தொழில்நுட்பம்

இந்தியாவில் அறிமுகமான ஒரு வாரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்த செயலி

Published On 2019-03-05 09:13 GMT   |   Update On 2019-03-05 09:13 GMT
உலக சந்தையில் பிரபல மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கும் ஸ்பாடிஃபை இந்தியாவில் அறிமுகமான ஒரு வாரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். #Spotify



ஸ்பாடிஃபை டெக்னாலஜி உலகின் அதிக பிரபலமான கட்டண மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கிறது. இந்தியாவில் சில தினங்களுக்கு முன் இந்த சேவை துவங்கப்பட்டது.

இந்நிலையில், சேவை துவங்கிய ஒரு வாரத்திற்குள் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்பாடிஃபை சேவையை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதில் கட்டணம் மற்றும் இலவச சேவையும் அடங்கும். கடந்த வாரம் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 26) ஸ்பாடிஃபை இந்தியாவிலும் துவங்கப்பட்டது.

இந்தியாவில் ஸ்பாடிஃபை பயன்படுத்த விரும்புவோர் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் சேவையை பயன்படுத்தலாம். இலவசமாக கிடைக்கும் சேவையில் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும். கட்டண முறையில் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் இருக்காது.



கட்டண சேவையின் படி பயனர்கள் மாதம் ரூ.119 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்பாடிஃபை நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவனம் வருவாய் ரீதியில் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டென்சென்ட் நிறுவனத்தின் காணா செயலியை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் எட்டு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்பாடிஃபை சேவையை உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 20.7 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 

இதுதவிர உலகம் முழுக்க ஸ்பாடிஃபை சேவையை சுமார் 9.6 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் ஸ்பாடிஃபை சேவைக்கு அமேசானின் பிரைம் மியூசிக், ஆல்ஃபாபெட் கூகுள் பிளே மியூசிக் மற்றும் சியோமியின் ஹங்காமா உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News