என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
எம்.வி. அகுஸ்டா எப் 3. ஆர்.சி. அறிமுகம்
Byமாலை மலர்30 Jun 2019 9:51 AM GMT (Updated: 30 Jun 2019 9:51 AM GMT)
இந்தியாவில் எம்.வி. அகுஸ்டா எப் 3. ஆர்.சி. மோட்டார்சைக்கிள் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
இத்தாலி நாட்டை சேர்ந்த ரேஸ் மாடல் மோட்டார்சைக்கிளைத் தயாரிக்கும் எம்.வி. அகுஸ்டா நிறுவனம் இந்தியாவில் புதிதாக எப்3.ஆர்.சி. மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ததது. இந்தியாவில் இதன் விலை ரூ.22 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் எம்.வி. அகுஸ்டா மொத்தம் ஆறு மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. லிமிடெட் எடிஷன் வடிவில் கிடைக்கும் இந்த மாடல் மோட்டார்சைக்கிள் மூன்று வண்ணக் கலவைகளை ஒருங்கே கொண்டிருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 798 சி.சி. திறன் கொண்ட 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 153 பி.ஹெச்.பி. திறனை 13,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 88 என்.எம். டார்க் செயல்திறனை 10,600 ஆர்.பி.எம்.மிலும் வெளிப்படுத்தக் கூடியது.
புதிய எப்3 ஆர்.சி. மாடலில் எஸ்.சி. பிராஜெக்ட் எக்ஸாஸ்ட், அனோடைஸ்டு அலுமினியம் ரியர் வியூ மிரர், அலுமினியம் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர், பைபர் கிளாஸ் சீட் கவர், ஸ்பெஷல் எடிஷன் சான்று உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
Next Story
×