search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள்"

    • டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் வழக்கு விசாரணை.
    • நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

    ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.

    டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • 12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஆசாம் மாநிலம், தோலாய் பகுதியில் உள்ள லோக்நாத்பூரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், மர்ம நபர்களிடம் இருந்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்தில் இருந்து,12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த கடத்தல் போதைப் பொருட்கள் தோல் பைகள் மற்றும் சோப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அண்டை மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது.

    அசாம் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    • மக்களவை தேர்தலுக்காக மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்
    • போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது.

    தேர்தலுக்கு தேர்தல் மதுரை எய்ம்ஸ் வரும் என்றும் தேர்தலுக்குப் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவை தேர்தலுக்காகவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அப்பணிகள் நடைபெறாது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர், "இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்காக பாஜக தமிழகம் மீது பழி போட வேண்டாம். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது.

    தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

    மேலும், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது என்று குற்றம் சாட்டிய அமைச்சர், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்றும் பாஜகவில் உள்ளவர்கள் போதைப்பொருள் கடத்துவதை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இன்றைய திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
    • போதை விற்பனை, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஒரு தலை குனிவு.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் போதை பொருள் கைப்பற்றுவது மிகவும் அதிகமாகி விட்டது. டாஸ்மாக் கடைமூலம் மக்களைப் போதைக்கு அடிமையாக்கபட்ட நிலையில், இந்தப் போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக வாங்கக்கூடிய ஒரு பொருளாக மாறி இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

    நமது முதலமைச்சர் பேசும்போதெல்லாம் "போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவதே எனது லட்சியம், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்றெல்லாம் தேர்தலுக்கு முன்னால் பேசுவார். 

    இப்பொழுது அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார். இதைப் பார்க்கும்பொழுது, சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இன்றைய திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் என ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருமே போதைக்கு அடிமை ஆகி, இந்தியாவிலேயே நான்காவது அதிகமாக போதைப் பொருட்கள் விற்பனையாகின்ற ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் குறிப்பாக இளைஞர்களைக் குறி வைத்து, நடத்தப்படும் இந்தப் போதை விற்பனை, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஒரு தலை குனிவு.

    மேலும், திமுக கட்சியைச் சார்ந்த, ஜவஹர் சாதிக் (திரைப்பட தயாரிப்பாளர்) தற்பொழுது 2000 கோடி போதை பொருட்களைக் கடத்தி இருப்பது, மிகவும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதைத் தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. இனி எந்த ஒரு இடத்திலும் போதைப் பொருட்கள் கிடைக்காத

    நிலையை உருவாக்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனையென இவை அனைத்தும் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டியது,

    தற்போதைய அரசின் தலையாயக் கடமை. இல்லையென்றால், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்", என்பது போல் ஆகிவிடும். எனவே உடனடியாக முதலமைச்சரும் தமிழக அரசும் இதைப் பற்றிக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது
    • ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    "செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.

    உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

    நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்

    மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 71.89 கிலோ கோகைன் கைப்பற்றப்பட்டது.
    • இதில் 39.1 கிலோ கோகைன் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தீரஜ் பிரசாத் சாஹு மற்றும் அமீ யாக்னிக் ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக சர்வேயில் கிடைத்த விவரங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:

    சமீப காலமாக குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் அதிகாரிகள் 93,691 கிலோ போதைப் பொருள், 2,229 லிட்டர் திரவ மருந்துகள் மற்றும் 93,763 மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்தியாவில் 17,35,000 ஆண்களும், 1,85,000 பெண்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.

    குஜராத்தில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 27,842.639 கிலோ அபின் அடிப்படையிலான மருந்துகள், 59,365.983 கிலோ கஞ்சா அடிப்படையிலான மருந்துகள், 75.115 கிலோ கோகோயின், 3,789.143 கிலோ சைக்கோட்ரோபிக் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் கைப்பற்றப்பட்ட 71.89 கிலோ கோகைனில் 39.1 கிலோ குஜராத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,36,000 ஆண்கள் கஞ்சா அடிப்படையிலான போதைப் பொருட்களுக்கும், 7,91,000 பேர் அபின் சார்ந்த மருந்துகளுக்கும், 6,59,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர்.

    இதேபோல், பெண்களில் 1,49,000 பேர் கஞ்சா அடிப்படையிலான போதைப்பொருட்களுக்கும், 1,000 பேர் ஓபியாய்டுகளுக்கும், 33,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல்.

    இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் சென்னையில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை பெரம்பூரில் அக்பர் அலி என்பவரிடம் இருந்து 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை வரலட்சுமி விளக்கம்.
    • கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

    போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.

    ஆனால், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    கேரளாவின் விழிஞ்சத்தில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு எங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
    • 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
    • கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது.

     ஈரோடு:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் ஒரு சில மளிகை கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அளுக்குளி கொள்ளுமேடு காலனி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சென்று சோதனை நடத்தி னர்.

    அப்போது கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடையில் இருந்து 10 ஆன்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல்.
    • இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு உள்ளூர் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பஞ்சாபைச் சேர்ந்த மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. அவர்கள் தர்ன் தரனைச் சேர்ந்த ஜக்தீப் சிங் (21), சதீந்தர்பால் சிங் மற்றும் அமிர்தசரஸைச் சேர்ந்த சன்னி குமார் (22) என அடையாளம் காணப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையின்போது இரண்டு இளைஞர்கள் மீது மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக சம்பா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பெனம் தோஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் அவர், ரங்கனூர் பேருந்து நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராம்கர் செக்டரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கடத்தல்காரர்களில் ஒருவரும் காயமடைந்தனர்.

    இவர்களுக்கு உள்ளூர் மருத்துவ வசதியில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் இருந்து, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ரவுண்டுகள், ₹ 93,200 மதிப்புள்ள பணம் மற்றும் நான்கு விலையுயர்ந்த மொபைல் போன்கள் பறிமுதுல் செய்யப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ×