என் மலர்
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தில் சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடிக்க இருக்கிறார்.
கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான `சிவலிங்கா' போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
18-19-ஆம் நூற்றாண்டு பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் புதிய படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை `த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் சார்பில் தற்போது அதர்வா - நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 20 லட்சம் பார்வையாளர்களை பெற்றது.

இந்நிலையில், கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஏ மாதவ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அரசியலில் ஈடுபட இருப்பது போல பேசி வரும் ரஜினிகாந்த் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. இதுதொடர்பாக தினமும் பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பு சார்பில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மை எரிக்கும் போராட்டம் நடந்தது. இதனால் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய இந்து சத்யசேனா என்ற அமைப்பின் தலைவர் வசந்தகுமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்தார். அந்த கோரிக்கை மனுவில் ரஜினிகாந்த் வீட்டிற்கு மட்டுமல்லாமல் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

600-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே...’ என்ற பாடல் எழுதியதின் மூலம் பிரபலமானவர், பாடலாசிரியர் நா.காமராசன். ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது...’, ‘தங்கமகன்’ படத்தில் ‘அடுக்கு மல்லியே...’, பாலுமகேந்திரா டைரக்டு செய்த ‘மறுபடியும்’ படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு...’ உள்பட 600-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதி இருந்தார்.
ஏராளமான புதுக்கவிதைகளை எழுதி, பல விருதுகளை பெற்று உள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவை கவிஞராக பதவி வகித்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதையும் பெற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே நா.காமராசன் உடல்நலக்குறைவாக இருந்தார். நேற்று இரவு அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 9 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருடைய இறுதி சடங்கு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
மரணம் அடைந்த நா.காமராசனுக்கு வயது 75. அவருடைய சொந்த ஊர் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமம் ஆகும். பல வருடங்களாக சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

`அவதார்' இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து `டெர்மினேட்டர்' படத்தின் ஆறாவது பாகத்தில் தான் இணையவிருப்பதாக அர்னால்டு தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், தற்போது `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வருகிறார். `அவதார்' படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த ஐந்து பாகங்களை தற்போது இயக்கி வருகிறார்.
`அவதார்' படத்தை இயக்கும் அதேவேளையில், டெர்மினேட்டர் படத்தின் அடுத்த பாகத்தின் மூலம் அர்னால்டுடன் மீண்டும் இணைய இருக்கிறார். முன்னதாக `டெர்மினேட்டர்' படத்தின் முதல் இரு பாகங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி தயாரித்திருந்தார். இதையடுத்து அடுத்த மூன்று பாகங்களும் வெளியாகியுள்ள நிலையில், `டெர்மினேட்டர்' படத்தின் ஆறாவது பாகம் தற்போது தயாராக உள்ளது.
இதில் கடைசியாக வெளியான, `டெர்மினேட்டர் ஜெனிசிஸ்' அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், `டெர்மினேட்டர்' படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அர்னால்டு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அர்னால்டு இதுகுறித்து தெரிவித்த போது, நான் மீண்டும் வருகிறேன். அவரிடம் (ஜேம்ஸ் கேமரானிடம்) இருக்கும் சில வித்தியாசமான, புதுமையான யோசனைகளுடன் `டெர்மினேட்டர்' படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று தெரிவித்தார்.
`டெர்மினேட்டர்' படத்தின் ஆறாவது பாகத்தை `டெட்பூல்' படத்தை இயக்கிய ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் டிம் மில்லர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள் என நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி முன்னணி அரசு பதவியேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் முதல்வர் விஜயனுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த ஓராண்டாக நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஓராண்டுகள் நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள். இதை கேரள மக்களுடன் நான் மகிழ்ச்சியை பங்கெடுத்துக் கொள்கிறேன். மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக அண்டை மாநிலங்களுடன் நல்ல ஒத்துழைப்பை அளிக்கும் விதமாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தனது வாழ்த்து செய்தியில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்று புதிய அரசுகள் பொறுப்பேற்றன. இதில், கேரளா முதல்வருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா - ஜீவா திருமணம், சொந்த ஊரில் சீரும் சிறப்புமாக, அதே சமயம் எளிமையாக நடந்தது.

திருமணம், தன் இசை வாழ்வுக்கு இடைïறாக இருக்கும் என்று கருதி, நீண்ட காலமாக திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்த இளையராஜா, முடிவில் தாயாரின் விருப்பத்தை தட்ட முடியாமல் திருமணத்துக்கு சம்மதித்தார்.
திருமணநாளை நினைவு கூர்கிறார், இளையராஜா:
நாதசுரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் தெருமுனையில் இருந்து தொடங்கி, வீடு வரை வந்தது. மாப்பிள்ளை (அதாவது நான்) சிறுவயதில் விளையாடிய தெருவில், கழுத்தில் மாலையுடன் வந்தார்!
இரண்டு நாற்காலிகளைப் போட்டு, பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்காரச் சொன்னார்கள். அதன்படி அவர்களும் உட்கார்ந்தார்கள்.
அம்மா, அண்ணன், மதனி, அவர்கள் குழந்தைகள், அத்தான், அக்கா, மனைவியின் தம்பிகள், பாஸ்கர், அவர் மனைவி சுசீலா, தம்பி அமர், அவன் நண்பன் ராஜேந்திரன் ஆகியோர் சூழ்ந்து நின்றார்கள்.
மற்றும் என் நண்பர் என்ஜினீயர் எம்.சுப்பிரமணி, தேவாரம் ராமராஜ், கோம்பை நண்பர்கள், பள்ளித்தோழன் மைத்துனன் ஜெயகரன், அவனுடைய குடும்பத்தார் குழுமியிருந்தார்கள்.
முகூர்த்த நேரம் நெருங்கியது. "...ம்... தாலியைக் கொண்டு வாங்கப்பா!'' என்று ஒருவர் குரல் கொடுக்க, ஒரு தட்டில் தாலி வந்தது. அதைப் பெரியவர்கள் தொட்டு ஆசி வழங்க, "தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுங்கப்பா'' என்று ஒரு குரல் கேட்டது.
தாலியை என் கையில் கொடுத்தார்கள். "கெட்டி மேளம்... கெட்டி மேளம்'' என்று யாரோ முழங்க, கெட்டி மேளம் முழங்கியது. தாலியைக் கட்டினேன். பின்னால் நின்றிருந்த சுப்பிரமணியனின் மனைவி, ராமராஜின் மனைவி, மற்ற பெண்கள், தாலியின் மற்ற முடிச்சுகளைப் போட்டார்கள். பூ தூவினார்கள்.
"மாலை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று சொல்ல, மாலை மாற்றிக்கொண்டோம்.
பிறகு ஊர்ப் பெரியவர்கள் பேசினார்கள். வழக்கம் போலவே, "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'' - என்று அவர்கள் கூறியபோது, நான், பாஸ்கர், தோழன் ஜெயகரன், சுப்பிரமணியன், ராமராஜ் எல்லோரும் சிரித்து விட்டோம். ஏனென்றால், நாங்கள் போகும் கல்யாண வீடுகளில் எல்லாம், இதையேதான் பேச்சாளர்கள் பேசுவார்கள். அதுபற்றி கிண்டல் செய்வோம்.
அதே அனுபவம் எனக்கும் நேரிட்டதால், எங்களை அறியாமல் சிரிப்பு வந்தது.
மாலையில், மதுரையில் இருந்து வந்த இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.
அன்றைக்கே சாந்தி முகூர்த்தம்!
ஆம்; முதல் இரவு.
முதல் இரவு, முதல் இரவுதான்!
மறுநாள், சென்னையில் இருந்து நாங்கள் வந்திருந்த டாக்சியில், குடும்பத்தாருடன் சுருளிதீர்த்தம் சென்று நீராடிவிட்டு வந்தோம்.
மாலையே சென்னை திரும்புவதாக இருந்தது.
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு, அண்ணன் பாவலரிடமும் விடைபெற்றுக்கொண்டு, மாலை 6 மணிக்கு பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டோம். மறுநாள் காலை 6 மணி அளவில், சென்னைக்கு வந்து சேர்ந்து, வீட்டை அடைந்தோம்.
காலையில் குளித்து, டிபன் சாப்பிட்டு விட்டு, ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் வீட்டுக்குச் சென்று, ஜி.கே.வி. அண்ணன், அண்ணி, ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றோம். திரும்பும் வழியில் சாயி லாட்ஜ் சென்று தன்ராஜ் மாஸ்டர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.
அம்மாவுக்கு சமையல் பாரம் குறைந்தது. அண்ணியும், ஜீவாவும் அதை பார்த்துக்கொண்டார்கள்.
அடுத்த நாள் முதல் என் வழக்கமான பணிகள் தொடங்கின. கர்நாடக சங்கீதம், ஜோசப்பிடம் மேற்கத்திய இசை பாடம் ஆகியவற்றை கற்பது தொடர்ந்தது.
காலையில் நான் குளிப்பதற்கு வெந்நீர் கலந்து வைக்குமாறு ஜீவாவிடம் அம்மா கூறினார்கள்.
அதன்படி வெந்நீர் வைத்தாள். நான் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றிக்கொண்டதும், "போ! போய் முதுகு தேய்த்து விடு!'' என்று ஜீவாவிடம் அம்மா கூறினார்கள்.
இந்த மாதிரி காட்சிகளை கிராமங்களிலும், சிறு ஊர்களிலும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.
"வேண்டாம்'' என்று சொன்னேன்.
அம்மா, "பரவாயில்லை. தேய்த்து விடு'' என்று சொன்னார்கள்.
ஜீவா ஒரு சொம்பு வெந்நீர் ஊற்றி முதுகு தேய்த்து விட்டாள்.
மேற்கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அம்மாவோ, ஜீவாவோ இதுபற்றி என்ன நினைப்பார்கள் என்று நான்
எண்ணிப்பார்க்கவில்லை.''மேற்கண்டவாறு இளையராஜா குறிப்பிட்டார்.
கங்கை அமரன் திருமணம்
இளையராஜாவின் திருமணத்துக்குப்பின், அவர் தம்பி கங்கை அமரன் திருமணம் நடந்தது.
மணமகள் பெயர் கலா. தந்தை எஸ்.எஸ்.பி.லிங்கம், பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர்.
கங்கை அமரன் - கலா திருமணம் மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் சிறப்பாக நடந்தது. வரவேற்பு, உட்லண்ட்ஸ் ஓட்டலில்
நடந்தது.வரவேற்புக்கு அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி, மற்ற அமைச்சர்கள், பிரமுகர்கள் வந்திருந்து
வாழ்த்தினார்கள்.

காமெடி நடிகர் ஒருவர் நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் நுழைத்து மாட்டிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட காமெடி நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக இருந்த இரண்டெழுத்து காமெடி நடிகர் தற்போது தன் வசம் நிறைய படங்களை தன்வசம் வைத்துக் கொண்டு கல்லா கட்டி வருகிறார்.
அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்கென்று ஓட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை அவருக்கு சௌகரியமாக இல்லையாம். இதனால், தன்னுடைய உதவியாளரிடம் அந்த அறையை மாற்றுமாறு சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஓட்டலுக்கு திரும்பியவர், எப்போதும்போல் தனது அறைக் கதவை திறந்தாராம். உள்ளே பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். நிறைய பெண்கள் அவருடைய அறையில் படுத்துக் கிடந்தார்களாம். என்னடா வம்பா போச்சு என்று அதிர்ந்தவர் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாராம்.
அதன்பிறகுதான், அவரது மூளையில் தனது உதவியாளரிடம் அறையை மாற்றச் சொன்னது ஞாபகத்துக்கு வந்ததாம். அறையை மாற்றிய விபரத்தை தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று உதவியாளரிடம் அந்த காமெடி நடிகர் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில், அந்த அறையில் இருந்த பெண்கள், ஆண்கள் என எல்லோரும் அந்த காமெடி நடிகரை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தனராம்.
இதையடுத்து, அந்த காமெடி நடிகர் நடந்த விவரங்களை அவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்க, அதன்பிறகே அந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாம்.

சீனு ராமசாமியும் சசிகுமாரும் விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி.
இந்நிலையில், சமீபத்தில் சீனுராமசாமி, இயக்குனரும் நடிகருமான சசிகுமாரை சந்தித்துள்ளார். அவரிடம் ஒரு கதையையும் கூறியுள்ளாராம். அதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சீனுராமசாமி கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

சசிகுமாருக்கு சீனு ராமசாமி சொன்னது புதிய கதையா? அல்லது அவர் எடுத்து வரும் மாமனிதன் படத்தின் கதையா? என்பது தெரியவில்லை. ஒருவேளை ‘மாமனிதன்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் சசிகுமாரையும் நடிக்க வைக்க சீனுராமசாமி எதுவும் திட்டமிட்டிருக்கிறாரா? என்பது குறித்து தெரியவில்லை. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பலாம்.

சத்யா நடிகர் சிபிராஜ் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதற்கு அவர் காரணமும் கூறியுள்ளார்.
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் சிபிராஜ் முத்தக்காட்சி ஒன்றில் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். படத்தில் லிப் லாக் முத்தக்காட்சி ஒன்று தேவையானதாக இருந்ததாம். சிபிராஜிடம் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் முடியாது என்று கூறிவிட்டாராம்.

இயக்குனரும் அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும், அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதற்கு சிபிராஜ் கூறிய காரணம், என்னுடைய மகன் அந்த காட்சியை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதுதானாம்.
இப்படம் வருகிற ஜுன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தனர்
சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய் மற்றும் இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஊட்டி கோர்ட்டில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி ஊட்டி கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார்.
தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி, சீதா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வீர வம்சம்’ படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.
தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி ஆகிய மூன்று பேரும் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றுகூடி அந்த ஊர் கோயில் திருவிழாவை நடத்துகிறார்கள். ஊர் திருவிழாவில் கிடா சண்டையும் இடம்பெறுகிறது. கிடா சண்டையில் வெற்றி பெறுவதை கௌரவமாக நினைப்பவர்கள் அவர்கள்.
அப்படி நடக்கும் கிடா சண்டையில் ராதாரவியின் கிடாவும், வாகை சந்திரசேகரின் கிடாவும் மோதுகின்றன. அதில், வாகை சந்திரசேகரின் கிடா வெற்றிவாகை சூடுகிறது. இதனால் அவமானமடைந்த ராதாரவி தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், அந்த ஊரே கலவரமாகிறது. இதில், நிழல்கள் ரவி கொல்லப்படுகிறார். நிழல்கள் ரவி கொல்லப்பட்டதால் அவருடைய மனைவியான சீதா தனது மகனை அழைத்துக்கொண்டு அந்த ஊரைவிட்டே வெளியேறுகிறார்.

அதன்பிறகு கதை 18 ஆண்டுகளுக்கு பிறகு நகர்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஊர் மிகவும் வறட்சியாக மாறியிருக்கிறது. ஊர் கோவில் மூடப்பட்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக கோவில் திருவிழாவும் நடைபெறாமல் இருக்கிறது. கிராமத்தின் வறட்சிக்கு கோவில் திருவிழாவை நடத்தாததுதான் காரணம் என்று நினைத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவை நடத்த முன் வருகிறார்கள்.
இதற்காக வாகை சந்திரசேகரிடம் சென்று முறையிடுகிறார்கள். அவரோ, கோவிலை திறந்தால் ராதாரவியின் குடும்பத்தார் பிரச்சினைக்கு வருவார்கள். அதனால் முதலில் அவர்களிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என்று கூறி அனுப்புகிறார். ஆனால், ராதாரவியின் மனைவியான வடிவுக்கரசியோ அந்த கோவிலை திறக்க அனுமதிக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக கூறுகிறார்.
இதற்கிடையில், ஊரைவிட்டு வெளியேறிய சீதாவின் மகனான நாயகன் செல்வாவும், வாகை சந்திரசேகரின் பேத்தியான நாயகி அனிதாவும் காதலித்து வருகிறார்கள். மறுபுறம் கோவில் திருவிழாவை எப்படியாவது நடத்தவேண்டும் என்று ஊர்க்காரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அப்போது, ஊர்க்காரர்களிடம் வடிவுக்கரசி மீண்டும் கிடா சண்டை நடத்துமாறும், அதில் வாகை சந்திரசேகரின் கிடா வெற்றி பெற்றால் ஊர் திருவிழாவை நடத்த சம்மதிப்பதாகவும், அவருடைய கிடா தோற்றுவிட்டால் வாகை சந்திரசேகர் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார்.
இதற்கு வாகை சந்திரசேகரும் ஒப்புக் கொள்கிறார். அதன்பிறகு, அந்த கிடா சண்டையில் யாருடைய கிடா வெற்றி பெற்றது? கோவில் திருவிழாவை நடத்தி கிராமத்தின் வறட்சியை போக்கினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இப்படத்தில் ஏராளம். அவர்கள் எல்லாம் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையில் நேர்த்தியில்லாதது இவர்களது நடிப்பை ரசிக்க முடியாமல் செய்துவிட்டது.

வடிவுக்கரசி தனது வீர வம்சத்துக்குண்டான ஆக்ரோஷமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பழைய வில்லியான வடிவுக்கரசியை மீண்டும் பார்க்க முடிகிறது. சீதா பாசமுள்ள அம்மாவாக பளிச்சிடுகிறார்.
நாயகனான செல்வாவுக்கு முதல் படம் என்பதால், அவரிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி அனிதாவுக்கும் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. சில காட்சிகள் வந்தாலும் அதிலும் தனது திறமையை நிரூபிக்க தவறியிருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. அந்த சமுதாயத்தின் பெருமையை இப்படத்தில் சொல்லியிருந்தாலும், முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகளை அமைத்திருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அதேபோல், கதைக்கு தேவையில்லாத காட்சிகளையெல்லாம் புகுத்தி கடைசிவரை கதையே புரியாமல் செய்திருக்கிறார்கள்.
குட்லக் ரவி, கபாலீஸ்வர் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘வீர வம்சம்’ வீரமில்லை.

மனைவிகள் மிரட்டுவதால் இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள் என்று கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தெரிவித்திருக்கிறார்.
இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறிய அவர்...
“இந்தி நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த நடிகர்களை அவர்களுடைய மனைவிமார்கள் மிரட்டி வைத்திருப்பதுதான் என்று கேள்விப்படுகிறேன். அவர்களிடம் உங்கள் கணவர்கள் எனக்கு தேவை இல்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனக்கு தங்கமான கணவர் இருக்கிறார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் என் தேவைகள் அனைத்தையும் முழுமையாக, திருப்திகரமாக நிறைவேற்றுகிறார். எனக்கு யாருடைய புருஷனும் தேவை இல்லை. எனக்கு நடிக்க வேண்டும். அவ்வளவு தான். நான் சேர்ந்து பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களிடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை.
என்றாலும், ஷாருக்கானின் ‘ரபீஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று அழைத்தார்கள். ராங் நம்பரை அழைத்து விட்டார்களோ என்று முதலில் நினைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்து ஷாருக்கான் என்னுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.