்துப்பிடித்து, எண்ணிப் பார்த்து செலவு செய்தேன்.
என் திருமணத்துக்கு முக்கியமாக இரண்டு பேர் வரவேண்டும் என்று விரும்பினேன் - எதிர்பார்த்தேன்.
அந்த இரண்டு பேர் பாரதிராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும்.
தனக்குப் படப்பிடிப்பு இருக்கிறது என்றும், திருமணத்திற்கு வர இயலாது என்றும் பாரதி சொல்லிவிட்டார்.
எஸ்.பி.பி.யிடம், "நீ கட்டாயம் வரவேண்டும்'' என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், "நீ வராவிட்டால், நம் நட்பு பொய் என்றாகிவிடும். அவசியம் வா. உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்'' என்றும் சொல்லிவிட்டேன்.