தொழில்நுட்பம்
5ஜி

இந்திய சந்தையில் இத்தனை சதவீதம் 5ஜி ஸ்மார்ட்போன்களா?

Published On 2020-05-10 05:45 GMT   |   Update On 2020-05-09 08:38 GMT
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதற்குள் இத்தனை சதவீத பங்குகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் இன்னும் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. எனினும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட துவங்கிவிட்டன. 

மேலும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முதல் காலாண்டில் மட்டும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் 2 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2 சதவீத 5ஜி ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு ஸ்மார்ட்போன் சந்தையில் அதீத வளர்ச்சி பெற்றதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் 30 சதவீதம் பங்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து விவோ மற்றும் சாம்சங் உள்ளிட்டவை முறையே 17 மற்றும் 16 சதவீத பங்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.



உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகத்தில் 78 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. திடீர் வளர்ச்சிக்கு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்த முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ரியல்மி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 119 சதவீதம் மற்றும் 83 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 
Tags:    

Similar News