search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூமா குரேஷி"

    காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த ஹூமா குரேஷி ரஜினிகாந்த்தும், ரஞ்சித்தும் தமிழ் கற்றுக் கொடுத்ததாக கூறினார். #HumaQureshi
    காலா படத்தில் ரஜினியின் காதலியாக வந்து கவர்ந்தவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்துப் பொண்ணு நான். அப்பா சலீம் குரேஷி டெல்லியில் நிறைய ரெஸ்டாரன்ட்களை நடத்திட்டிருக்கார். அம்மா அமீனா குரேஷி குடும்பத்தலைவி. 2008ல் படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்கணும்ங்கிற கனவோட மும்பை வந்தேன். விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். 2012ல் அனுராக் காஷ்யப் இயக்கத்தில ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’ படத்துல் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டாங்க. கூடவே நிறைய இந்திய சினிமா விருதுகளையும் அந்தப் படம் வாங்குச்சு. எனக்கும் பிலிம் பேரின் ‘சிறந்த புதுமுக நடிகை’ விருது கிடைச்சுச்சு. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரைக்கும் என்னோட முதல் படம் ‘வொயிட்’. இந்த மலையாளப் படத்தில் மம்மூட்டி சாரோட சேர்ந்து நடிச்சேன். ‘வைசிராய்ஸ் ஹவுஸ்’ங்கிற ஆங்கிலப் படத்திலும் நடிச்சிருக்கேன்.”



    சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?

    சமையல், டிராவல் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேயுமே போக நேரம் கிடைக்கலைனா பீச்சுக்குப் போவேன். ‘காலா’ படத்தோட சில காட்சிகளை சென்னையில எடுத்தப்போ, அடிக்கடி பீச்சுக்குப் போயிட்டு வர்றதை வழக்கமா வெச்சிருந்தேன்.

    மொழி என்னைக்குமே நடிப்புக்குத் தடையா இருந்ததில்லை. ரஞ்சித் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்தாங்க. மம்மூட்டி சாருடன் வேலை பார்க்கும்போது, அவர் எனக்கு மலையாளம் கத்துக்கொடுத்தார். நிறைய மொழிகளைக் கத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பதான் சரிவர உணர்ச்சிகளைத் திரையில் வெளிப்படுத்த முடியும்.

    இந்தியில் ஒரு நடிகைன்னா தோல் நிறத்துல ஆரம்பிச்சு உயரம் வரைக்கும் ‘இப்படித்தான் இருக்கணும்’னு நிறைய விதிமுறைகள் இருக்கு. ஆனா, தமிழ் சினிமா அப்படி இல்லை. நிஜ கதாபாத்திரங்களைத் திரையில காட்டணும்னு நெனைக்கிறாங்க. அதனாலதான் வர்த்தக நோக்கத்தையும் தாண்டி, தென்னிந்திய சினிமா ஒரு படி மேல இருக்கு. அந்த வகையில் நயன்தாரா ரொம்பப் பிடிக்கும். #HumaQureshi

    காலா படத்தில் ரஜினிக்கு காதலியாக நடித்த ஹூமா குரேஷி தொலைக்காட்சியில் குழந்தை களுக்கான விவாத நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிய ஒப்புக் கொண்டுள்ளார். #HumaQureshi
    சமீபத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு காதலியாக நடித்த ஹூமா குரேஷி தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான விவாத நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிய ஒப்புக் கொண்டுள்ளார்.

    ஜீ தொலைக்காட்சி நடத்திவரும் இந்தியாஸ் பெஸ்ட் ட்ரீம்பஸ் என்ற விவாத நிகழ்ச்சி 2016லிருந்து வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இதன் 3வது சீசனில் விவேக் ஓபராய் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஓமங் குமார் ஆகியோருடன் இணைந்து அவர் பங்கேற்கிறார்.

    இதுகுறித்து ஹுமா குரேஷி கூறும்போது ’குழந்தைகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் நம்பமுடியாத அளவுக்கு ஊக்கம் அளிக்கின்றன. இளம் குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்கள் முன்னேறவும் உதவுகின்றன. இந்த அற்புதமான நிகழ்ச்சியில் அவர்களுடன் நிகழ்ச்சியில் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

    ஹுமா குரேஷி 2012ல் திரையுலகில் அடியெடுத்துவைத்து ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் காலா படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக நடித்த பிறகே தமிழ் திரையுலகிற்கு இவர் அறிமுகமானார். 71 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு திரையுலகில் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக இவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #HumaQureshi
    மூத்த நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேச வேண்டும் என்று காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஹூமா குரேஷி கூறியுள்ளார். #HumaQureshi
    தமிழில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஹூமா குரேஷி. இந்தி திரையுலகில் பிரபல நடிகையான இவரிடம் செய்தியாளர்கள், ஹாலிவுட்டில் புகழ் பெற்ற #மீடு பிரசாரம் (#MeToo) பாலிவுட்டிற்கு இன்னும் வரவில்லை என நீங்கள் மனவருத்தம் அடைந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த குரேஷி, அது நடக்க போவதில்லை (இந்தி திரையுலகம்). ஹாலிவுட்டில் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய பல நடிகைகள் இதுபற்றி பேசியுள்ளனர்.

    அதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவிலும் இதுபோல் நடைபெற வேண்டும் என உண்மையில் நான் நம்புகிறேன். அதற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்.

    ஆனால் இது திரை துறையில் நடைபெற வேண்டும் என்று மட்டும் நான் உணரவில்லை. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இது நடைபெற வேண்டும் என கூறியுள்ளார்.



    பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள நிலையில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர்கள் பேச முற்படுவதில்லை. திரைப்படங்களில் நடிப்பவர்களை நாம் எப்படி காண்கிறோம்? என்றும் யோசிக்க வேண்டும். இது வீட்டில் இருந்தே தொடங்குகிறது.

    ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் பற்றி கூற முன்வருகிறார் எனில் அவரது நடத்தையில் குறை காணும் முயற்சியை நாம் தொடங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
    காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி நடித்திருக்கும் 2 நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி, வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்க படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #HumaQuereshi
    காலாவில் ரஜினியின் காதலியாக நடித்து இருப்பவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. படத்தில் 40 வயது பெண்ணாக வருகிறார். மும்பையை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக வந்து ரஜினிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    காலா படத்தை தொடர்ந்து தென் இந்திய மொழிகளில் ஹூமாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ் படங்களில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெங்கடேஷ், நாகசைதன்யா இணைந்து நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஒன்றில் வெங்கடேஷுக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார். 



    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஹூமா குரோஷி விரைவில் தமிழில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HumaQuereshi
    ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படத்தில் நடித்துள்ள நாயகிகளுள் ஒருவரான ஹூமா குரேஷி, அவரும் பாலியல் தொல்லையை சந்தித்ததாக கூறியிருக்கிறார். #HumaQureshi
    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `காலா'. மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷியும் நடித்திருக்கிறார். 

    பிரான்சில் நடந்து வரும் 71-வது கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு நடிகை ஹூமா குரேஷி பெண்களுக்கு பாலியல் தொல்லை பற்றிய #MeToo இயக்கம், கருத்து சுதந்திரம், இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி அவரது சொந்த அனுபவங்களை பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    "இந்தியாவிலும், உலகின் பல இடங்களிலும், பெண்கள் துன்புறுத்துதலுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு எதிரான அமைப்புகளும் தற்போது உருவாகிவிட்டது. இந்தியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபடுகின்றனர். 



    ஒரு பெண் சத்தமாக கத்துகிறாள் என்றால், அவள் உதவியை கேட்கிறாள் என்று அர்த்தம். அதற்காக அவளை தவறாக சித்தரிப்பது தவறானது, அவளுக்கு உதவவே, அவளை காப்பாற்றவே நாம் முன்வர வேண்டும். நமது நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

    இந்த மாதிரியான சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன. இதற்கு சட்டங்கள் மட்டும் உதவ முடியாது, நாம் நேரிடையாக களத்தில் இறங்க வேண்டும். மாற்றம் ஆழ்ந்ததாகவும், தன்னார்வமாகவும் இருக்க வேண்டும். 

    பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறையிலும் உள்ளது. நானும் அதை சந்தித்து உள்ளேன் என்று கூறினார். #HumaQureshi #Cannes71 #Cannes2018

    ×