என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாகியிருக்கும் 'ஏன் இந்த மயக்கம்' படத்தின் முன்னோட்டம்.
    பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக 'ஏன் இந்த மயக்கம்' உருவாகியிருக்கிறது. நாயகி டெல்லா, "மானாட மயிலாட" வின்னர் சொர்ணா, கிருஷ்ணா என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

    இப்படத்தை ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் எம்.அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார். ஷக்தி வசந்த பிரபு இயக்கியுள்ளார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். முற்றிலும் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, பாண்டிச்சேரி, ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழு நீள பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

    ஒளிப்பதிவு - கே.பி.வேல், இசை - சித்தார்த் பாபு, பாடல்கள்  - ஏகாதசி, கருணா, த்ரேதா ரோஹினி, எடிட்டிங் - பீட்டர் பாபியா, ஆர்ட் -  ராகுல், நடனம் - விமல், ஸ்டண்ட் மாஸ்டர் - மகேஷ்.

    படம் பற்றி இயக்குநர் ஷக்தி வசந்தபிரபு பேசும் போது,

    "இன்று உலகம் சுருங்கிவிட்டது. உள்ளங்கையில் உலகத் தொடர்பு சாத்தியமாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் மட்டுமல்ல தீமைகளும் விளைகின்றன. படிக்கிற வயதில் பிள்ளைகள் சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கி தங்கள் நேரத்தை விரயமாக்குவதுடன் தகாத செயல்களில் இறங்கி, தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிற விபரீதமும் நடக்கிறது. அப்படிப்பட்ட விபரீதங்கள் பற்றி எடுத்துச் சொல்லி பெற்றோர்களை எச்சரிக்கிற ஒரு படமாகத்தான் இந்த 'ஏன் இந்த மயக்கம்' படம்  உருவாகியுள்ளது" என்கிறார் இயக்குநர்.

    "வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன தப்பு செய்தாலும்  வெளியே தெரியாது என்கிற எண்ணம் உள்ளது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்று எச்சரிக்கிற படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன செயல்பாடுகளில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வோடு எச்சரிக்கை உணர்வும் பெற வேண்டும் என்கிற நோக்கில் படம் உருவாகியுள்ளது" என்கிறார் இயக்குநர்.

    இப்படம் ஜூலை 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    அமைச்சர்களுடன் மோதல் விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும் என்று நடிகர் விஷால் கூறினார்.
    விஷால் நடித்துள்ள புதிய படம் ‘துப்பறிவாளன்’. பிரசன்னா, பாக்யராஜ், சிம்ரன், வினய், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மிஷ்கின் டைரக்டு செய்துள்ளார்.

    இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் விஷால், நடிகை சிம்ரன், டைரக்டர்கள் மிஷ்கின், சுசீந்திரன், பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, நந்தகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் சிம்ரனின் ரசிகன் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திருட்டு வி.சி.டியை ஒழிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருட்டு வி.சி.டி.க்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுவிட்டோம். இன்னும் 2 வாரத்தில் அவர்கள் யார்? என்பதை வெளியிடுவோம். தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் ஆக்கப்பூர்வமான பணிகளில் தொடர்ந்து ஈடுபடும்.

    நான் காமராஜரைப்போல் இருப்பதாக சொன்னார்கள். நேர்மையாக இருப்பேன். ஆனால் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றால் லட்சுமிகரமான பெண் வருத்தப்படுவார்.

    அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இது குறையும் என்று எதிர்பார்க்கிறேன். கமல்ஹாசன் தெளிவானவர். விஷயங்கள் தெரிந்தவர். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் நடிகர் சங்கம் அவருக்கு துணையாக இருக்கும்.

    ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் யாருக்கு ஆதரவு? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இருவரும் அரசியலுக்கு வருவதுபற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்கள் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு? என்று சொல்கிறேன்.

    சினிமாவுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தால் திரையுலகுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி இருக்கிறோம். வருகிற 24-ந்தேதி இதுகுறித்து அரசு குழுவினருடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. அப்போது எங்களுக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், உணவு பண்டங்கள் கட்டணம், பார்க்கிங் கட்டணம் என்று படம் பார்க்க வருபவர்கள் அதிகம் செலவிட வேண்டி உள்ளது. கட்டணங்களை குறைத்து ரசிகர்கள் அதிகமாக படம் பார்க்க வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு விஷால் கூறினார்.
    ரன்பீர் கபூர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஜக்கா ஜசூஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ள நடிகை பிதிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    பிரபல இந்தி நடிகை பிதிஷா (வயது 30). அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். பாடகியாகவும் இருந்து வந்தார்.

    ரன்பீர் கபூர், கத்ரினா கைப் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ‘ஜக்கா ஜசூஸ்’ என்ற இந்தி படத்தில் பிதிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    பிதிஷாவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நிஷித் ஜா என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி இருவரும் மும்பையில் வசித்து வந்தனர்.

    சமீபத்தில் அவர்கள் இருவரும் அரியானா மாநிலம் குர்கானில் குடியேறினர். பிதிஷாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    மேலும் நிஷித் ஜாவின் குடும்பத்தினர் பிதிஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிதிஷா விவாகரத்து பெற்று கணவரிடம் இருந்து பிரிந்து செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் பிதிஷாவின் தந்தை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பிதிஷா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் பிதிஷா வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது வீட்டினுள் மின்விசிறியில் பிதிஷா தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நடிகை பிதிஷாவின் தந்தை, நிஷித் ஜா மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நிஷித் ஜாவை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வைரமுத்து வரிகளில் 'கலாம் ஆன்தம்' என்ற வீடியோ பாடல் வெளியாக இருக்கிறது.
    மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 'கலாம் ஆன்தம்' என்ற வீடியோ பாடல் வெளியிடப்படுகிறது. இந்த பாடலை 'கவிப்பேரரசு' வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், வசந்த் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

    இந்த 'கலாம் ஆன்தம்'-ஐ 'மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்'-ன் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இப்பாடலின் டியூன் மற்றும் படமாக்கப்பட்ட இடம் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் என்றும், இந்தியாவின் அரிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும் பொழுது தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும் 'கவிப்பேரரசு' வைரமுத்து கூறியுள்ளார்.

    'கலாம் ஆன்தம்' மிற்கு கருவாக இருந்தவர் 'கிரீன் மேன் ஆஃப் இந்தியா' என்று அழைக்கப்படும் டாக்டர்.கே.அப்துல் கனி ஆவார். கலாம் அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரின் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜூலை 27 அன்று நடக்கவிருக்கும் இதன் திறப்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நினைவு மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார்.

    அப்துல் கலாம் அவர்களின் பேரன்களான ஏ.பி.ஜே.ஷேக் சலீம், ஏ.பி.ஜே.ஷேக் தாவூத், ஜி.கே.மெய்தீன் மற்றும் திரு.அப்துல் கனி இந்த நினைவஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளனர்.
    போதைப் பொருள் விவகாரத்தில் பூரி ஜெகன்னாத்தை தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு முன்பு நடிகை சார்மி இன்று ஆஜராகிறார்.
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் கும்பலுடன் தெலுங்குபட முன்னணி நடிகர்கள் நவ்தீப், தருண் நடிகைகள் சார்மி, முமைத்கான் இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பான விசாரணைக்கு அவர்கள் 12 பேரும் 19-ந்தேதி (நேற்று) முதல் 28-ந்தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு முன்பு நேரில் ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    அதன் பேரில் இயக்குனர் பூரி ஜெகன்னாத் நேற்று சிறப்பு விசாரணைக்குழு முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பூரி ஜெகன்னாத் தனக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறினார். விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்காமல் சென்றுவிட்டார். இன்று(வியாழக்கிழமை) சிறப்பு விசாரணைக்குழு முன்பு நடிகை சார்மி விசாரணைக்கு ஆஜராகிறார்.

    21-ந் தேதி முமைத்கான், 22-ந் தேதி சுப்பராஜு, 23-ந் தேதி ஷியாம் கே நாயுடு, 24-ந் தேதி ரவிதேஜா, 25-ந் தேதி ஜின்னா, 26-ந் தேதி நவ்தீப், 27-ந் தேதி தருண், 28-ந் தேதி நந்து, 29-ந் தேதி தனிஷ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

    இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு மேலும் பல திரையுலக பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன் என்று நேற்று நடைபெற்ற `துப்பறிவாளன்' படத்தின் பத்தரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசினார்.
    `துப்பறிவாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொது செயலாளருமான நடிகர் விஷால், இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் அரோல் கொரொலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் விஷால் பேசியதாவது,

    "நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது `துப்பறிவாளன்' என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். `துப்பறிவாளன்' திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு `துப்பறிவாளன்', `பாண்டியநாடு' படத்தை விட முக்கியமான படமாகும்.

    நானும், பிரசன்னாவும், சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது. நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்.

    நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன், ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன். ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 100-வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்".

    இவ்வாறு விஷால் தெரிவித்தார்.
    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து நடித்தார்.
    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து
    நடித்தார்."குலதய்வம்'' வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்ப்பட உலகில் நிரந்தரமான ஓர் இடத்தை விஜயகுமாரி தேடிக்கொண்டார்.

    ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களில் இருந்து விஜயகுமாரிக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் ஏவி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தினால், மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்தது.

    இதை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், விஜயகுமாரியை அழைத்து, "உனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதற்கு, நாங்கள் போட்ட ஒப்பந்தம் தடையாக இருக்கக்கூடாது. எனவே அதை ரத்து செய்து விடுகிறோம். இனி நீ எல்லாப் படங்களிலும் நடிக்கலாம். நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று கூறினார்.

    நெகிழ்ந்து போன விஜயகுமாரி, அவர் காலைத்தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.

    ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'' படத்தில், ஜெமினிகணேசனின் தங்கையாக நடித்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அதே படத்தை, இந்தியிலும் ஜெமினி எடுத்தது. தமிழில் நடித்த அதே வேடத்தில், இந்தியிலும் விஜயகுமாரி நடித்தார். இதுவும் பெரிய வெற்றிப்படம்.

    விஜயகுமாரிக்கு இந்திப் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அவர் கவனம் முழுவதும், தமிழில் சிறந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அவர் இந்திப்பட உலகின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் நடித்த ஒரே இந்திப்படம், "ராஜ்திலக்'' (வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்திப்பதிப்பு) மட்டுமே.

    புத்தா பிலிம்ஸ் தயாரித்த "பதிபக்தி''யில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம் ஆகியோருடன் விஜயகுமாரியும் நடித்தார். இதில், விஜயகுமாரிக்கு, ஜெமினிகணேசனின் முறைப்பெண் வேடம்.

    பீம்சிங் டைரக்ட் செய்த இந்தப்படம் மெகா ஹிட் படமாகும்.

    கதை-வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், முதல் முதலாக டைரக்ட் செய்த படம் "கல்யாணப்பரிசு.'' தமிழ்ப்பட உலகில், ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த படம் இது.

    ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில், விஜயகுமாரியும், சரோஜாதேவியும் அக்கா - தங்கையாக நடித்தனர். விஜயகுமாரிக்காக சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்வார்.

    திருப்பங்கள் நிறைந்த இந்த முக்கோணக் காதல் கதையை, ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார், ஸ்ரீதர். 9-4-1959-ல் வெளிவந்து வெள்ளி விழா கண்ட இப்படத்தின் மூலம், விஜயகுமாரி மேலும் புகழ் பெற்றார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர். மனோகர், பண்டரிபாய் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பாடல்கள், படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தபோதிலும் படம் வெற்றி பெறவில்லை.

    இந்தக் காலக்கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து, விஜயகுமாரி பல நாடகங்களிலும் நடித்தார்.

    அதுபற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நாங்கள் நடித்த நாடகங்களில் கலைஞர் எழுதிய "மணி மகுடம்'' பெரும் புகழ் பெற்றது. மற்றும் "தென்பாண்டிய வீரன்'', "புதுவெள்ளம்'', "முதலாளி'', "முத்து மண்டபம்'' போன்ற நாடகங்களை நாங்கள் நடத்தினோம்.

    நாடகங்களில் நடித்துக் கொண்டே "மனைவியே மனிதனின் மாணிக்கம்'', "கைதியின் காதலி'', "தங்க மனசு தங்கம்'' போன்ற படங்களிலும் நடித்தேன்.

    அந்த சமயத்தில் நாங்கள் "தங்கரத்தினம்'' என்ற படத்தை தயாரித்தோம். இந்தப்படத்தில் நான் ஆதிதிராவிடப் பெண்ணாக நடித்தேன். சாதியில் ஏற்ற தாழ்வு கிடையாது, எல்லோருடைய உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எல்லோரும் மனிதசாதி'' என்ற தத்துவத்தை சொல்லும்

    கதை.இந்த படத்தில், அப்போது பழனியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் அண்ணா பேசுவது, கலைஞர் பேசுவது முதலான காட்சிகள் இடம் பெற்றன. மக்கள் இதை மிகவும் வரவேற்றார்கள்.

    இந்தப்படம் முடியும்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன்.

    அதனால் நாடகங்களில் நடிக்க முடியவில்லை. எனவே, "மணிமகுடம்'' நாடகத்தில் எனக்கு பதிலாக நடிக்க கோவையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவரால் கலைஞர் எழுதிய வசனங்களை பேச முடியவில்லை. ஆகவே மணிமகுடம் நாடகத்திற்குப் பதிலாக "தென்பாண்டிய வீரன்'' என்ற நாடகத்தை நடத்தினோம்.

    அந்தப் புது நடிகை யார் தெரியுமா? பிற்காலத்தில் மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறந்த "செம்மீன்'' பட நாயகி ஷீலாதான்!

    மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு டாக்டர் வாதிராஜ×ம் அவருடைய மனைவியும்தான் பெயர் சூட்டினார்கள். என் கணவரின் முதல் எழுத்தான "ர'', என்னுடைய பெயரின் முதல் எழுத்தான "வி'' இந்த இரண்டையும் சேர்த்து ரவிக்குமார் என்ற பெயர் வைத்தார்கள்.

    குழந்தை பிறப்பதற்கு முன் வீமண்ண முதலி கார்டனில் குடியிருந்தேன். இது எனக்கு சொந்த வீடு. குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் அவருடைய முதல் மனைவி பங்கஜம் அக்காளுடன் இருந்த தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    அந்த காம்பவுண்டுக்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து இருந்தன. அதில் ஒரு வீட்டில், என் கணவரின் முதல் மனைவி பங்கஜம் அக்காள் அவர்களுடைய குழந்தைகளும், மற்றொரு வீட்டில் என் கணவரின் தங்கையும் அவருடைய கணவர் டி.வி.நாராயணசாமியும் அடுத்த வீட்டில் நானும் என் மகனும் இருந்தோம். அப்பா, பாட்டி, அக்காள், தங்கை, அக்காளுடைய மகள் ஆகியோரும் என்னுடன் இருந்தார்கள்.

    நாங்கள் தனித்தனி வீட்டில் இருந்தாலும், எல்லோரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல், ஒற்றுமையாக - சந்தோஷமாக இருந்தோம். அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனதில்  இன்னும் நிழலாடுகின்றன.

    தைப்பொங்கல் வந்துவிட்டால் எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டுவிடும். என் கணவரும், நானும் பொங்கல் அன்று காலை 6 மணிக்கு போர்ட்டிகோவில் வந்து நிற்போம். நாடக கம்பெனியில் உள்ளவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள், ரசிகர் மன்றத்தினர், நரிக்குறவர்கள் கூடியிருப்பார்கள். ஒருபக்கம் நாதஸ்வரம் ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும்.

    பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகஆட்டம் என்று வீடே கலகலப்பாக இருக்கும், பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுச்

    செல்வார்கள்.இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத இனிய நிகழ்ச்சியாகும்.

    அறிஞர் அண்ணா அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவை எங்கள் வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஒரு வெள்ளித்தட்டில் 50 தங்கக் காசுகளை வைத்து அண்ணா அவர்களிடம் என் கணவர் கொடுத்தார்.

    எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாடர்ன் தியேட்டர் படம் "குமுதம்'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். எனக்கு ஜோடி என் கணவர். இதில் ரங்காராவ், பி.எஸ்.சரோஜா, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம்.

    சுப்பையா டைரக்ட் செய்ய, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார்.

    இந்தப் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். காதலனுக்காகவும், காதலன் மனைவிக்காகவும் கோர்டடில் என் தந்தையை எதிர்த்து வாதாடி ஜெயித்து, தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதை.

    இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முதல்தர நாயகி அந்தஸ்தை எனக்குத் தேடித்தந்தது.

    - இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.

    தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இன்று “வயதுக்கு வருவதற்கு முன்பே நாம் அரசியல்வாதிதான்” என பதிலடி கொடுக்கும் விதமாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது.

    தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் நேற்று, ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு கருத்தை பதிவிட்டுடார்.

    மற்றொரு டுவீட்டில், ‘‘இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை’’ என கவிதை நடையில் எழுதியுள்ள அவர் ‘‘முடிவெடுத்தால் யாம் முதல்வர்’’ என்றும் கூறியுள்ளார். இதனால் கமல்ஹாசன் அரசியலில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும், விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    கமல்ஹாசனின் கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று கூறியிருப்பதாவது:- 

    A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்

    *இந்தி திணிப்புக்கு எதிராக என்றைக்கு குரல் கொடுத்தேனோ அன்றே நான் அரசியல்வாதி தான்.

    *ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறு, அரசியலுக்கு வா எனக் சொல்பவர்கள், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்

    * ஊழல் குறித்த ஆதாரங்களை இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்க மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    *டிஜிட்டல் யுகம் என்பதால் ஊழல் குறித்த ஆதாரங்களை டிஜிட்டலாக பதிவு செய்யவேண்டும்.

    *ஊழல் குறித்த விவரங்களை www.tn.gov.in.ministerslist-இல் அனுப்பலாம்.

    *ஊழல் குறித்த இணையதளத்தில் மக்களே குரல் கொடுக்க வேண்டும். 

    *எல்லா துறைகளுக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள், என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

    *கேள்வி கேட்பவர்களை கைது செய்யும் அளவுக்கு தென்னகத்தில் சிறைகள் இல்லை.

    *துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

    *ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் மறந்திருந்தால்  நினைவு படுத்த மக்கள் இருக்கிறார்கள்.

    *சினிமாவுக்கு வரிவிலக்கு பெற என்னைப்போல் சிலரை தவிர மற்றவர்கள் பயந்து லஞ்சத்துக்கு உடைந்தை.

    இவ்வாறு கூறினார். 

    இன்று வெளியிட்ட அறிக்கையில் பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜாவை, கமல்ஹாசன் எலும்பு வல்லுநர் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். சமீப காலமாக கமல்ஹாசனுக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அவரது இந்த அறிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விக்ரமின் மகனான துருவ் செய்திருக்கும் டப் மேஷ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விக்ரமை மிஞ்ச யாராலும் முடியாது என்னுமளவுக்கு அவரது படங்கள் இருக்கும். விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' மற்றும் விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படங்களில் நடித்து வருகிறார்.

    விக்ரமின் மகனான துருவ் விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக முன்னதாக செய்திகள் வந்தன. துருவ்வும் அதற்கேற்றாற் போல் தனது டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

    பெரும்பாலும் ஆங்கில படங்களின் பிரபல வசனங்களை டப்மாஷ் செய்திருக்கும் துருவ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரபல வசனங்களான "ஐயா.. என் பேரு மாணிக்கம்.... எனக்கு இன்னொரு பேரு இருக்கு..", "போடா... ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..", ப்ரெண்டு லவ் மேட்டரு, ஃபீல் ஆய்ப்டாப்புல, ஹாஃப் சாப்டா கூல் ஆய்ருவாப்புல... உள்ளிட்ட வசனங்களை டப்மாஷ் செய்திருக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனினும் துருவ் விக்ரம் படத்தில் நடிக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹிப்-ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்துள்ள அனந்த்ராம் சவாலான வேடங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
    ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகியிருப்பவர் அனந்த்ராம். ‘ஹிப் ஹாப் தமிழா ஆதியின்’ தம்பியாக நடித்த இவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

    “நடிகனாக வேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைபட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி ஸ்கூல், லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டேன். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல வாய்ப்பை தேடி வந்தேன்.

    நண்பர்கள் மூலமாக ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதி அண்ணாவின் தம்பியாக நடித்தேன். முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. விவேக் சார் போன்ற அனுபவமிக்க கலைஞருக்கு நான் மகனாக நடித்தது பெருமகிழ்ச்சி. இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இருந்ததால் சண்டை பயிற்சி மற்றும் பாக்ஸிங் கற்றுக் கொண்டேன். படத்தைப் பார்த்தவர்கள் என்னுடைய நடிப்பை பாராட்டி பேசியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதற்காக ஆதி அண்ணாவிற்கு நன்றிச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    நல்ல கதாபாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும், ஹீரோவாகவும் சாதிக்க ஆசை. எல்லா வகையான சவாலான கேரக்டர்களிலும் நடிக்கும் சிறந்த நடிகராகவே இருக்க விரும்புகிறேன்.

    தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். தமிழிலும் நடிக்கிறேன்” என்றார்.

    அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தில் இணைந்து நடித்துள்ள காஜல் அகர்வால் - அக்‌ஷரா ஹாசன் இருவரும் படப்பிடிப்பின் போது நட்பு பாராட்டாமலேயே இருந்திருப்பதாக கூறப்படுகிறது.
    அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ திரைக்கு வர தயாராகிறது. சிவா இயக்கியுள்ள இந்த படம் ஹாலிவுட் தொழில் நுட்பத்துடன் வெளிநாடுகளில் படமாகி இருக்கிறது.

    இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அஜீத்தின் மனைவி வேடத்தில் வருகிறார். இந்த படத்தில் கமலின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இருவரும் ஒரே படத்தில் நடித்தாலும் நட்பை வளர்க்கும் அளவுக்கு நெருங்கி பழகவில்லை.

    காஜல் அகர்வாலும், அக்‌ஷரா ஹாசனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் குறைவாகவே உள்ளன. எனவே இருவரும் படப்பிடிப்பின் போது ஒரே இடத்தில் சந்தித்த நாட்கள் மிககுறைவு. அப்படியே, சந்தித்தாலும் ‘ஹாய்’ சொல்வதுடன் நிறுத்திக் கொண்டனர். கடைசிநாள் படப்பிடிப்பின் போது இருவரும் செல்பி எடுத்துக் கொண்டு விடைபெற்றனர். வழக்கமாக ஒரு படத்தில் 2 நடிகைகள் சேர்ந்து நடித்தால் தோழிகள் ஆகி விடுவார்கள். இதில் பிரபல நடிகைகள் 2 பேர் நடித்தும் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாதது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழில் வளர்ந்து வரும் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரே வீட்டுக்கு `ஹவுஸ் ஓனர்' ஆக முயற்சி செய்யும் கதையை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.
    நடிகையும், இயக்குநருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பல படங்களில் நடித்திருந்தாலும் அவ்வப்போது படங்கைளை இயக்கியும் வருகிறார். அவரது இயக்கத்தில் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளன.

    இந்நிலையில், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கவிருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.

    தனது வித்தியாசமான படைப்புகளால் பெரிதும் பாராட்டப்படும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படைப்பான `ஹவுஸ் ஓனர்'
    ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் எனக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது,

    "நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால், குறிப்பிடப்பட்ட அந்த படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டுவிட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு ஹிந்தி திரைப்படம் பார்க்க நேரிட்டது. அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன்.

    சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. ஆனால் அந்த படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான, அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதை  நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்ல போகிறேன். ஒளிப்பதிவாளர் ஜோனான் டி ஜான் ஒளிப்பதிவு செய்ய, அசோக் செல்வன் ஐஸ்வர்யா ராஜேஷ் என்கிற திறமையான கலைஞர்கள் நாயகன் நாயகியாக நடிக்க இருக்கும் `ஹவுஸ் ஓனர்' படம் விரைவில் துவங்க உள்ளது என்றார்.
    ×