search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    X
    ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா

    இந்தியாவில் ஒகினாவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வாங்குவோருக்கு அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.



    ஒகினாவா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதன்படி ஒகினாவா எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் துவங்கி அக்டோபர் 31, 2019 வரை சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய சலுகைகள் நாடு முழுக்க ஒகினாவா விற்பனையகங்களில் வழங்கப்படுகிறது.

    ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    பண்டிகை கால சலுகைகளில் ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு வாகன விலையில் இருந்து ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர இருபது வெற்றியாளர்களுக்கு எலெக்டிரானிக் பொருட்களை வெல்ல முடியும். இதில் ஏர் கூலர்கள், எல்.இ.டி. தொலைக்காட்சிகள், மைக்ரோவேவ் மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்கள் அடங்கும்.

    ஒரு வெற்றியாளருக்கு வெளிநாட்டு சுற்றுலா செல்லும் வாய்ப்பு பரிசாக வழங்கப்படுகிறது. வெற்றியாளர்களின் பெயர்கள் நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சலுகைகளின் மூலம் வாகன விற்பனையை ஊக்குவிக்க ஒகினாவா திட்டமிட்டுள்ளது.

    மத்திய அரசு எலெக்டிரானிக் வாகனங்களுக்கான வரியை குறைத்ததை தொடர்ந்து ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் தனது வாகன விலையை குறைப்பதாக தெரிவித்தது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை மாத தவணையில் வாங்குவோருக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×