தொழில்நுட்பம்

இந்திய ஆஃப்லைன் தளங்களில் புது ஐபேட் ப்ரோ விற்பனை

Published On 2018-11-17 07:20 GMT   |   Update On 2018-11-17 07:20 GMT
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புது ஐபேட் ப்ரோ மாடல்கள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது. #ipadpro2018



ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த 2018 ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் இந்திய ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையாளர்களிடம் ஆஃப்லைன் விற்பனை நடைபெற்று வருகிறது. 

எனினும், நவம்பர் 23ம் தேதி முதல் பெரும்பாலான விற்பனை மையங்களில் புது ஐபேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அடுத்த வாரம் முதல் பிளிப்கார்ட், அமேசான் துவங்கி பல்வேறு விற்பனையகங்களில் புது ஐபேட் ப்ரோ மாடல்கள் கிடைக்கும்.

புது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 31ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வின் போது புதிய ஐபேட் ப்ரோ மாடல்களின் இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 



2018 ஐபேட் ப்ரோ இந்திய விலை மற்றும் சலுகைகள்:

ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி வேரின்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 11 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் விலை ரூ.71,900 முதல் துவங்குகிறது. இதேபோன்று 12.9 இன்ச் மாடல் விலை ரூ.89,900 முதல் துவங்குகிறது.

இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ.10,990 என்றும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் விலை முறையே ரூ.7,500 மற்றும் ரூ.9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூ.15,900 மற்றும் ரூ.17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



2018 ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

புதிய 2018 ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே பேனல்களை கொண்டுள்ளது. புது ஐபேட் ப்ரோ 5.9 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. 2018 ஐபேட் ப்ரோ மாடல்களில் முதல் முறையாக நியூரல் என்ஜின் கொண்ட A12X பயோனிக் சிப்செட் மற்றும் அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.

இதனுடன் ட்ரூ டெப்த் கேமரா மூலம் இயங்கும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் மாடல்களை போன்றே புது ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் போர்டிரெயிட் மற்றும் லேன்ட்ஸ்கேப் மோட்களில் வேலை செய்கிறது. மேலும் புது ஐபேட் ப்ரோ மாடல்களில் ஐபோன் X போன்ற ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் கொண்டுள்ளது.

மேலும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்ட முதல் ஐ.ஓ.எஸ். சாதனமாக புது ஐபேட் ப்ரோ மாடல்கள் இருக்கின்றன. இவை சார்ஜிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கனெக்டிவிட்டி வசதிகளை வழங்குகிறது. புது ஐபேட் ப்ரோ மாடல்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது. 

புது ஐபேட் மாடல்களில் 12 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி 10 மணி நேர பேக்கப் வழங்குவதோடு, 18 வாட் பவர் அடாப்டர் ஒன்றும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News