தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ பார்க்க புது வசதி

Published On 2018-11-18 07:56 GMT   |   Update On 2018-11-18 07:56 GMT
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வசதியை வழங்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Messenger



ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் க்ரூப் சாட் மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும்.

ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் ஃபேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது. புது அம்சம் மெசஞ்சரின் கோட்பேஸ் மூலம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒரே வீடியோவை பயனர் தனது நண்பருடன் ஒன்றிணைந்து பார்க்க முடியும். இதேபோன்று ஒரே வீடியோவை பற்றி சாட் செய்ய முடியும். 

இவ்வாறு வீடியோ பார்க்கும் போது அனைவரும் வீடியோவை இயக்க முடியும். மெசஞ்சரின் புது அம்சம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.



ஒன்றாக வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் எங்கிருந்து வீடியோக்களை தேட முடியும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஃபேஸ்புக்கில் இருந்து யு.ஆர்.எல். முகவரியை பதிவு செய்ய முடியும் என்றும், மெசஞ்சர் வழியாக வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி மெசேஜ் கம்போஸ் செய்யும் அல்லது டிஸ்கவர் டேப் மூலம் புது வீடியோக்களை பிரவுஸ் செய்ய முடியும் என்றும், யூடியூப் போன்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வீடியோக்களை பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோக்களை ஒன்றிணைந்து பார்க்கச் செய்வதன் மூலம், மெசஞ்சர் தளத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும். வீடியோ பார்க்கும் சேவையில், விளம்பர வீடியோக்கள், திரைப்பட டிரெயிலர்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். தற்சமயம் வரை இந்த அம்சம் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News