தொழில்நுட்பம்

பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

Published On 2019-03-24 07:00 GMT   |   Update On 2019-03-24 07:00 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதில் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #OnePlus7



ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் 360-டிகிரி வீடியோ லீக் ஆகியுள்ளது. ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் 7 நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் மூன்று: பிளாக், பர்ப்பிள் மற்றும் கிரே நிறங்களில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் சரியாக அறியப்படவில்லை என்றாலும், இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவதால் ஆல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.



இத்துடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படும் என்றும், புகைப்படங்களை எடுக்க 40 எம்.பி. + 20 எம்.பி. மற்றும் 5 எம்.பி. என மூன்று வித கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

மெமரியை பொருத்தவரை ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போனினை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்படலாம். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News