search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6
    X
    ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6

    கெடு முடிய ஆறு மாதங்கள் இருக்கு - அதற்குள் வினியோகத்தை துவங்கிய ஹோன்டா

    இந்தியாவில் புதிய புகை விதிகள் அமலாக இன்னும் ஆறு மாத காலம் இருக்கும் நிலையில், ஹோன்டா தனது பி.எஸ். 6 வாகனங்களை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது.



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டரை இந்தியாவில் வினியோகம் செய்ய துவங்கியுள்ளது. புதிய ஆக்டிவா 125 பி.எஸ். 6 வாகனங்கள் பண்டிகை காலம் முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 மாடல்கள் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் ஹோன்டா தனது ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. பி.எஸ். 6 விதிகளை பூர்த்தி செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெருமளவு மாசை குறைக்க வேண்டும்.

    ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6

    சில நிறுவனங்கள் ஏப்ரல் 2020-க்குள் வாகனங்களை அப்டேட் செய்ய போதிய நேரம் இருக்காது என கூறிய நிலையில், சில வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஹோன்டா தனது ஆக்டிவா 125 பி.எஸ். 6 மாடலை அறிமுகம் செய்தது.

    பின் அறிமுகம் செய்த மூன்று மாதங்களில் ஸ்கூட்டரை வினியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6 விலை ரூ. 67,490 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது இந்தியாவில் அறிமுகமான முதல் பி.எஸ். 6 இருசக்கர வாகனம் ஆகும்.
    Next Story
    ×